இந்தியர்கள் பாரம்பரிய முதலீட்டு நடைமுறைகளில் இருந்து மியூச்சுவல் ஃபண்டுகள், ஈடிஎஃப் போன்ற நவீன முதலீட்டு முறைகளுக்கு படிப்படியாக மாறி வருகின்றனர். இதில் நடப்பாண்டில் ஈக்விட்டி எனப்படும் பங்குச்சந்தை சார்ந்த ஈடிஎஃப்களை விட தங்கம், வெள்ளி சார்ந்த ஈடிஎஃப்களில் அதிக பணம் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
CRISIL-AMFI Factbook 2026 மற்றும் Zerodha Fund House வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நடப்பு நிதி ஆண்டில் ஈடிஎஃப்களில் வந்த மொத்த நிகர முதலீடு 2.07 லட்சம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. இது கடந்த FY21 இல் இருந்த 1.3 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது அதிகம். இதில் தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்களின் பங்கு பிரமிக்க வைக்கும் அளவில் அதிகரித்துள்ளது.

தனியாக பார்க்கும்போது கோல்டு டிஎஃப்களில் 68,868 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஐந்தாண்டு காலமான அதாவது FY21 - FY25 வரை திரண்ட மொத்த முதலீட்டை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். அடுத்ததாக வெள்ளி ஈடிஎஃப்கள் 30,412 கோடி ரூபாயை ஈர்த்துள்ளன.மொத்தமாக தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்கள் இணைந்து 99,280 கோடியை ஈர்த்துள்ளன, மொத்த ஈடிஎஃப் முதலீட்டில் இது 55% ஆகும்.
இதுவே பங்கு சந்தை சார்ந்த ஈக்விட்டி ஈடிஎஃப்கள் 77,780 கோடி ரூபாயை மட்டுமே பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளன. சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார சூழல்கள் தொடர்ந்து தங்கம், வெள்ளியை பாதுகாப்பான முதலீடாகவே வைத்துள்ளன.
ஈரான் போர், பிட்காயின் சரிவு உள்ளிட்ட காரணங்களால் அதிக ஏற்ற இறக்கங்களை சந்திக்க விரும்பாத முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி சார்ந்த ஈடிஎஃப்கள் பக்கம் வந்துள்ளனர். மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குவதால் நீண்ட கால அடிப்படையில் தங்கம் நல்ல லாபம் தரும் அதே போல சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் மற்றும் பிற நவீன தொழில்நுட்பத் துறைகளில் வெள்ளிக்கு ஏற்பட்டுள்ள டிமாண்ட் ஆகியவையே இதற்கு காரணம் ஆகும்.
தற்போது தங்கத்தை நகையாகவோ கட்டிகளாகவோ வாங்குவது நமக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. 10 கிராம் வாங்கவே 1.5 லட்சமாவது தேவை. இதுவே ஈடிஎஃப் எனில் குறைந்த தொகையில் முதலீடு செய்யலாம், எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம், அதாவது சிறுக சிறுக தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யும் வாய்ப்பினை வழங்குகிறது. மேலும் டிஜிட்டல் முறையில் ஈடிஎஃப்களில் முதலீடு செய்வது எளிமையாக உள்ளது, இதை பாதுகாக்க லாக்கர் வைத்திருக்க வேண்டும் என்ற தேவை எல்லாம் இல்லை.
இந்தியாவில் இளைஞர்கள் பலரும் முதலீட்டு சந்தையை நோக்கி வர தொடங்கியுள்ளனர். இவர்கள் டிஜிட்டல்முறையில் அதாவது போன் வாயிலாகவே இருந்த இடத்தில் இருந்தே முதலீடுகளை மேற்கொள்ளவே அதிகம் விரும்புகின்றனர். இவர்களுக்கு ஈடிஎஃப் முதலீடுகள் அதற்கான வாய்ப்பினை தருகின்றன.
இதற்காக கையில் இருக்கும் பணத்தை ஒட்டுமொத்தமாக கோல்டு, சில்வர் ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய கூடாது என்கின்றனர் நிபுணர்கள். நம் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் 20% வரை இவற்றுக்கு ஒதுக்க வேண்டும் என்கின்றனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம் என போர்ட்ஃபோலியோ பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.அவரவர் இலக்குகளுக்கு ஏற்ப பல்வேறு பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வதே புத்திசாலித்தனம் என்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


