கோல்டு ETF, சில்வர் ETF-ல் பெரும் சரிவு.. இனியும் முதலீடு செய்ய வேண்டுமா..?

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் போதும் பெரும்பாலான முதலீடுகள் தங்கம், வெள்ளி மீது திரும்புவது இயல்பு, இதன் மூலம் ஒருவரின் போர்ட்போலியோ தொடர்ந்து லாபத்திலேயே வைத்திருக்க முடியும். ஆனால் கடந்த சில நாட்களாகப் பங்குச்சந்தையும் சரி, தங்கம் - வெள்ளி விலையும் சரி தொடர்ந்து குறைந்து வருகிறது.

இப்படியிருக்கையில் கோல்டு ETF, சில்வர் ETF-ல் முதலீடு செய்வோர் மத்தியில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் எழுந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 750 புள்ளிகளுக்கும் அதிகமாகக் குறைந்து 72,064 புள்ளிகள் வரையில் சரிந்தாலும், வர்த்தகம் முடியும் போது பெரும் சரிவில் இருந்து மீண்டு 242.65 புள்ளிகள் சரிவுடன் 72,529 புள்ளிகளில் முடிந்தது.

கோல்டு ETF, சில்வர் ETF-ல் பெரும் சரிவு.. இனியும் முதலீடு செய்ய வேண்டுமா..?

இதேபோல் ரீடைல் சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 28 ரூபாய் குறைந்து 14,880 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 1 கிராம் 25 ரூபாய் குறைந்து 13,640 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதேவேளையில் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 240 ரூபாயாக உள்ளது.

ஈடிஎப் சந்தையில் பார்க்கும் போது இந்தியாவின் முன்னணி ஈடிஎப்-கள் இன்று ஒரு நாளில் மட்டும் 0.3 முதல் 0.7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஒரு மாத அளவீட்டைப் பார்க்கும் போது பரோடா பிஎன்பி பரிபாஸ் கோல்டு ஈடிஎப் 6.8 சதவீதம் சரிந்துள்ளது, இதேபோல் யூனியன் கோல்டு ஈடிஎப், பந்தன் கோல்டு ஈடிஎப், சாய்ஸ் கோல்டு ஈடிஎப், 360 ஓன் கோல்டு ஈடிஎப், ஆகியவை 6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

மேலும் சில்வர் ஈடிஎப்-கள் இன்று 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவையும், மாதாந்திர அளவில் 7 சதவீதத்திற்கும் அதிகமான சரிவையும் பதிவு செய்துள்ளது.

தங்கம், வெள்ளி விலை சரிவதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளது. சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் உயர்வு, அதிகரிக்கும் பணவீக்கம், பெடரல் ரிசர்வ் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படும் காரணத்தால் முதலீட்டுச் சந்தையில் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது.

இதைத் தாண்டி டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றம், பத்திர சந்தை முதலீட்டில் கிடைக்கும் லாபம் போன்ற காரணிகளும் இதில் அடங்கும். தற்போது முதலீட்டுச் சந்தையில் பல காரணிகளால் கோல்டு ஈடிஎப், சில்வர் ஈடிஎப் பாதிக்கப்படும் வேளையில், தற்போதைய சூழ்நிலையில் ஈடிஎப்-ல் முதலீட்டைத் தொடர வேண்டுமா..?

உங்களுடைய போர்ட்போலியோ பங்குச்சந்தை சார்ந்து அதிகமாக இருந்தால் நீண்ட கால அடிப்படையில் பன்முகத் தன்மை முதலீட்டுக்காக கோல்டு ஈடிஎப்-ல் முதலீடு செய்யலாம். ஆனால் எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பது தான் பெரும் கேள்வி.

ஈரான் போர் துவங்கியதில் இருந்து தங்கம், வெள்ளி தொடர்ந்து சரிவில் இருக்கும் காரணத்தால் உங்கள் போர்ட்போலியோவில் எவ்வளவு தங்கம் சார்ந்த முதலீடு இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதன் பின்பு முதலீட்டை அதிகரிக்கலாம். இதுவே சில்வர் ஈடிஎப் எனில் உலகளவில் தொழிற்துறை முதலீட்டுச் சந்தையின் போக்கின் அடிப்படையில் முதலீடு செய்யவும்.

இதேபோல் கோல்டு ஈடிஎப், சில்வர் ஈடிஎப்-களில் முதலீடு செய்வோர் சந்தையின் ஏற்ற இறக்கத்தை கண்டு உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டாம். இரண்டுமே நீண்ட கால விளையாட்டு என்பதால் காத்திருப்பது அவசியம். சமீபத்தில் கோல்டுமேன் சாக்ஸ் வெளியிட்டுள்ள கணிப்பில் தங்கம் 2027க்குள் ஒரு ட்ராய் அவுன்ஸ் தற்போதைய 4100 டாலர் அளவில் இருந்து 5200 டாலர் வரையில் உயரும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+