தங்கம் Vs வெள்ளி: தற்போதைய சூழலில் எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்?

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக தங்கம், கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு நாளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பு மற்றும் அதன் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்த கடுமையான கருத்துகள், வரவிருக்கும் வட்டி விகித குறைப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பின. இதன் காரணமாக வியாழக்கிழமை அன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்தது. வெள்ளியின் விலையும் ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. மேலும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய உலகின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு சீனாவுக்கான வரி விதிப்பில் 10%ஐ குறைப்பதாக டிரம்ப் அறிவித்தது சந்தையில் எதிரொலித்தது.

தங்கம் Vs வெள்ளி: தற்போதைய சூழலில் எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்?

எம்.சி.எக்ஸ் (MCX) சந்தையில், gold futures ஒரு கிராம் ரூ1,19,125 என்ற விலையில் 1.27 சதவீதம் சரிவுடன் தொடங்கியது. இது முந்தைய நாளின் முடிவில் ரூ/ 1,20,666 ஆக இருந்தது. silver futures ஒரு கிலோ ரூ.1,45,498 ஆக 0.4 சதவீதம் குறைந்து தொடங்கியது. முந்தைய நாளின் முடிவில் இது ரூ1,46,081 ஆக இருந்தது.

இந்தியா புல்லியன் & ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) துணைத் தலைவரும், ஆஸ்பெக்ட் குளோபல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவருமான அக்‌ஷா காம்போஜ், "நாணய வலிமை மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் தணிந்தது போன்ற உலகளாவிய காரணிகள் தொழில்துறை மற்றும் முதலீட்டுத் தேவையை குறைத்ததால், தங்கம் சமீபத்திய உச்ச விலையிலிருந்து சரிந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலைகளிலும் சமீபத்தில் சரிவுகள் ஏற்பட்டன. எனினும், தங்கத்திற்கு வெள்ளியை விட பாதுகாப்பான மற்றும் நிலையான தேவை உள்ளது. வெள்ளியின் எதிர்காலம் தொழில்துறை உலோகங்களின் இயக்கத்தைப் பொறுத்து நிச்சயமற்றதாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.

சந்தை வல்லுநர்களின் கூற்றுப்படி, தங்கம் பாரம்பரியமாகவே ஒரு பாதுகாப்பான முதலீடாக (safe-haven asset) கருதப்படுகிறது. பொருளாதார நிச்சயமற்ற காலங்கள், பணவீக்கம் அல்லது மத்திய வங்கிகள் பணவியல் கொள்கையை தளர்த்தும் போது இதன் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து வந்த தேவை 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையை ஆதரித்தன.

VT மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய உத்தித் தலைவரான ரோஸ் மேக்ஸ்வெல், பத்திர வருவாய்கள் அதிகரித்து, புவிசார் அரசியல் பதட்டங்கள் தணிவதால், தங்கத்தின் குறுகியகால கவர்ச்சி குறைந்துவிட்டதாகக் கருதுகிறார். இதனால், தங்கம் அதன் சாதனை உச்ச விலையிலிருந்து சில லாபப் பதிவுகளைக் கண்டுள்ளது என்கிறார்.

வெள்ளி ஒரு தொழில்துறைப் பொருளாகவும் இருப்பதால், சூரிய ஆற்றல், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகளில் இருந்து வரும் முதலீட்டு உணர்வு மற்றும் தொழில்துறை தேவை இரண்டாலும் அதன் விலை உயர்கிறது என்று மேக்ஸ்வெல் விளக்கினார். "உலகளாவிய உற்பத்தி வலுவடையும் போது, வெள்ளி பெரும்பாலும் தங்கத்தை விட சிறப்பாக செயல்படலாம். இருப்பினும், பொருளாதார மந்தநிலையின் போது, ​​முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்" என்று மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

இரண்டுமே முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கினாலும், எதை வாங்க வேண்டும் என்பதை விட, ஒரு முதலீட்டாளர் தன் போர்ட்ஃபோலியோவில் எவ்வளவு பங்கை ஒதுக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஒவ்வொன்றின் பங்கும் உங்கள் கண்ணோட்டத்தையும் இலக்குகளையும் பொறுத்தது. தங்கம் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது. தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை அல்லது மெதுவான வளர்ச்சியை எதிர்பார்க்கும், நீண்ட கால செல்வப் பாதுகாப்பை நாடும் முதலீட்டாளர்களுக்கு இது சிறந்தது. மறுபுறம், வெள்ளி அதிக ஆபத்தை கொண்டிருந்தாலும், தொழில்துறை தேவை மீண்டால் அதிக லாபம் தரும் திறன் கொண்டது. இது அதிக ஊக வணிகர்களுக்கு ஏற்றது” என்று மேக்ஸ்வெல் கூறுகிறார்.

“விலை குறையும் சூழலில், நீண்ட கால முதலீட்டாளர்கள் சரிவில் வெள்ளியை வாங்கவும், பொருளாதார அதிர்வுகளுக்கு எதிராக தங்கத்தை ஒரு அரணாகவும் பயன்படுத்தலாம். சுருக்கமாக, நிலைத்தன்மைக்கு தங்கத்தையும், வளர்ச்சிக்கு வெள்ளியையும் தேர்வு செய்யுங்கள்” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+