ரிசர்வ் வங்கியின் தங்கம் பத்திர விற்பனை 8-வது சீரிஸ் இன்று தொடங்கவுள்ளது. இந்த விற்பனை ஐந்து நாட்களுக்கு இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க பத்திர விற்பனையில் விலையானது நவம்பர் 29 ஆன இன்று தொடங்கியுள்ளது. இது டிசம்பர் 3 அன்று முடிவடையவுள்ளது.
இந்த பத்திர செட்டில்மெண்ட் டிசம்பர் 7 அன்று இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது சீரிஸ் தொடக்கம்?
இந்த தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவதால் இறையாண்மை தன்மை கொண்ட ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனுடன் கூடவே தங்கத்திற்கு வட்டியும் கிடைக்கும் என்பதால் இன்னும் நல்ல திட்டமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் எட்டாவது சீரீஸ் நவம்பர் 29 அன்று தொடங்கியுள்ளது.
அதிகரிக்கும் ஆர்வம்
இது தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய காலக்கட்டங்களில் டிஜிட்டல் தங்கத்தின் மீது ஆர்வம் கூடிக் கொண்டே தான் செல்கிறது. அப்படி இருக்கையில் இந்த தங்க பத்திரமானது, முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
தற்போதைய காலகட்டத்தில் ஓமிக்ரான் கொரோனா குறித்தான அச்சமும் எழுந்துள்ளது. மேலும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் இந்த கொரோனாவின் தாக்கம் என்பது, பலமடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இது தங்க பத்திரங்களுக்கும் ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிகல் தங்கத்திற்கு மாற்று
தங்க பத்திரங்கள் பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிசிகல் தங்கம் வாங்கும்போது செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டி என்ற பல செலவினங்கள் உண்டு. இவற்றோடு அதனை பாதுகாப்பதும் பெரும் பிரச்சனை தான், ஆனால் அது டிஜிட்டல் வடிவிலோ, பேப்பர் வடிவிலோ இருப்பது இன்னும் பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.
Array
நடப்பு நிதியாண்டின் எட்டாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரம் நவம்பர் 29, 2021 முதல் விற்பனை செய்யப்படும். இதனை வாங்க கடைசி தேதி டிசம்பர் 3, 2021 ஆகும். இதன் வெளியீட்டு தேதி டிசம்பர் 07, 2021 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு?
இந்த தங்க பத்திரங்கள் கிராமுக்கு 4,791 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும்.
எங்கெல்லாம் வாங்கலாம்?
இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். எனினும் வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். அங்கு டிஜிட்டல் வங்கி மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். இங்கு டீமேட் தேவைப்படாது.
என்னென்ன சலுகை?
இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். அவ்வாறு ஆன்லைன் மூலமாக வாங்குபவர்கள் கிராமுக்கு 4,741 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
பிணையமாக வைத்து கடன் பெறலாம்
தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு.
பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினையும் பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு வட்டி?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.
இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
கேபிட்டல் டேக்ஸ்
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை.
ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.
தங்க பத்திரம் பிசிகல் தங்கமாக கிடைக்குமா?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் இது. இந்த தங்க பத்திரங்களுக்கு பதிலாக தங்கமாக வாங்கிக் கொள்ள முடியுமா என்று? இந்த தங்க பத்திரம் முதலீட்டு நோக்கில் உருவாக்க பட்ட ஒரு திட்டம். அதோடு பிசிகல் தங்கத்தின் தேவையை குறைக்கும் பொருட்டு தான் அரசு இதனை அறிவித்தது. ஆக இந்த திட்டத்தில் நாம் பிசிகல் கோல்டாக பெற முடியாது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?



Click it and Unblock the Notifications