ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடக்கம்.. இது நல்ல வாய்ப்பு தான்..!

அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கான முதல் கட்ட அறிவிப்பினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், நம் உணர்வுகளில் கலந்துள்ள, பலருக்கும் பிடித்தமான விலையுயர்ந்த உலோகம். அதோடு நம்பிக்கை, பாரம்பரியம், அன்பு, காதல், இப்படி பலவற்றிற்கு ஏற்ற ஒரு சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக நம் உணர்வுகளில் கலந்துள்ள தங்கம் அந்தஸ்தின் அடையாள சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.

பேப்பர் தங்கத்தில் ஆர்வம்

பேப்பர் தங்கத்தில் ஆர்வம்

இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தினால், நம் மக்கள் தங்களது முதலீடுகளிலும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதிலும் தற்போது நிலவி வரும் கொரோனா காலகட்டத்தில் கடைகளும் இல்லை. அதோடு பிசிகல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி சேதாரம் என்ற செலவினங்கள் உள்ள நிலையில், அது வெறுமனே தங்கமாக அல்லாமல், பேப்பர் தங்களாக வாங்கி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இறையாண்மை தன்மை கொண்ட திட்டம்

இறையாண்மை தன்மை கொண்ட திட்டம்

நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே பல நிபுணர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பேப்பர் தங்கத்தினை ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாக முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர். அதுவும் அது ரிசர்வ் வங்கியின் திட்டம் என்பதால் இறையாண்மை தன்மை கொண்டதாகவும் உள்ளது.

நல்ல முதலீடு

நல்ல முதலீடு

ஆரம்பத்தில் இந்த தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, அரசு அறிவித்த ஒரு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

நல்ல லாபம்

நல்ல லாபம்

தங்கத்தின் மீது ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களுக்கு, இது சரியான திட்டம் என்றே கூறலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த நேரத்தில் அரசின் இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு நல்ல ஆப்சன் தான். இதன் மூலம் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கிடைக்கலாம்.

Array

Array

நடப்பு நிதியாண்டில் முதல் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரம் மே 17 முதல் விற்பனை செய்யப்படும். இதனை வாங்க கடைசி தேதி மே 21, 2021 ஆகும். ஜனவரி 15, 2021 ஆகும். அதன் பிறகு மே 25, 2021 அன்று இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது,

ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்

ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்

இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். அதோடு கொரோனா காலகட்டத்தில் வெளியில் இணையத்தின் மூலமாக இருந்தே இடத்தில் இருந்தே வாங்க முடியும்.

எவ்வளவு வாங்கலாம்?

எவ்வளவு வாங்கலாம்?

பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிணையமாக வைத்து கடன் பெறலாம்

பிணையமாக வைத்து கடன் பெறலாம்

தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன.

எவ்வளவு வட்டி?

எவ்வளவு வட்டி?

இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.

கேபிட்டல் டேக்ஸ்

கேபிட்டல் டேக்ஸ்

தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி இல்லை. ஒரு வேளை உங்களால் எட்டு வருடம் வரை நீடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.

அடுத்த சீரிஸ் எப்போது?

அடுத்த சீரிஸ் எப்போது?

சீரிஸ் 2
சந்தா தேதி மே 24 - மே 28, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜூன் 1, 2021

சீரிஸ் 3
சந்தா தேதி மே 31 - ஜூன் 4, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜூன் 8, 2021

சீரிஸ் 4
சந்தா தேதி ஜூலை 12 - ஜூலை 16, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜூலை 20, 2021

சீரிஸ் 5
சந்தா தேதி ஆகஸ்ட் 09 - ஆகஸ்ட் 13, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஆகஸ்ட் 17, 2021

சீரிஸ் 6
சந்தா தேதி ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 03, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி செப்டம்பர் 07, 2021

தங்க ஆபரணமாக வாங்கி, அதற்கு செய்கூலி, சேதாரம் என செலுத்துவதை விட, இது போன்று அரசின் தங்க பத்திரங்கள் வாங்கி நல்ல லாபத்தினையும், வட்டியுடன் பெறலாம். இது நல்ல வாய்ப்பு தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+