நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது வாங்க சரியான வாய்ப்பு தான்..!

இன்றைய காலகட்டத்தில் தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், பலருக்கும் பிடித்தமான விலையுயர்ந்த உலோகம். அதோடு நம்பிக்கை, பாரம்பரியம், அன்பு, காதல், இப்படி பலவற்றிற்கு ஏற்ற ஒரு சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாதுகாப்பான முதலீட்டு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு தங்கத்தினை அரசே பத்திரமாக வெளியிடுமபோது, இது இன்னும் கூடுதல் அம்சங்கள் நிறைந்த ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் மூன்றாவது சீரீஸ் நாளை தொடங்கவுள்ள்ளது. ஆக தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் தங்கத்தில் ஆர்வம்

டிஜிட்டல் தங்கத்தில் ஆர்வம்

இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தின் மத்தியில், டிஜிட்டல் தங்கத்தின் தேவையானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் தற்போது நிலவி வரும் நெருக்கடியான காலகட்டத்தில் நகை கடைகளும் இல்லை. அதோடு பிசிகல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி சேதாரம் என்ற செலவினங்கள் உள்ள நிலையில், அது வெறுமனே தங்கமாக அல்லாமல், டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இறையாண்மை தன்மை முதலீடு

இறையாண்மை தன்மை முதலீடு

நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே பல நிபுணர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் டிஜிட்டல் தங்கத்தினை ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாக முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர். அதுவும் இது ரிசர்வ் வங்கியின் முதலீட்டு திட்டம் என்பதால் இறையாண்மை தன்மை ஒரு முதலீடாகவும் பார்க்கின்றனர். தற்போது தங்கத்திற்கு மாற்றாக மக்கள் தங்க பத்திரங்களை நாட ஆரம்பித்துள்ளனர்.

நல்ல முதலீடு

நல்ல முதலீடு

ஆரம்பத்தில் அரசின் இந்த தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, ஒரு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

இது நீண்டகால நோக்கில் நல்ல திட்டம்

இது நீண்டகால நோக்கில் நல்ல திட்டம்

தங்கத்தின் மீது ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களுக்கு, இது சரியான திட்டம் என்றே கூறலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த நேரத்தில் அரசின் இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது என்பது, நீண்டகால நோக்கில் நல்ல லாபம் பார்க்க வசதியாக இருக்கும்.

Array

Array

நடப்பு நிதியாண்டில் மூன்றாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரம் மே 31 முதல் விற்பனை செய்யப்படும். இதனை வாங்க கடைசி தேதி ஜூன் 4, 2021 ஆகும். அதன் பிறகு ஜூன் 8, 2021 அன்று இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

விலை எவ்வளவு?

இந்த தங்க பத்திரங்கள் கிராமுக்கு 4,889 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க பத்திரங்கள் 999 தூய தங்கமாகும். பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும்.

எங்கெல்லாம் வாங்கலாம்?

எங்கெல்லாம் வாங்கலாம்?

இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். இதே வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். அங்கு டிஜிட்டல் வங்கி மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.

ஆன்லைனில் சலுகை?

ஆன்லைனில் சலுகை?

அரசின் இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். அவ்வாறு ஆன்லைன் மூலமாக வாங்குபவர்கள் 4839 ரூபாய் செலுத்தினால் போதுமானது.

பிணையமாக வைத்து கடன் பெறலாம்

பிணையமாக வைத்து கடன் பெறலாம்

தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன.

எவ்வளவு வட்டி?

எவ்வளவு வட்டி?

இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.

கேபிட்டல் டேக்ஸ்

கேபிட்டல் டேக்ஸ்

தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.

தங்க பத்திரம் பிசிகல் தங்கமாக கிடைக்குமா?

தங்க பத்திரம் பிசிகல் தங்கமாக கிடைக்குமா?

இல்லை, தங்க பத்திரம் முதலீட்டு நோக்கில் உருவாக்க பட்ட ஒரு திட்டம். அதோடு பிசிகல் தங்கத்தின் தேவையை குறைக்கும் பொருட்டு தான் அரசு இதனை அறிவித்தது. இந்த நிலையில் நாம் பிசிகல் கோல்டாக பெற முடியாது.

அடுத்த சீரிஸ் எப்போது?

அடுத்த சீரிஸ் எப்போது?

சீரிஸ் 4
சந்தா தேதி ஜூலை 12 - ஜூலை 16, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜூலை 20, 2021
சீரிஸ் 5
சந்தா தேதி ஆகஸ்ட் 09 - ஆகஸ்ட் 13, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஆகஸ்ட் 17, 2021
சீரிஸ் 6
சந்தா தேதி ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 03, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி செப்டம்பர் 07, 2021

தங்க ஆபரணமாக வாங்கி, அதற்கு செய்கூலி, சேதாரம் என செலுத்துவதை விட, இது போன்று அரசின் தங்க பத்திரங்கள் வாங்கி நல்ல லாபத்தினையும், வட்டியுடன் பெறலாம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+