உலகளவில் புகழ்பெற்ற முதலீட்டு நிபுணரும் Rich Dad Poor Dad புத்தகத்தின் எழுத்தாளருமான ராபர்ட் கியோசாகி தொடர்ந்து தன்னுடைய ஃபாலோவர்களுக்கு என்ன வாங்க வேண்டும் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை எக்ஸ் பதிவுகள் மூலம் வழங்கி வருகிறார். ராபர்ட் கியோசாகியின் பெரும்பாலான பதிவுகள் அப்படியே நடக்கும் என்பதால் உலக முழுவதும் அவரது பதிவுகள் கவனம் பெறும். அந்த வகையில் தற்போது தங்கம் வாங்குவது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.
ஜூன் மாதத்தில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த 12 வாரங்களில் இல்லாத அளவிற்கு சரிவை கண்டுள்ளது. ஈரான் போர் பதற்றம் தணிந்ததும், முதலீட்டாளர்கள் தங்கத்திற்குப் பதிலாக அமெரிக்க டாலரை நோக்கி மாறியதும் தான் தங்கம் விலை சரிய காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்க வட்டி விகிதங்கள் எதிர் வரும் நாட்களில் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் தங்கம் விலை குறைவிற்கு காரணமாக உள்ளது.

இந்நிலையில் ரிச் டாட் புவர் டாட் (Rich Dad Poor Dad) புத்தகத்தின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ஒரு நல்ல செய்தி: தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. எப்போது மேலும் வாங்கலாம் என்பதை அறிய தொழில்நுட்ப வரைபடங்களை (technical charts) உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன், இன்னும் கூடுதலாக தங்கம் வாங்குவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
"சந்தைப் போக்கு (Trend) தான் உங்கள் நண்பன்!!!!! முன்பு கற்றுக்கொண்ட பாடத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். ஒரு வீட்டின் விலை குறைந்து கொண்டிருப்பதை அறிந்துகொள்வதை போல தான் இது. வீடு விலையில் அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவோம், அந்த பகுதியின் மதிப்பு உயர்ந்துகொண்டிருந்தால், குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு வீட்டை நாம் வாங்க கூடும், அந்த பகுதியின் மதிப்பு சரிந்துகொண்டிருந்தால், குறைந்த விலையில் வீடு கிடைத்தாலும் அதை வாங்காமல் விட்டுவிடலாம் என குறிப்பிட்டுள்ளார்.
தங்கத்தின் விலை குறைந்து வருவதை நான் கவனித்து வருகிறேன். அதற்கான காரணம் என்ன என்பதை நான் அறிய வேண்டும்; பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதாரம் சரிவை சந்தித்துக்கொண்டிருந்தால், நான் தங்கத்தை வாங்காமல் இருக்கலாம். இன்றும் தங்கத்தின் விலை குறைந்துகொண்டே இருக்கிறது. பொருளாதாரம் மீண்டு வருவதை காணும் தருணத்தில், மிக குறைந்த விலையில் தங்கத்தை நான் வாங்குவேன் என தெரிவித்துள்ளார்.
2000-ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் 300 டாலர் என்ற விலையில் நான் வாங்கிய தங்கம் தான் இன்று என்னிடம் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது என தெரிவித்துள்ளார். வாங்கினேன். அதாவது இது தங்கம் வாங்கி வைக்க சிறந்த தருணம் என ராபர்ட் கியோசாகி சுட்டிக்காட்டுகிறார்.
ராபர்ட் கியோசாகி தங்கம் விலை குறைவதை ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறார். ஆனால், அவர் உணர்ச்சிவசப்பட்டு உடனே வாங்குவதற்குப் பதிலாக, சந்தை எப்போது மீண்டும் ஏற்றம் காணும் என்பதற்கான "தொழில்நுட்ப சிக்னல்களுக்காக" (Technical signal) காத்திருப்பதாக தெரிவிக்கிறார். முதலீட்டாளர்கள் விலையைப் பார்த்து பயந்து விற்றுவிடாமல், நீண்ட கால கண்ணோட்டத்துடன் முடிவெடுக்க வேண்டும் என ராபர்ட் கியோசாகி அறிவுரை கூறுகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

