தங்கத்தில் முதலீடு செய்வோர் கவனத்திற்கு: மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு..!!

உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தங்கம் வாங்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியர்கள் தங்கத்தை நகை, நாணயம், கட்டிகள் வடிவத்தில் மட்டுமில்லாமல் ஈடிஎஃப் , கோல்டு மியூச்சவல் ஃபண்டு போன்ற டிஜிட்டல் வடிவங்களிலும் வாங்கி வைக்கின்றனர். தங்கத்தை நகை, நாணயமாக வாங்குவதை விட குறைந்த விலைக்கே ஈடிஎஃப் மற்றும் கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் தங்கம் வாங்க முடிகிறது. ஆனால் கோல்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை வைத்துள்ள நிறுவனங்கள் முக்கியமான முடிவினை அறிவித்துள்ளன.

இந்தியாவில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில் பொதுவாக இந்த காலத்தில் கோல்டு ஈடிஎஃப்களில் அதிகம் முதலீடுகள் வரும் ஆனால் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், திடீரென புதிய முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. கோடக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட், யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட், எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ புருடென்ஷியல் மற்றும் டாடா மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பல முக்கிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்க அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் புதிய முதலீடுகளை நிறுத்தியுள்ளன.

தங்கத்தில் முதலீடு செய்வோர் கவனத்திற்கு: மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு..!!

இது தொடர்பாக இந்த நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளன. அதாவது கோல்டு ஈடிஎஃப்களில் நேரடியாக முதலீடு செய்பவர்ஜளுக்கு சிக்கல் இல்லை. ஆனால் புதிதாக கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் நாம் முதலீடு செய்ய முடியாது, ஏற்கனவே கோல்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்களது யூனிட்களை விற்று பணமாக்கி கொள்ளலாம். ஏற்கனவே உள்ள எஸ்ஐபி, எஸ்டிபி ஆகியவை தொடரும். ஆனால் புதிதாக எஸ்ஐபி மேற்கொள்ள முடியாது. இது ஒரு தற்காலிக நிறுத்தம் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read

பொதுவாக கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் நாம் செய்யும் முதலீடுகளை இந்நிறுவனங்கள் பல நிறுவனங்களின் கோல்டு ஈடிஎஃப்களில் மொத்தமாக முதலீடு செய்யும். அது தான் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தசரா மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் தங்கம் வாங்குவது வழக்கமாகவே அதிகரிக்கும். கடந்த ஆண்டில் மக்கள் தங்கம் வாங்குவது மட்டுமில்லாமல் தங்கம் அடிப்படையிலான ஈடிஎஃப் முதலீடுகளிலும் பணத்தை கொட்டினர். எனவே கடந்த ஆண்டில் இந்த பண்டிகை காலத்தில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமனது. இந்நிலையில் தங்கத்திற்கான தேவை திடீரென உயர்வதை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளன.

Recommended For You

செபி மற்றும் துறைசார் நிறுவனங்களுக்கு இடையே நடந்த ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, இந்திய பங்கு சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இந்நிலையில் தங்க முதலீடுகள் அதிகரித்தால் கையில் இருக்கும் டாலரை கரைத்து அதிக தங்கம் இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். எனவே டாலர் இருப்பை தக்க வைக்க இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் புதிய முதலீடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், கோல்டு ஈடிஎஃப் விலைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. டிஜிட்டல் முறையிலான தங்க முதலீடுகள் இவ்வாறு தற்காலிகமாக நிறுத்தப்படுவது, பண்டிகை காலத்தில் தங்கத்தை நகை, நாணயமாக வாங்கும் போக்கை அதிகரிக்க செய்யும் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+