தங்கம் விலை குறையுதேனு சந்தோஷப்படாதீங்க..!! அடுத்து இதெல்லாம் நடக்க போகுது- ஷாக் ரிப்போர்ட்

தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே கடந்த 3 மாதங்களாக பெருமளவில் விலை சரிந்துள்ளன. குறிப்பாக ஒரு சவரன் தங்கம் 1.33 லட்சம் ரூபாயில் இருந்து 1.06 லட்சமாகவும், ஒரு கிலோ வெள்ளி 4.25 லட்சத்தில் இருந்து 2.45 லட்சம் ரூபாயாகவும் சரிந்துள்ளன. குறிப்பாக ஜூன் மாதத்தில் தங்கம், வெள்ளி இரண்டுமே வரலாறு காணாத சரிவை கண்டன.

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்காது என உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. உலக சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 3,966 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,900 டாலரை எட்டும் என கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு வெளியிட்டுள்ளது.

தங்கம் விலை குறையுதேனு சந்தோஷப்படாதீங்க..!! அடுத்து இதெல்லாம் நடக்க போகுது- ஷாக் ரிப்போர்ட்

கோல்ட்மேன் சாக்ஸின் தலைமை நிபுணர் வெளியிட்டுள்ள அறிக்கையில் Gold is not done என குறிப்பிட்டுள்ளனர். அதாவது தங்கம் விலை ஏற்றம் இன்னும் இருக்கிறது என சுட்டிக்காட்டுகிறார். ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், தங்கம் மீதான முதலீட்டு ஆர்வம் குறையவில்லை என தெரிவித்துள்ளார். குறிப்பாக உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் அந்நிய செலாவணி இருப்பை வலுப்படுத்தத் தங்கத்தைத் தொடர்ந்து அதிக அளவில் வாங்கி வருகின்றன. இது தங்கத்தின் விலைக்கு ஒரு வலுவான ஆதரவை வழங்குகிறது என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தங்கம் விலை குறையுதேனு சந்தோஷப்படாதீங்க..!! அடுத்து இதெல்லாம் நடக்க போகுது- ஷாக் ரிப்போர்ட்

அண்மையில் உலக தங்க கவுன்சில் நடத்திய ஆய்வறிக்கையில் 76 மத்திய வங்கிகளில் 45% வங்கிகள் அடுத்த 12 ஆண்டுகளில் தங்களின் தங்க இருப்பை அதிகரிக்க போவதாக கூறியுள்ளதை இந்த குழுவினர் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதுள்ள விலை சரிவு என்பது குறுகியகாலத்துகானது தான் என தெரிவிக்கின்றனர். தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கும் என உறுதியாக கூறுகின்றனர்.

Also Read

கோல்டுமேன் சாக்ஸ் அறிக்கையின் படி தங்கம் விலை தற்போதைய விலையில் இருந்து 24% வரை உயரும். அப்படி பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 1.31 லட்சம் ரூபாய் வரை உயரும். கோல்ட்மேன் சாக்ஸின் இந்த அறிக்கை, குறுகிய கால ஏற்ற இறக்கங்களைக் கண்டு அஞ்சாமல், நீண்ட கால முதலீட்டு நோக்கத்துடன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு வரும் காலம் சாதகமாகவே இருக்கும் என்கிறது.

Recommended For You

3 மாதங்களாக தங்கம் விலை பெரிதாக ஏறவில்லை என்றாலும் நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை உயரதான் போகிறது என சுட்டிக்காட்டுகிறது. எனவே தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இப்போது தங்கம் வாங்க சிறந்த தருணம். அதே போல தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு இப்போது தான் சிறந்த வாய்ப்பு என தொடர்ச்சியாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை ஒரு உச்சத்தை தொட்டு எப்படி விலை சரிந்திருக்கிறதோ அதே போல விலை சரிவில் இருந்து மீண்டும் ஒரு உச்சத்தை தொடும் இது ஒரு சுழற்சி போல நடந்து கொண்டே இருக்கும் என்பதால் நீண்ட கால லாபத்தை கணக்கில் கொண்டு முதலீடு செய்ய அறிவுரை வழங்குகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+