யானைக்கும் அடி சறுக்கும்: தங்கம் மட்டும் விதிவிலக்கா? ஓராண்டில் தங்கம் விலை கற்று தந்த பாடம் என்ன?

இந்தியர்களை பொறுத்தவரை தங்கத்திற்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. தங்கம் வாங்கினால் என்றைக்கும் நஷ்டம் வராது, அதன் விலை ஏறிக்கொண்டேதான் போகும் என்பது நம்மில் பெரும்பாலானவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. ஆனால், யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப தங்கம் விலை கடந்த ஓராண்டில் நமக்கு பெரிய பாடத்தை கற்று தந்துள்ளது.

சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறும் வகையில், தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டு அதிர்ச்சியை தந்தது. அதன் பிறகும் தங்கத்தின் ஓட்டம் நிற்கவில்லை. சர்வதேச பொருளாதாரச் சூழல்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தால், ஜனவரி 29-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 1.34 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. இனி தங்கம் வாங்கவே முடியாது என நடுத்தர மக்கள் முடிவே செய்துவிட்டனர்.

யானைக்கும் அடி சறுக்கும்: தங்கம் மட்டும் விதிவிலக்கா? ஓராண்டில் தங்கம் விலை கற்று தந்த பாடம் என்ன?

ஆனால் உச்சத்திற்கு சென்ற தங்கம் மெது மெதுவாக விலை சரிந்து தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் 1 லட்சத்திற்கு கீழ் இறங்கியுள்ளது. தங்கம் விலை ஏறுகிறதே என ஜனவரியில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் நஷ்டத்தில் இருக்கின்றனர். அவசரப்பட்டு தங்க நகை வாங்கியவர்கள் நஷ்டமடைந்து விட்டோமே என புலம்புகின்றனர்.

கடந்த ஓராண்டில் தங்கம் முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான்கு முக்கிய பாடங்களை கற்று கொடுத்துள்ளது. முதலில் பங்குச் சந்தை மட்டுமே ஏறி இறங்கும்; தங்கம் எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கும் என்ற மாயை உடைந்துள்ளது. எந்தவொரு சொத்து மதிப்பும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வேகமாக உயர்ந்தால், அதில் ஒரு திருத்தம் வருவது இயற்கையான பொருளாதார விதி என்பதை தங்கம் உணர்த்தியுள்ளது.

Also Read

தங்கம் சவரனுக்கு 1 லட்சத்தை தாண்டி 1.34 லட்சம் ரூபாயை தொட்ட போது இப்போதே வாங்கிவிடாவிட்டால் இன்னும் விலை ஏறிவிடும் என்ற பதற்றத்தில் (Fear Of Missing Out) பலர் அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்கினார்கள். உச்ச விலையில் வாங்கியவர்களுக்கு தற்போது குறுகிய காலத்தில் பெரும் நஷ்டமே மிஞ்சியுள்ளது. எனவே முதலீட்டில் எப்போதுமே அவசரம் கூடாது வரலாற்று உச்சத்தில் ஒரு பொருளை வாங்கவே கூடாது என்பதை இது உணர்த்துகிறது.

தங்கம் என்பது நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற பாதுகாப்பான புகலிடமே தவிர, குறுகிய காலத்தில் லாபம் பார்க்கும் கருவி அல்ல. 5 முதல் 10 ஆண்டுகள் வரை வைத்திருப்பவர்களுக்கு தங்கம் நல்ல லாபத்தை தரும்; ஆனால் ஓராண்டுக்குள் லாபம் பார்க்க நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்பதை தங்கம் விலை உணர வைத்துள்ளது.

Recommended For You

அடுத்ததாக தங்கம் உச்சத்தில் இருந்தபோது, ஒட்டுமொத்த சேமிப்பையும் தங்கத்திலேயே போட்டவர்கள் இப்போது தவிக்கிறார்கள். எப்போதும் பணத்தை தங்கம், நிலம், பங்கு சந்தை, வங்கி வைப்பு நிதி என பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஒரே சொத்தில் பணத்தை போட்டால் திடீர் லாபமும் திடீர் நஷ்டமும் உண்டு எனவே முதலீட்டை பன்முகப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

தற்போதைக்கு தங்கத்தின் இந்த விலை சரிவு, திருமணத்திற்காகவும் சுப காரியங்களுக்காகவும் நகை வாங்க காத்திருந்த சாமானிய மக்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதே சமயம், முதலீட்டாளர்களுக்கு தங்கம் என்றைக்கும் மதிப்புமிக்க உலோகம்தான், ஆனால், அதற்காக அது எப்போதும் ஏறுமுகமாகவே இருக்காது என்பதை உணர வைத்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+