சென்னை: இந்து மற்றும் ஜெயின் சமூகத்தினருக்கு, நன்னாளாக அட்சய திருதியை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தங்கம் உட்பட விலைமதிப்பற்ற சொத்துக்களை, வாங்குவது கலாச்சார முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக மக்கள் அட்சய திருதியை அன்று கடைகளுக்கு சென்று தங்க நகைகளை வாங்குகின்றனர். ஆனால், இந்த வருடம் இதுபோன்ற தங்க நகை முதலீடு மட்டுமின்றி, வேறு சில முதலீடுகளின் பக்கமும் மக்களின் திசை திரும்பி உள்ளது.
அட்சய திருதியை 2024: பாரம்பரியமான தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் மட்டுமின்றி, தற்போது பல முதலீட்டு விருப்பங்கள் இருக்கின்றன. சிலர் தங்கப் பத்திரங்கள், டிஜிட்டல் தங்கம், ETFகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றிலும் முதலீடு செய்கின்றனர்.

டிஜிட்டல் தங்கம் வெர்சஸ் தங்க நகைகள்: டிஜிட்டல் தங்கம் அல்லது பாரம்பரிய தங்க நகைகளை வாங்குவதற்கு முடிவு செய்யும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகளைப் பற்றிப் பார்ப்போம்.
தங்க நகைகள் அல்லது நாணயங்களை வாங்குவதற்கும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கும் இடையே, தேர்ந்தெடுக்கும் போது சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன, என்று AURM நிறுவனத்தின் இணை நிறுவனர் கணேஷ் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஏதேனும் சிறப்பான விசேஷங்கள் அல்லது சுப நாட்களில், தங்கம் வாங்குவது பாரம்பரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் அட்சய திருதியை அன்று தங்கள் அன்புக்குரியவர்களுக்கு, சிலர் தங்க நகைகளை வாங்கி பரிசாக அளிக்கின்றனர். குடும்பப் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளைக் கருத்தில் கொள்ளும்போது, அட்சய திருதியை அன்று நகைகளை வாங்கும் குடும்பம் நிறைய உள்ளது.
அதிலும், தாய்மார்கள் தங்கள் மகள்களுடன் ஒன்றாகக் கடைக்குச் சென்று இணைந்து மகிழ்ச்சியாக நகைகளை வாங்குகின்றனர். மேலும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா.. அல்லது தங்க நகைகளில் முதலீடு செய்ய வேண்டுமா.. என்பது அந்தந்த நபரின் பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்தது. ஒருவருக்கு விரைவாக பணம் தேவைப்பட்டால் டிஜிட்டல் தங்கம் சிறந்தது. ஏனெனில், இதனைப் பணமாக மாற்றுவது எளிது. ஆனால், அவர்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய திட்டமிட்டால், தங்கத்தை வாங்குவது சிறப்பானதாக இருக்கும், என்றும் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டிஜிட்டல் தங்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்: டிஜிட்டல் மற்றும் பாரம்பரிய தங்கம் ஆகிய இரண்டிலும் தனித்துவமான நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. நீங்கள் எந்தவித விருப்பத்தை தேர்வு செய்தாலும், அதன் மதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது பாரம்பரிய தங்க நகைகளை வாங்குவது, சிறந்த விருப்பமாகும். ஏனெனில் அவை அனைத்து விசேஷங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமாக வாங்கிய நகைகள் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்படுகிறது.
தங்க நகைகள் மற்றும் டிஜிட்டல் தங்க ஆவணங்களைப் பாதுகாப்பதற்கும், சேமிப்பதற்கும் நிறைய வழிகள் உள்ளன. ஆனாலும், வங்கி லாக்கர்கள் தற்போது பற்றாக்குறையாக இருக்கிறது. தங்கம் வைத்திருக்கும் 6 கோடி இந்தியர்களுக்கு, 6 லட்சம் லாக்கர்கள் தான் உள்ளன என்றும் கணேஷ் கூறியுள்ளார்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications