பெரும்பாலான இந்தியர்கள் தங்களுக்கு ஒரு அவசர பண தேவை ஏற்படுகிறது என்றால் உடனடியாக நாடுவது இரண்டு வகையான கடன்கள் தான். ஒன்று தங்கள் கைவசம் இருக்கும் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது, மற்றொன்று பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்களை பெறுவது.தங்க நகை கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகிய இரண்டுமே அதற்கே உரிய சாதக பாதகங்களை கொண்டுள்ளன. முன்கூட்டியே நம்முடைய நிதி நிலவரங்களையும் இந்த இரண்டு கடன்களில் இருக்கக்கூடிய பலன்களையும் ஆய்வு செய்து கடன் பெறுவது தான் சிறந்தது.
நம் கைவசம் இருக்கக்கூடிய தங்க நகைகளை வங்கிகள் அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் பெறுவது தான் தங்க நகை கடன். தங்கத்தின் விலையில் அதிகபட்சம் 85 சதவீதம் வரையிலான தொகையை கடனாக வழங்கலாம் என ஆர்பிஐ சொல்கிறது. இருந்தாலும் பெரும்பாலான வங்கிகள் தங்கத்தின் விலை மதிப்பில் 70% வரை கடன் தொகையாக வழங்குகின்றன.

எந்த ஒரு அடமானமும் இல்லாமல் வங்கிகள் நமக்கு வழங்கக்கூடிய கடன்கள். இதற்கு ஆதாரமாக பெரும்பாலும் அவர்கள் நம்முடைய பே சிலிப் உள்ளிட்ட தகவல்களை கேட்பார்கள். ஆனால் இந்த வகை கடனில் நம்மிடம் இருந்து எந்த பொருளையும் அடமானமாக கொடுக்கவில்லை. இது ஒரு பாதுகாப்பில்லாத கடன் என்று கூட சொல்லப்படுகிறது.
தங்க நகை கடனை பொறுத்தவரை நம் கைவசம் இருக்கக்கூடிய தங்கத்தை வங்கிகளிடம் கொடுக்கிறோம். அவர்கள் அதனை அடமானமாக எடுத்துக் கொண்டு நமக்கு கடன் வழங்குகிறார்கள். நம்முடைய பொருள் வங்கிகள் வசம் இருக்கிறது என்பதால் தனிநபர் கடன்கள் உடன் ஒப்பிடும்போது தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவு. இது பாதுகாக்கப்பட்ட கடன் பிரிவில் வருகிறது. ஏனெனில் நீங்கள் கடனை திரும்ப செலுத்த தவறினால் கூட வங்கிகள் அந்த தங்கத்தை ஏலத்தில் விடுத்து பணத்தை மீட்டுக் கொள்ளும். எனவே தங்க நகை கடன்களில் வட்டி குறைவு.
தனிநபர் கடன் பாதுகாப்பற்ற கடன்கள் அதாவது வங்கிகள் உங்களிடமிருந்து எதையும் அடமானமாக பெறவில்லை ஒரு நம்பிக்கை அடிப்படையில் தான் இந்த கடன் என்பது வழங்கப்படுகிறது. நீங்கள் கடனை திரும்ப வழங்கவில்லை என்றால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இது ஒரு பாதுகாப்பற்ற கடன் என்பதால் வங்கிகள் அதிகபட்ச வட்டி வீதத்தில் தான் தனிநபர் கடன்களையே வழங்குகின்றன. உங்களுடைய கிரெடிட் ஸ்கோர், சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கான கடன் தொகையும் வட்டி விகிதமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

உங்களுக்கு ஒரு மருத்துவ அவசர நிலை ஏற்பட்டிருக்கிறது அல்லது கல்வி செலவுக்கு பணம் தேவைப்படுகிறது, உடனடியாக ஒரு ரொக்கப் பணம் உங்கள் கையில் தேவை எனும்போது நீங்கள் உங்கள் கையில் இருக்கும் தங்கத்தை கொண்டு சென்று வங்கியதோ அல்லது ஒரு நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து குறைந்தது 15 லிருந்து 20 நிமிடங்களுக்குள் பணமாக மாற்றிக்கொள்ளலாம். உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எதிர்பார்க்க மாட்டார்கள். னெனில் உங்களுடைய பொருள் அவர்கள் வசம் இருக்கிறது.
ஆனால் தங்க நகை கடன்களை நீங்கள் ஓராண்டுக்குள்ளாகவே மீட்டு விட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. ஒரு நீண்ட காலத்திற்கு இந்த பணம் தேவை இதனை நான் அடுத்த மூன்றிலிருந்து நான்கு ஐந்து ஆண்டுகளில் தான் திரும்ப செலுத்த முடியும் என்ற சூழலில் இருப்பவர்கள் தங்க நகை கடன்களுக்கு மாற்றாக தனி நபர் கடன்களுக்கு செல்லலாம். என்னிடம் தங்க நகையும் கிடையாது அடகு வைப்பதற்கு எந்த ஒரு சொத்தும் கிடையாது என்பவர்களுக்கும் தனிநபர் கடன்கள் தான் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தருகின்றன.
ஆனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால் அதிக வட்டி விகிதத்தை நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும். தனிநபர் கடன்களை விட தங்க நகை கடன்கள் தான் சிறந்தது. ஏனெனில் வட்டி குறைவு, உடனே பணம் கிடைக்கும் , கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை, பெரிய ஆவண சரிபார்ப்புகளும் இருக்காது. அது மட்டுமில்லாமல் நம் கைவசம் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து இருக்கிறோம் எனவே தங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே தங்களுடைய செலவுகளை குறித்து கடனை விரைவாக திரும்ப செலுத்த முற்படுவோம். அந்த நோக்கத்தில் பார்க்கும்போது தங்க நகை கடன்கள் சிறந்தவை, ஏனெனில் இதனை செலுத்த தவறினால் நாம் கஷ்டப்பட்டு வாங்கிய தங்க நகை உணர்வு ரீதியாக நம்முடன் பிணைப்பு கொண்டிருக்கும் தங்க நகை நம் கைவிட்டு போகக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications