பொதுவாக கடன் வாங்கவே கூடாது என பலரும் பல கட்டத்திலும் நினைப்போம்,. ஆனால் சூழ்நிலையால் சில சமயங்களில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டியிருக்கும்.
அப்படி அவசர காலகட்டங்களில் கடன் வாங்க நினைப்பவர்கள் பலரும் அணுவது தங்க கடனை தான்.
எனினும் இன்று நாம் பார்க்க விருப்பது அவசர தேவைக்கு வாங்கும் கடனில் தங்க கடன் எனும் கோல்டு லோன் அல்லது வங்கி பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக கடம் சிறந்ததா? எது உங்களின் அவசர தேவைக்கு உகந்தது? எதில் வட்டி குறைவாக இருக்கும்? மற்ற கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
எது சிறந்தது?
பொதுவாக நம்மில் பலரும் அறிந்த ஒன்று தங்க கடன். ஆனால் எஃப்டியை முதிர்ச்சியடைந்த பிறகு திரும்ப பெறுவதை விட, பொதுவாக எஃப்டிக்கு எதிரான கடன் விரும்பப்படுகிறது. இந்த கடனை வாங்க ஓவர் டிராப்ட் மற்றும் கடனுக்கு எதிராக எஃப்டி என இரண்டு வழிகளில் உள்ளன. இந்த திட்டங்களை விட தங்க கடன் தான் சிறந்தது என பலரும் நினைக்கின்றனர்? ஏன்? வாருங்கள் பார்க்கலாம்.
பாதுகாப்பான கடன்
முதலாவதாக தங்க கடன் மற்றும் ஓவர்டிராப்ட் கடன் என இரண்டுமே பாதுகாப்பான கடன்களாகத் தான் உள்ளன. ஏனெனில் தங்க கடனின் கீழ் வாடிக்கையாளார் தங்கத்தினை கடனுக்கு பிணையமாக கொடுக்கிறார். இதனால் வாடிக்கையாளார் ஒரு வேளை பணத்தை திரும்ப செலுத்தா விட்டால், தங்கத்தினை விற்று வங்கி பணமாக்கிக் கொள்ளும். இதே வாடிக்கையாளார்கள் சரியாக வட்டியை செலுத்தி வந்தால், சரியான நேரத்தில் நகையை திரும்ப பணத்தை செலுத்தி விட்டு நகையை பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வளவு பெறலாம்?
இதில் 18 காரட் முதல் 22 காரட் வரையில் பிணையமாக எடுத்துக் கொள்கிறது. முன்னதாக தங்கத்தின் மதிப்பில் 75%ல் இருந்து, 90% பெறலாம் என ஆர்பிஐ அறிவித்தது.
இதே பிக்சட் டெபாசிட்டிலும் ஓவர் டிராப்ட் வசதியினை நீண்டகால நோக்கில், குறுகிய காலத்திலும் பெற்றுக் கொள்ளலாம். வங்கிகள் எஃப்டியனை பிணையமாக வைத்துக் கொண்டு கடனை கொடுக்கின்றன.
90% ஓவர்டிராஃப்ட்
வாடிக்கையாளர் FD இன் மொத்த மதிப்பில் 90% வரை ஓவர்டிராஃப்ட் பெறலாம். இதில் வாடிக்கையாளரிடமிருந்தும் வங்கி குறைந்த வட்டியை பெறுகிறது. வங்கிகள் வழக்கமாக FD இல் கிடைக்கும் வட்டியை விட 1- 2% அதிகமாக வசூலிக்கின்றன. எஃப்.டி-யில் வட்டி எடுப்பது மிகவும் எளிதானது. ஏனென்றால் அதன் மதிப்பீடு உடனடியாக செய்யப்படுகிறது. ஒரு வேளை பிக்சட் டெபாசிட்டில் மாத தவணை கழித்துக் கொள்ளப்படுகிறது.
எது பெஸ்ட்
பொதுவாக இந்த இரண்டு கடன்களிலும் ஒப்பிடும்போது தங்க கடன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இது விரைவில் எளிதாக கிடைக்கிறது. கடன் கிடைக்க ஆவணங்கள் குறைவு. இதில் வரிச்சலுகையும் கிடைக்கிறது. இந்த ஓவர் டிராப்ட் வசதியினை விட எளிதாக கிடைக்கிறது. ஆக தங்க கடன் பெஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது. இதற்கு சிபில் ஸ்கோரும் தேவையில்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications