பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்டை தூக்கி சாப்பிட்ட தங்கம்!! 20 ஆண்டுகளில் கொடுத்த லாபம் எவ்வளவு தெரியுமா?

2025 ஆம் ஆண்டின் உச்சபட்ச விலையை எட்டி இருக்கிறது தங்கம் . சென்னையில் இன்றைய தினத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 98 ,000 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டிருக்கிறது.

தங்கத்தின் இந்த விலை உயர்வு உலகிலேயே அதிக லாபம் தரக்கூடிய ஒரு சொத்தாக தங்கத்தை மாற்றி இருக்கிறது. ரியல் எஸ்டேட் பங்குச்சந்தை உள்ளிட்டவற்றை எல்லாம் மிஞ்சி தங்கம் சிறந்த லாபம் தந்த ஒரு முதலீடாக உருவாகி இருக்கிறது . இது இந்த ஆண்டில் மட்டுமல்ல கடந்த 20 ஆண்டுகளில் தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தை ஆகிய மூன்றையும் ஒப்பிடும்போது எது அதிக லாபம் தந்தது என்பது குறித்த ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்டை தூக்கி சாப்பிட்ட தங்கம்! 20 ஆண்டுகளில் கொடுத்த லாபம் எவ்வளவு தெரியுமா?

ஃபண்ட்ஸ் இந்தியா என்ற நிறுவனம் பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்டை விட தங்கம் அதிக லாபம் தந்து இருப்பதாக தெரிவிக்கிறது. 20 ஆண்டுகளில் நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஆண்டுக்கு சராசரியாக 13.5% என்ற சிஏஜிஆர் வளர்ச்சியை தந்திருக்கிறது. அதே வேளையில் ரூபாய் விகிதத்தை வைத்து பார்க்கும் போது ஆண்டுக்கு 15 சதவீதம் என்ற சிஏஜிஆர் வளர்ச்சியை அடைந்திருக்கிறது தங்கம். ரியல் எஸ்டேட் பொருத்தவரை ஆண்டுக்கு 7.6 சதவீதம் என்ற சிஏஜிஆர் வளர்ச்சியை பெற்றிருக்கிறது .

எனவே அதிக லாபம் கண்ட முதலீடாக தங்கம் தான் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்க பங்குச்சந்தையான எஸ்&பி 500 இண்டெக்ஸ் கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு 14.8 சதவீதம் என்ற சிஏஜிஆர் வளர்ச்சியை தந்திருக்கிறது. ஆனால் இதைவிட தங்கம் கூடுதல் வளர்ச்சியை தந்திருக்கிறது. தங்கம் கடந்த சில ஆண்டுகளாக அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருப்பது தான் இந்த லாபம் அதிகரித்திருப்பதற்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஈக்வனாமிக்ஸ் நிறுவனத்தின் தலைவரான சொக்கலிங்கம் தங்கம் பாதுகாப்பான முதலீடு என்ற இடத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது அதுதான் தங்கம் அதிக லாபம் தரும் முதலீடாக இருப்பதற்கு முக்கிய காரணம் என கூறுகிறார் . பங்குச்சந்தைகள் சரியான மதிப்பீட்டில் இல்லாமல் இருப்பது , மத்திய வங்கிகள் அதிக தங்கம் வாங்குவது, ரூபாய் மதிப்பு சரிவது இவை அனைத்தையும் முதலீட்டாளர்களை தொடர்ச்சியாக தங்கத்தை நோக்கி தான் தள்ளுகின்றன என கூறுகிறார் .

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்டை தூக்கி சாப்பிட்ட தங்கம்! 20 ஆண்டுகளில் கொடுத்த லாபம் எவ்வளவு தெரியுமா?

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பார்க்கும் போது தங்கம் ஆண்டுக்கு சராசரியாக 23.2% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தை 16.5% வளர்ச்சியையும் அமெரிக்கா பங்குச்சந்தை 19.6 வளர்ச்சியையும் பெற்றுள்ளன. தங்கத்தின் இந்த விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. அதாவது தங்கம், விலை ஏறுமுகமாகவே இருக்கும் என்கின்றனர்.

கோடக் செக்யூரீட்டீஸ், ஹெச்எஸ்பிசி, மார்கன் ஸ்டான்லி போன்ற பல்வேறு அமைப்புகளும் வரும் ஆண்டில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 5000 டாலர்கள் என்ற விலையை எட்டும் என கணிக்கின்றன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+