தங்கம் எப்போதுமே மோசம் போகாத முதலீடு. தங்கம் விலை சரிந்தாலும் மீண்டு வரும் போது அதை விட அதிகமாக வளர்ச்சி அடைந்து லாபத்தை தந்துவிடும். அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் விலை என்னவாக இருந்தது? அப்போது ஒரு பவுன் விலை என்ன? இப்போது அது எவ்வளவாக உயர்ந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், நீண்டகால நோக்கில் முதலீட்டாளர்களுக்கு பெருமளவு லாபத்தையே ஈட்டி தந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 30,000 ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது. அதுவே 10 ஆண்டுகளில் தங்கம் விலை 360 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

எனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் 30,000 ரூபாய்க்கு 10 கிராம் தங்கம் வாங்கி இருந்தால் அதன் மதிப்பு தற்போது 1.41 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது தங்கம் வாங்கியவர்களுக்கு அந்த முதலீடு சுமார் 4.6 மடங்காக பெருகியுள்ளது.
ஆக்ஸிஸ் டைரக்ட் தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் அதாவது நவம்பர் 2021 முதல் அக்டோபர் 2026 இறுதி வரை இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராம் சுமார் 47,600 ரூபாயில் இருந்து 1,42,750 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 200% லாபத்தையும், கூட்டு வட்டி முறையில் ஆண்டுக்கு சுமார் 24.53% என்ற CAGR வளர்ச்சி விகிதத்தை தந்துள்ளது.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குவது ஆகிய காரணங்களால் தங்கம் விலை முதலீட்டாளர்களுக்கு நல்ல ஏற்றம் தந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டை கவனித்தால், 2025 தீபாவளியின் போது 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை சுமார் 1,30,860 ரூபாயாக இருந்தது. தற்போது 1,43,000 ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சுமார் 7% வளர்ச்சி ஆகும். தங்கம் விலை கடந்த ஜனவரியில் வரலாற்று உச்சம் தொட்டது. தற்போது 24% விலை குறைந்துள்ளது.
22 கேரட் ஆபரண தங்கம் விலை 2016இல் ஒரு கிராம் 2,800 ரூபாயாக தான் இருந்தது. ஒரு சவரனே 23,000 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று 13,140 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது 10 ஆண்டுகளில் தங்கம் விலை 379% லாபம் தந்துள்ளது. அப்போது 1 லட்சம் ரூபாய்க்கே 4 சவரன் தங்கம் கிடைத்திருக்கும், அதுவே இன்று ஒரு சவரன் கூட வாங்க முடியாது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

