Gold Rate: தீபாவளிக்குள் தாறுமாறாக குறைய போகிறதா தங்கம் விலை? செப்டம்பரில் நடந்தது அக்டோபரிலும் நடக்குமா?

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம். விரைவில் தசரா பண்டிகையும் அதனை தொடர்ந்து தீபாவளியும் வர போகிறது. பண்டிகை காலங்களில் தங்கம் வாங்குவது இந்தியர்களின் வாடிக்கை. அதுவும் தீபாவளி சமயத்தில் இந்தியாவில் தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் என்பதால் தீபாவளிக்குள் தங்கம் விலை இன்னும் குறையுமா அல்லது கடந்த ஆண்டை போல உயருமா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த சில மாதங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகின்றன. ஜூன், ஜூலை மாதங்களில் விலை குறைந்த தங்கம் ஆகஸ்ட் மாதம் விலை உயர்ந்தது. ஆனால் செப்டம்பர் மாதம் விலை சரிந்தது. அக்டோபர் தொடக்கமும் நகை பிரியர்களுக்கு ஏற்ற வகையில் விலை சரிவுடன் தான் இருக்கிறது. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் அது வரை தங்கம் விலை சரிவிலேயே தான் இருக்குமா என்பதை பார்க்கலாம்.

Gold Rate: தீபாவளிக்குள் தாறுமாறாக குறைய போகிறதா தங்கம் விலை? செப்டம்பரில் நடந்தது அக்டோபரிலும் நடக்குமா?

முதலில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,675 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1,09,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 14,918 ரூபாய்க்கும், 10 கிராம் 1,49,180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் இருந்தே தங்கம் விலை இறங்குமுகமாகவே தான் இருக்கிறது. அக்டோபரிலும் 3 வர்த்தக நாட்களிலும் 1 நாளை தவிர 2 நாட்கள் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. செப்டம்பரை போலவே அக்டோபர் மாதமும் தங்கம் விலை குறைந்தால் தீபாவளிக்குள் தங்கம் விலை ஒரு சவரன் 1.05 லட்சத்திற்குள் செல்ல வாய்ப்புள்ளது.

Also Read

செப்டம்பர் மாதம் தங்கம் விலை குறைய முக்கிய காரணம் அமெரிக்க மத்திய வங்கி எடுத்த ஒரு முடிவு தான். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது. மேற்கொண்டு இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் ஒரு வட்டி விகித உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பத்திரங்கள், வட்டி வருமானங்கள் உயரும் என்பதால் முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் இருந்த முதலீடுகளை எடுத்து பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.

Recommended For You

இதனால் தங்க சந்தையில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டது. இது தான் உலக சந்தையில் தங்கம் விலை குறையவும் அதன் விளைவாக இந்திய சந்தையில் தங்கம் விலை குறையவும் காரணமாக அமைந்தது. செப்டம்பரில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 5,400 ரூபாய் குறைந்தது. அதே விலை குறைவு இந்த மாதமும் நீடித்தால் தீபாவளியின் போது தங்கம் விலை ஒரு சவரன் 1.05 லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு கீழ் சென்று விடும். ஹெச்எஸ்பிசி உள்ளிட்ட பல்வேறு தரகு நிறுவனங்களும் வங்கிகளும் தங்கம் விலைக்கான கணிப்புகளை குறைத்துள்ளன என்பதால் விலை இறங்குமுகமாக இருப்பதற்கான வாய்ப்புகலே உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+