தீபாவளி நெருங்கி வருவதால், இந்தியாவில் தங்கம் விலையை தான் மக்கள் அதிகம் கவனித்து வருகின்றனர். ஏனெனில் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்குவது நம் நாட்டில் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
தங்கம் விலை இந்த மாத தொடக்கம் முதலே சரிந்து வருகிறது. இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,390 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,07,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,608 ரூபாய்க்கும் 10 கிராம் 1,46,080 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. உலகளாவிய சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4,118 டாலராக வர்த்தகமாகிறது. அதேபோல், ஸ்பாட் வெள்ளியும் 0.4 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் 56.88 டாலராக குறைந்தது.

அமெரிக்க வட்டி உயர்வு அறிவிப்பால் பத்திரங்களின் லாபம் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் வட்டி தராத சொத்தான தங்கத்தின் மீது முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் குறைத்து வருகின்றனர். பத்திரங்களின் ஈவுத்தொகை உயரும்போது, முதலீட்டாளர்களின் கவனம் வட்டி தரும் சொத்துகளின் பக்கம் திரும்பும். இது தங்கத்தின் தேவையை தற்காலிகமாக குறைக்கும். இது தான் தற்போதும் நடக்கிறது.
Public Gold Bullion நிறுவன தலைவர் பராக் சேத், ஈடி நவ் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தங்கம் விலையில் நாம் ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கிறோம் என கூறியுள்ளார். குறுகிய கால அழுத்தங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தாலும், தங்கத்தின் விலையில் பெரிய வீழ்ச்சி இருக்காது என்றே கூறுகிறார்.
குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், தங்கத்தின் நீண்டகால கட்டமைப்பு பாசிடிவாகவே உள்ளது என்றும், எதிர்காலத்தில் விலை கணிசமான வளர்ச்சி அடையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் உறுதியாக கூறுகிறார்.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை இன்னும் 100 டாலர்கள் வரை செல்ல வாய்ப்புள்ளது என கணிக்கிறார். அப்படி என்றால் 4000 டாலர் என்ற அளவை தொட வாய்ப்புள்ளது என கணிக்கிறார். சதவீத அடிப்படையில் இது 2.44% ஆகும். இதனை இந்திய விலையில் ஒப்பிட்டால் 22 கேரட் ஆபரண தங்கம் 1.04 லட்சம் ரூபாய் வரை சரிய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டில் தீபாவளியின் போது தங்கம் விலை உயர்ந்தது, ஆனால் இந்த ஆண்டு தற்போது முதலே விலை சரிந்து வருகிறது, இது நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

