அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு எவ்வளவு குறைந்திருக்கிறது, இப்போது தங்கம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் தங்கத்திற்கான மாதம் என கூறலாம். ஏனெனில் அந்த அளவுக்கு தங்கம் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தான் இந்தியாவில் தங்கம் விலைகள் மாற்றமடைகின்றன. அந்த வகையில் கடந்த சில வாரங்களாகவே உலக சந்தையில் தங்கம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாட்டின் தங்கம் விலையிலும் இது எதிரொலிக்கிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 13,680 ரூபாயாக இருந்தது ஒரு சவரன் தங்கம் 1,09,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அக்டோபர் மாதத்தின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,730 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,01,840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரையிலான இந்த 31 நாட்களில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 950 ரூபாய் விலை சரிவடைந்துள்ளது ஒரு சவரன் என பார்க்கும்போது 7600 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது. 10 கிராம் என பார்த்தால் 9,500 ரூபாய் விலை சரிந்துள்ளது. கிட்டத்தட்ட 7% தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் தங்கம் விலை தன்னுடைய வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியிருந்தது. ஜனவரி மாதம் 29-ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 16,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது ஒரு சவரன் 1,34,400க்கு விற்பனையானது. அந்த வகையில் தங்கம் விலை தன்னுடைய வரலாற்று உச்சபட்ச விலையிலிருந்து ஒரு சவரனுக்கு 32,560 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது.
24 கேரட் பொறுத்தவரை அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று ஒரு கிராம் 14924 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்றைய தினம் 13,888 ரூபாய். அதாவது ஒரு கிராமுக்கு 1036 ரூபாயும் 10 கிராமுக்கு 10,360 ரூபாயும் விலை குறைந்திருக்கிறது. ஜனவரி மாதம் 29ஆம் தேதி 24கேரட் தங்கம் ஒரு கிராம் 18,328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து தங்கம் ஒரு கிராமுக்கு 4,440 ரூபாயும் 10 கிராமுக்கு 44,400 ரூபாயும் விலை சரிவடைந்து இருக்கிறது.
தங்கம் விலை ஜனவரி மாதத்திற்கு பிறகு இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சிறந்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் தங்கம் நாளையும் இதே விலைக்கு தான் விற்பனை செய்யப்படும். எனவே விலை குறையட்டும் தங்கம் வாங்கி கொள்ளலாம் என காத்திருந்தவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பும், கச்சா எண்ணெய் விலை மாற்றமும் தான் உலக சந்தையில் தங்கம் விலை குறைய காரணம், இது அப்படியே நவம்பர் மாதமும் நீடிக்கும், பட்சத்தில் தங்கம் விலை நவம்பரிலும் சரிய வாய்ப்பிருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

