28% சரிந்த தங்கம் விலை..!! 30 ஆண்டு கால வரலாற்றை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

தங்கம் விலை கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி வரை வேகமாக உயர்ந்து வந்தது. தங்கம் இனி எட்டாக்கனி என மக்கள் நினைத்த போது வேகமாக விலை சரிந்தது. தங்கம் எப்போதும் விலை ஏறி கொண்டு தான் இருக்கும் என பலரும் கூறிய நிலையில் 5 மாதங்களாக கிணற்றில் போட்ட கல்லாக ஒரே வரம்பிற்குள்ளாகவே விலை நீடிக்கிறது.

ஜனவரியில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5,602 டாலர் என உச்சம் தொட்டது. தமிழ்நாட்டில் ஆபரண தங்கம் விலை சவரன் 1.33 லட்சம் என்ற விலையை எட்டியது. ஆனால் ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு டிமாண்ட் கூடியதால் தங்கம் விலை சரிந்தது. இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 டாலராகவும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,06,000 ரூபாயாகவும் உள்ளது. அதாவது 28% தங்கம் விலை குறைந்துள்ளது.

28% சரிந்த தங்கம் விலை..!! 30 ஆண்டு கால வரலாற்றை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

தங்கம் விலையில் 30 ஆண்டு கால வரலாற்றை பார்த்தால் தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டாலும், உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகளை பொறுத்தே அதன் வளர்ச்சி அமைகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 2026-இன் தொடக்கத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை உயர்வு, தற்போது ஒரு தேக்கநிலையை அடைந்துள்ளது.

1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் 380 டாலருக்கு விற்பனையானது இப்போது 4000 டாலராக உள்ளது. அதாவது 950% உயர்ந்துள்ளது. தங்கம்விலை 2021ஆம் ஆண்டுக்கு பின்னரே மிக வேகமாக உயர தொடங்கியது என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு முன்பு வரை ஒரு ஆண்டு ஏறினால் அடுத்த 2 ஆண்டுகள் தேக்கம் என இப்படி தான் காணப்பட்டதாம். 1996 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பெரிய அளவில் விலை ஏறவில்லை. அதன் பின் ஏறி மீண்டும் சரிந்தது. தற்போது அதே போல ஒரு நிலை தான் ஏற்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

Also Read

தங்கம் விலை நிர்ணயத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதே இதற்கு காரணம். அமெரிக்க வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, தங்கம் போன்ற எவ்வித வட்டியோ அல்லது டிவிடெண்டோ வழங்காத சொத்துக்களின் மீதான ஆர்வம் முதலீட்டாளர்களுக்கு குறைகிறது. எனவே தங்கத்தை விடுத்து மற்ற முதலீடுகளுக்கு செல்வார்கள்.

28% சரிந்த தங்கம் விலை..!! 30 ஆண்டு கால வரலாற்றை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

அடுத்ததாக தங்கம் அமெரிக்க டாலரில்தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியின் பணவியல் கொள்கைகள் மற்றும் வட்டி விகித மாற்றங்கள் நேரடியாக தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன. தற்போது பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் அதிகமாகவே இருக்கும் அல்லது மேலும் உயர்த்தப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் தரும் அரசு பத்திரங்களில் அதிக முதலீடு செய்கிறார்கள்.

இவை தவிர அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் பொறுப்பேற்ற பிறகு, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே முதன்மை நோக்கம் என தெளிவுபடுத்தியுள்ளார். இதனால், வட்டி விகித குறைப்புக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என முதலீட்டாளர்கள் தங்கம் வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர்.

Recommended For You

தங்கம் விலை ஏறி இறங்கிய வரலாறு இருக்கட்டும் தற்போது விலை குறைந்து இருக்கிறது இனிவரும் நாட்களில் தங்கம் விலை இப்படி மந்தமாகவே இருக்குமா அல்லது கடந்த ஆண்டை போலவே மீண்டும் வேகம் எடுக்குமா என்பது தான் சாமானிய மக்கள் தொடங்கி பெரிய பெரிய முதலீட்டாளர்கள் வரை இருக்கக்கூடிய ஒரு கேள்வி. தங்கத்தின் விலை போக்கினை துல்லியமாக கணிக்கும் பெரும் பணக்காரரான ஜான் பால்சன் அளித்துள்ள பேட்டியில் மிக முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

விரைவில் பொதுமக்களுக்கு பேப்பர் கரன்சிகள் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை குறையும் உண்மையான சொத்துக்களான தங்கம் ,வெள்ளி உள்ளிட்டவற்றை நோக்கி மக்கள் வருவார்கள் தங்கம் விலை உயரும் என கணித்துள்லார். அதாவது தங்கம் மீண்டும் ஒரு வளர்ச்சியை நோக்கி செல்ல இருக்கிறது அதற்கான ஒரு ஆரம்ப கட்டத்தில் உள்ளது என அவர் கூறியிருக்கிறார். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குவதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். மே மாதத்தில் மட்டும் மத்திய வங்கிகள் சுமார் 41 டன்கள் தங்கம் வாங்கி இருப்பதை குறிப்பிடும் அவர் நீண்ட கால அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நஷ்டம் இல்லை திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

You May Also Like

கடந்த 30 ஆண்டுகளில் மூன்று முறை தங்கத்தின் விலை தனது வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து கிட்டத்தட்ட 40 % சரிந்து பின்னர் மீண்டு எழுந்து வந்திருக்கிறது. அப்படி பார்த்தால் தற்போது தங்கம் விலை உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் 3500 டாலர்கள் வரை சென்று மீண்டும் ஒரு வரலாற்று உச்சபட்ச விலையை நோக்கி பயணம் செய்யும் என்பதே பெரும்பாலான நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தங்கம் விலை உயர்வு என்பது நாளை அல்லது நாளை மறுநாள் என உடனடியாக நடந்து விடாது. குறிப்பிட்ட வாரங்களுக்கு பிறகு படிப்படியாக விலை உயர்ந்து ஒரு மைல்கல்லை எட்டிய பிறகு தங்கம் விலை வேகமாக உயர தொடங்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நீண்ட கால அடிப்படையில் தங்கம் முதலீட்டை திட்டமிடுபவர்களுக்கு தற்போது ஒரு அரிய வாய்ப்பு என கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+