தங்கத்தில் செய்யும் முதலீடு எப்போதுமே நம்மை கைவிடாது என சொல்லப்படுவது உண்டு. அதனை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டுமே தங்கம் விலை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆண்டில் தொடக்கத்தில் விலை உயர்ந்த தங்கம் பிப்ரவரி தொடங்கி தற்போது வரை பெரிதாக உயராமல் ஒரு வரம்பிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் கடந்த சில மாதங்களாக பெரிதாக உயரவில்லை என்றாலும் கடந்த ஓராண்டு என கணக்கிட்டு பார்த்தால் அது தந்த லாபம் நம்மை வியக்க வைக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அன்று சென்னையில் 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 11,608 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவே இந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 15,475 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 24 கேரட் தூய தங்கம் விலை 33% விலை உயர்ந்துள்ளது. அதே போல 22 கேரட் ஆபரண தங்கம் என பார்த்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 10,640 ரூபாய்க்கு தான் விற்கப்பட்டது. ஆனால் அதுவே ஓராண்டு கழித்து இந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி 14,185 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஆபரண தங்கத்தின் விலையும் 33% உயர்வு கண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒரு நபர் 5 லட்சம் ரூபாய் கொடுத்து தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 6.66 லட்சம் ரூபாயாக உயர்வு கண்டிருக்கும். இதனால் தான் தங்கம் விலை ஏறினாலும் ஒரு பொட்டு தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என மக்கள் கடைகளுக்கு செல்கிறார்கள், இயன்றவரை நகைசீட்டு போட்டாவது தங்கம் வாங்குகிறார்கள்.
தற்போதைய சூழலில் ஒரு சவரன் ஆபரண தங்கம் வாங்க வேண்டும் என்றால் கூட அதற்கு 1.30 லட்சமாவது தேவை. அது பலரது 3 மாத சம்பளம். ஆனால் இந்த விலை உயர்வு வாய்ப்பை பயன்படுத்தி பலரும் பழைய தங்கத்தை விற்று அதற்கு புது நகையாக வாங்கி கொள்கின்றனர். இந்திய தங்க நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் சுரேந்திர மேத்தா, பழைய நகைகளை மாற்றிவிட்டு, புதிய மற்றும் குறைந்த எடை கொண்ட நகைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என கூறுகிறார்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் தங்கம் விற்பனை குறைந்திருந்தது என்றாலும் , இனி பண்டிகை காலம் மற்றும் அடுத்து வரவிருக்கும் திருமண சீசனை முன்னிட்டு, மீண்டும் தங்கம் விற்பனை அதிகரிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.
தங்கம் விலை ஏறினாலும் தங்கம் வாங்கும் ஆர்வம் மக்களிடையே குறையவில்லை மாறாக குறைந்த எடை கொண்ட தங்கம் வாங்குவது, பழசுக்கு புதுசு என புது வழிமுறைகளை மக்கள் கையில் எடுத்துள்ளனர் என்கிறார். இதற்கிடையே நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை உயர தான் போகிறது எனவே இந்த விலை குறைவு தங்கம் வாங்குவதற்கான ஒரு வாய்ப்பாக மக்கள் பார்க்க வேண்டும் என தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


