தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. உலகளவில் பாதுகாப்பான முதலீடு என்பதால் அனைவரும் போட்டி போட்டு கொண்டு இதில் முதலீடு செய்வதே விலை உயர்வுக்கு காரணம்.
ஜனவரி மாதம் 10 கிராம் தங்கத்தின் விலை 78,000 ரூபாயாக இருந்து, ஏப்ரல் மாதத்தில் 93,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதாவது மூன்று மாதத்திலேயே 10 கிராம் தங்கத்தின் விலை 15,000 ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வரக்கூடிய நிலையில் உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர்கள் வாரன் பஃபெட் தான் தங்கத்தில் முதலீடு செய்யப் போவதில்லை என கூறியுள்ளார்.

வாரன் பஃபெட் இதற்கு முன்பு ஒரு முறை தன்னுடைய முதலீட்டாளர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தங்கம் முதலீடு தொடர்பாக அவர் சில கருத்துகளை தெரிவித்திருந்ததாக ஃபின்ஷாட்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. இதில் "கற்பனை செய்து பாருங்கள் உலகத்தில் இருக்கும் அனைத்து தங்கத்தையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பெரிய கனசதுரம் இருக்கிறது, அதன் அளவு 1 லட்சத்து 70,000 மெட்ரிக் டன்கள், அதன் மதிப்பு 9.6 ட்ரில்லியன் டாலர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த 9.6 ட்ரில்லியன் டாலர்கள் பணத்திற்கு நீங்கள் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய விவசாய நிலத்தை வாங்கலாம் 400 மில்லியன் ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினால் உங்களுக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர்கள் வருமானமாக கிடைக்கும் அல்லது உலகிலேயே மிகவும் லாபம் தரக்கூடிய நிறுவனமான எக்ஸான் மொபைல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என வாரன் பஃபெட் கூறுகிறார்.
அடுத்த 100 ஆண்டுகளில் நீங்கள் வாங்கிய விவசாய நிலம் கோடிக்கணக்கில் மகசூல் தந்து உங்களுக்கு பெரிய வருமானம் கிடைத்திருக்கும், எக்ஸான் மொபைல் நிறுவன பங்குகளை வாங்கி இருந்தால் உங்களுக்கு பல ட்ரில்லியன் டாலர்களுக்கு டிவிடெண்ட் கிடைத்திருக்கும். ஆனால் நீங்கள் வாங்கி வைத்த அந்த தங்க கனச்சதுரம் அப்படியே இருக்கும். அதை நீங்கள் தொடலாம், அதை பார்த்து பெருமைப் படலாம் ஆனால் உங்களால் அதை பணமாக்க முடியாது என கூறியிருக்கிறார்.
தங்கம் லாபத்தை தராது ,டிவிடெண்ட் தராது அல்லது எந்த ஒரு பொருளாதார மதிப்பையும் தராது அது அப்படியே இருக்கும், ஆனால் பங்குகளில் செய்யப்படும் முதலீடுகள் வளர்ச்சி அடையும் வருமானத்தை கொடுக்கும் நீண்ட கால அளவில் செல்வத்தை உருவாக்கும் என வாரன் பஃபெட் கூறுகிறார்.
ஒரு நபர் 1995ஆம் ஆண்டு 1 லட்சம் ரூபாயை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 16.5 லட்சம் ரூபாய் அதுவே சென்செக்ஸில் உள்ள பிரதான பங்கில் முதலீடு செய்து இருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 25 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால் அப்படி இருந்தும் ஏன் நாம் பங்குகளில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவதற்கு பயம் தான் காரணமாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் சிறந்த லாபம் தரும் முதலீடாக தங்கத்தை விட பங்குகளே இருக்கும் என்பதே வாரன் பஃபெட் கூறும் அறிவுரை ஆகும்.


Click it and Unblock the Notifications