தங்கம் விலை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த 12 நாட்களில் சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 8000 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. உலக சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,000 டாலரில் இருந்து 4,400 டாலராக உயர்ந்து நிற்கிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் குறித்து உலகப்புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும் முதலீட்டாளருமான பீட்டர் ஷிப் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் சரிவை சந்தித்தாலும், இது ஒரு தற்காலிகமான திருத்தமே என கூறி வந்தோம், அதற்கேற்ப இப்போது விலை கூடுகிறது, நீண்டகால அடிப்படையில் தங்கம் மீண்டும் பெரும் ஏற்றத்தை காணும் என அவர் உறுதியாக கூறுகிறார்.

2008-இல் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியின் போது தங்கம் எவ்வாறு பெரும் சரிவை சந்தித்து, பின் ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்ததோ, அதே போன்ற ஒரு சூழல் இப்போதும் இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்த நேரத்தில் தங்கம் சுமார் 32% சரிவை சந்தித்தாலும், அடுத்த சில ஆண்டுகளில் 178% வளர்ச்சியை எட்டியது. அதேபோன்ற ஒரு வரலாறு இப்போது மீண்டும் நிகழக்கூடும் என்கிறார்.
ஈரான் போர் மற்றும் பிற காரணங்களால் அரசாங்கங்களின் நிதி பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இது பணவீக்கத்தை தூண்டும் ஒரு முக்கிய காரணி என்கிறார். இதனால் அமெரிக்க டாலரின் வலிமை குறையும் அப்போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தை தேடி வருவார்கள். அது நடக்க தொடங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் சேமித்து வருகின்றன. இந்த தேவை தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தும் என சுட்டுக்காட்டுகிறார். போர் போன்ற பதற்றமான சூழல்கள் தற்காலிகமாக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை நீண்டகால அடிப்படையில் பொருளாதார நெருக்கடிகளையே உருவாக்குகின்றன. இது தங்கத்தின் தேவையை எப்போதும் உயர்த்தும் ஒரு காரணியாகவே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
எந்தவொரு விலை சரிவும் முதலீட்டாளர்களுக்கு ஒரு Buying Opportunity என கூறும் பீட்டர் ஷிப், ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர்கள் என்ற மைல்கல்லை கடக்கும் என தெரிவிக்கிறார். விரைவில் 5000 டாலர் என அவர் கூறுவதன் மூலம் தங்கம் விலை இப்போதுள்ள விலையை விட 13.64% உயரும் என அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை 1,13,600 ரூபாய் இதில் 13.64% விலை உயர்வு என்றால் ஒரு சவரன் தங்கம் 1.30 லட்சம் ரூபாய் என்ற அளவை எட்டும். அதாவது இப்போதுள்ள விலையை விட சவரனுக்கு 16,000 ரூபாய் விலை அதிகரிக்கும் அதுவும் விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.
சந்தையின் தற்போதைய ஏற்ற இறக்கங்களை கண்டு முதலீட்டாளர்கள் அச்சமடைய தேவையில்லை என்றும், தங்கத்தின் மீதான அடிப்படை தேவையும், பொருளாதார சூழலும், தங்கம் நீண்டகாலத்தில் மிகப்பெரிய முதலீட்டு சொத்தாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாக பீட்டர் ஷிப் திட்டவட்டமாக கூறுகிறார்.


Click it and Unblock the Notifications

