தங்கம் விலை: வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் விலை என்ன ஆகும்? ஐசிஐசிஐ வெளியிட்ட ரிப்போர்ட்

தங்கம் விலை கடந்த ஒரு வார காலமாக சரிந்து வருகிறது. குறிப்பாக கடந்த திங்கள் முதல் இன்று வரையிலான ஒரு வார காலத்திலேயே 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு 4000 ரூபாய்க்கும் மேல் குறைந்துவிட்டது. இன்று ஒரு சவரன் தங்கம் 1.10 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை சரிவு இப்படியே நீடிக்குமா, அல்லது கடந்த ஆண்டை போல அக்டோபரில் இருந்து மீண்டும் உயர்ந்து டிசம்பருக்குள் உச்சத்தை தொடுமா என்பது தான் பலருக்கும் இருக்கும் கேள்வி. இந்நிலையில் வரும் டிசம்பருக்குள் தங்கம் விலை என்ன ஆகும் என்பதற்கான கணிப்பை ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ளது.

தங்கம் விலை: வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் விலை என்ன ஆகும்? ஐசிஐசிஐ வெளியிட்ட ரிப்போர்ட்

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,140 டாலர்களாக தற்போது வர்த்தகமாகிறது. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,200 டாலர் முதல் 4,600 டாலர் என்ற வரம்பிற்குள் வர்த்தகமாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தங்கம் விலையானது மேலும் உயர்ந்து, 4,600 டாலர் முதல் 5,000 டாலர் வரை என்ற வரம்பை எட்டும் என அந்த அறிக்கை கணித்துள்ளது.

உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் இந்தியாவிலும் விலை உயரும். ஏனெனில் நாம் தங்கத்தை பெரும்பாலும் இறக்குமதி தான் செஉய்கிறோம். எனவே ஐசிஐசிஐ கணிப்பின்படி இந்தியாவிலும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் தங்கம் விலை கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. டிசம்பருக்குள் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 11% விலை உயரும் என கணித்துள்ளது. எனவே இன்றைய ஆபரண தங்கம் விலையோடு ஒப்பிட்டால் ஒரு சவரன் தங்கம் விலை 1.22 லட்சம் ரூபாயை தொட வாய்ப்புள்ளது.

Also Read

தற்போது தங்கம் விலை குறைந்திருந்தாலும் ஆண்டு இறுதியில் மீண்டும் தங்கத்தில் முதலீடு அதிகமாகும் என கூறுகிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை தொடர்ந்து வாங்குகின்றன அதனை இன்னமும் நிறுத்தவில்லை என்பதை காரணமாக கூறுகிறது. மேலும் தங்கம் விலை சரிவு என்பது தற்காலிகமானது தான் என சுட்டிக்காட்டுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 9 சதவீதம் வரை உயர்ந்து சிறப்பான லாபத்தை கொடுத்த தங்கம், செப்டம்பர் மாதத்தில் கடுமையான திருத்தத்தை சந்தித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 8 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது. இதற்கு உலகளவில் நிலவும் பணவீக்க பிரச்சினைகள் முக்கிய காரணம் என்கிறது.

Recommended For You

அடுத்ததாக ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வு, எதிர்பார்த்ததை விட வலுவாக உள்ள அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை தரவுகள் ஆகியவை தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைந்துள்ளன. மேலும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பும் தங்கத்தில் இருந்து முதலீட்டாளர்களை வெளியேற செய்துள்ளது.

ஆனால் இவை அனைத்துமே குறுகிய கால காரணிகள் தான் என கூறுகிறது. தங்கம் விலையில் தற்காலிக சரிவுகள் ஏற்பட்டாலும், கட்டமைப்பு ரீதியான சில வலுவான காரணங்கள் தங்கத்தின் விலையை தாங்கி பிடிக்கும் என ஐசிஐசிஐ அறிக்கை கூறுகிறது. அமெரிக்க அரசின் கடன்கள் அதிகரிப்பு, அமெரிக்க டாலரை சார்ந்திருக்கும் தன்மையை குறைத்துவிட்டு, நாடுகள் தங்கத்தை அதிகம் வாங்கி வைப்பது முக்கியமாக தங்கம் விலையை உயர்த்தும் என்கிறது.

அதாவது குறுகிய காலத்தில் தங்கம் விலை சரிவுகளை சந்தித்தாலும், உலகளாவிய பொருளாதார நிலவரங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கம் வாங்கும் நடவடிக்கைகள் காரணமாக, வரும் மாதங்களில் தங்கம் மீண்டும் ஏற்றம் காணும் என தெரிவித்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+