அக்டோபர் மாதம் தங்க நகைபிரியர்களுக்கான மாதம் என கூறும் அளவுக்கு தாறுமாறாக தங்கம் விலை குறைந்துள்ளது. மாத தொடக்கத்தில் சற்றே ஏறுமுகமாக காணப்பட்ட தங்கம் மாத இறுதியில் வேகமாக சரிந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. தீபாவளி பண்டிகை வேறு நெருங்குவதால் தங்கம் விலை குறைவது மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை மாறவில்லை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று விற்கப்பட்ட விலைக்கே இன்றும், தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,070 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,04,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த வாரம் திங்கள்கிழமை லேசாக விலை உயர்ந்த தங்கம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என நான்கு நாட்களும் பெரிய சரிவை சந்தித்தது. பின்னர் சனிக்கிழமை கிராமுக்கு 10 ரூபாய் விலை கூடியது.அப்படி பார்த்தால் செவ்வாய் முதல் வெள்ளி வரையிலான 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 510 ரூபாய் விலை குறைந்தது. ஒரு சவரன் என பார்த்தால் 4,080 ரூபாய் விலை சரிந்தது.
ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை 1.34 லட்சத்தை தொட்ட நிலையில் கிட்டத்தட்ட 30,000 ரூபாய் விலை சரிந்துள்ளது. எனவே ஒரு சவரன் தங்கம் தீபாவளிக்குள் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லுமா என்ற கேள்வி எழுகிறது. அக்டோபரில் மட்டும் தங்கம் விலையை பார்த்தால் 1ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது ஒரு கிராமுக்கு 610 ரூபாயும், ஒரு சவரனுக்கு 4,880 ரூபாயும் விலை சரிந்துள்ளது. அதாவது தங்கம் விலை 4.50% குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்னும் 4% வரை விலை குறைந்தால் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் செல்ல வாய்ப்புள்ளது. கடந்த ஒரு வாரத்திலேயே தங்கம் விலை பெருமளவில் குறைந்துள்ளது. அதே போக்கு இந்த வாரமும் காணப்பட்டால் நிச்சயம் தங்கம் விலை 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்ல வாய்ப்புள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,258 ரூபாய்க்கும் 10 கிராம் 1,42,580 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,695 ரூபாய்க்கும் ஒரு சவரன் 85,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 220 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.20 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. நீண்ட மாதங்களுக்கு பின் வெள்ளி இப்படி பெரும் சரிவில் இருக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கி மேலும் ஒரு வட்டி உயர்வு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து வருகின்றன. முதலீட்டாளர்கள் வட்டி லாபம் தராத தங்க முதலீட்டை கைவிட்டு பத்திரங்களின் பக்கம் செல்கின்றனர். இதனால் உலக சந்தையில் தங்கத்தின் டிமாண்ட் குறைந்து ஒரு அவுன்ஸ் 3,995 டாலர்களாக குறைந்துள்ளது. உலக சந்தையில் தங்கம் விலை குறைவதே இந்தியாவிலும் தங்கம் விலை குறைய காரணம்.
இந்த வாரத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி தொடர்பான முக்கிய முடிவினை எடுக்க உள்ளது. அதில் வட்டி உயர்வுக்கான சிக்னல் இருந்தால் தங்கம் விலை இன்னமும் குறையும், இல்லை எனில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே ஏறி இறங்கும். தீபாவளிக்குள் தங்கம் விலை 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லுமா என்பதை அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு தான் தீர்மானிக்க போகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

