ரூ.9,000 குறைந்த தங்கம் விலை..!! இப்போ தங்கம் வாங்கலாமா? இன்னும் விலை குறையும் என காத்திருக்கலாமா?

ஜூன் மற்றும் ஜூலை மாதம் தங்கத்துக்கான மாதம் என கூறும் வகையில் தங்கம் விலை தாறுமாறாக குறைந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி தொடங்கி இன்று வரையிலான 48 நாட்களில் தங்கம் விலை 9000 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது.தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஜூன் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் 14,500 ரூபாயாக விற்கப்பட்டது. அப்படி என்றால் ஒரு சவரன் 1,16,000 ரூபாயாக விற்கப்பட்டது. இதன் பின்னர் படிப்படியாக விலை குறைந்து வந்தது. ஜூலையிலும் விலை சற்றே ஏறி மீண்டும் இறங்குமுகமாக மாறிவிட்டது.

இன்றைய தினம் தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,365 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,05,080 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதாவது இந்த 48 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 1135 ரூபாயும் ஒரு சவரனுக்கு 9,080 ரூபாயும் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் தங்கம் விலை குறைந்தால் நகைக்காக நாம் கொடுக்கும் செய்கூலி, சேதாரமும் குறையும். எனவே தான் தங்கம் விலை குறையும் போதே நகை வாங்கினால் செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து பல ஆயிரங்களை மிச்சப்படுத்த முடியும்.

ரூ.9,000 குறைந்த தங்கம் விலை..!! இப்போ தங்கம் வாங்கலாமா? இன்னும் விலை குறையும் என காத்திருக்கலாமா?

இந்தியாவில் இன்னும் 2 மாதங்களுக்கு பின் பண்டிகை காலம் தொடங்கும். அபோது டிமாண்ட் அதிகரித்து மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளதாகவே சொல்லப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு அக்டோபரில் இருநெது தான் தங்கம் விலை வேகமாக உயர தொடங்கியது.

இதற்கிடையே உலகளாவிய தங்க சந்தை மற்றும் முதலீட்டு நிலவரம் குறித்த கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியின் சமீபத்திய அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பால் தங்கம் விலையில் அழுத்தங்கள் காணப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை அதிகரித்துள்ளன என்பதால் இது தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் என கணித்துள்ளது.

Also Read

கோல்ட்மேன் சாக்ஸின் ஆய்வாளர் லினா தாமஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, மே மாதத்தில் மட்டும் உலகளாவிய மத்திய வங்கிகள் சுமார் 81 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இது 2022-க்கு முந்தைய சராசரி அளவான 17 டன் என்ற அளவை விட பல மடங்கு அதிகம் என்கிறார்.புவிசார் அரசியல் மற்றும் நிதி சார்ந்த அபாயங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, தங்கள் நாட்டு இருப்புகளில் தங்கத்தின் பங்கை மத்திய வங்கிகள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு பல ஆண்டு கால திட்டமாக தொடரும் என கூறுகிறார்.

அமெரிக்க வட்டி விகிதங்கள் உயரலாம் என்ற எதிர்பார்ப்பால், குறுகிய காலத்தில் தங்கத்தின் விலையில் ஒருவித அழுத்தம் நீடிக்கும் ஆனால் அதன் பின் விலை உயரும் என கணித்துள்ளார். 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு டிராய் அவுன்ஸ் 4,900 டாலரை எட்டும் என கோல்ட்மேன் சாக்ஸ் வலுவாக கணித்துள்ளது.

Recommended For You

தற்போதைய நிலையில் தனியார் முதலீட்டுப் போர்ட்ஃபோலியோக்களில் தங்கத்தின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. இதற்கு ஈரான் போர் முக்கிய காரணம். ஆனால் மத்திய வங்கிகளைப் போலவே தனியார் முதலீட்டாளர்களும் தங்கத்தை நோக்கி திரும்பும் காலம் வந்துவிட்டது என்பதால் தங்கம் விலை ஏறுமுகமாக மாறும் என விரைவில் அது நடக்கும் என கணித்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+