உலக அளவில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இது ஒரு "குமிழி" (bubble) போன்று வெடிக்கும் அபாயம் உள்ளதாக ஜே.பி. மோர்கன் தரகு நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜெய்மி டிமான் எச்சரித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) அன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கம் $3,743.39-க்கு வர்த்தகமானது. அதிகபட்சமாக $3,759.02 என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. அமெரிக்காவில் டிசம்பர் மாதத்திற்கான தங்க ஃபியூச்சர்கள் 0.1% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $3,779.50 ஆக இருந்தது.

அமெரிக்க டாலரின் மதிப்பு 0.1% சரிந்ததால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கத்தை குவிப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணம். மும்பையில் நடந்த ஜே.பி. மோர்கன் இந்தியா முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய டிமான், உலகளாவிய சந்தைகளில் நிலவும் அதிகப்படியான நம்பிக்கை, இந்த வரலாற்று உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது என்றார்.
மேலும் "நாம் ஒரு 'குமிழி' நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எங்கு இருக்கிறோம் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், அதிகப்படியான நேர்மறை உணர்வு, பங்குகள், தங்கம், கிரிப்டோ என அனைத்தின் விலையையும் உயர்த்தி வைத்துள்ளது " என்று டிமான் தெரிவித்தார்.
பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் டிமானின் எச்சரிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளன.. கடந்த வாரம்,அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது.தொழிலாளர் சந்தை நிலைமைகளைக் காரணம் காட்டி, மேலும் வட்டி குறைப்புகளுக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியது. குமிழி நிலைக்கு செல்கிறது என்றாலே விலை குறைய வாய்ப்புள்ளது என்றே அர்த்தம். ஆனால் அது எவ்வளவு விரைவாக நடக்கும் என்பது தான் தெரியவில்லை.
சந்தை ஆய்வாளர்கள் தங்கத்தில் உடனடி திருத்தங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். மூத்த சந்தை ஆய்வாளர் கெல்வின் வோங் அளித்துள்ள பேட்டியில், "தங்கத்தின் குறுகிய காலப் போக்கு இன்னும் ஏற்றத்துடன் தான் உள்ளது. ஆனால், ஒரு நாள் வர்த்தகத்தில், தொழில்நுட்பக் காரணங்களால் ஒரு சிறிய பின்வாங்குதலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
வோங், ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கான முக்கிய ஆதரவு நிலைகளாக $3,710 மற்றும் $3,690 ஐக் கணித்துள்ளார். முதலீட்டாளர்கள் இப்போது ஃபெட் தலைவர் ஜெரோம் பவலின் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) உரையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், ஃபெடரல் ரிசர்வ் உள்ளேயே விவாதம் தொடர்கிறது. புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் ஸ்டீபன் மிரான், மத்திய வங்கி தனது பணவியல் கொள்கையின் இறுக்கத்தை தவறாக மதிப்பிடுவதாகவும், தீவிர வட்டி குறைப்புகள் இல்லாமல் வேலைவாய்ப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச தங்கம் விலை நிலவரம் இந்தியாவிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதால் சர்வதேச நகர்வுகளையும் கவனித்து முதலீட்டாளர்கள் முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications