2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில் பல மடங்கு உயர்ந்து சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. ஆண்டு தொடக்கத்தை விட தற்போது 80 சதவீதத்திற்கும் மேல் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு போலவே 2026ஆம் ஆண்டிலும் 80 சதவீதத்திற்கும் மேல் தங்கம் விலை உயர்ந்தால் அடுத்த ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் என்பதை தற்போது நாம் கணக்கீடு செய்து பார்க்கலாம் .
2025 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமின் விலை 7,150 ரூபாயாக இருந்தது. இது அப்படியே படிப்படியாக உயர்ந்து ஏப்ரல் மாதத்தில் ஒரு கிராம் 9,000 ரூபாயை கடந்தது. செப்டம்பர் மாதத்தில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. இதனை அடுத்து அக்டோபரில் 11 ஆயிரம் ரூபாய் என்றும் தற்போது 13,000 ரூபாயையும் கடந்துவிட்டது.

ஜனவரி ஒன்றாம் தேதி அன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 57,200 இருநூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்றைய தினம் 1, 04,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி பார்க்கும்போது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை தங்கம் விலை ஒரு கிராமுக்கு சராசரியாக ஒரு கிராமுக்கு 5850 ரூபாயும் ஒரு சவரனுக்கு 46 , 800 ரூபாயும் உயர்வு கண்டிருக்கிறது .
அந்த வகையில் பார்த்தால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 81.82 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது. கிட்டதட்ட 82 சதவீதம் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகமாக வாங்கியது ,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டிருக்கும் வர்த்தக மோதல் , அமெரிக்க பொருளாதார மந்த நிலை, டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவிழந்து வருவது என பல்வேறு காரணங்களும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டன.
2025 ஆம் ஆண்டு போலவே 2026லும் தங்கத்தின் விலை சுமார் 82 சதவீதம் உயர்ந்தால் அடுத்த ஆண்டு டிசம்பரில் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கீடு செய்து பார்க்கலாம். தற்போது ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 81.82 சதவீதம் உயர்வு காண்கிறது என்றால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 23, 637 ரூபாய் என்ற அளவை எட்டும் . இதன்படி பார்த்தால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,89,000 ரூபாய் என்ற விலையை எட்டும்.
இருந்தாலும் பல்வேறு நிறுவனங்களும் தங்கம் விலை இந்த ஆண்டு போலவே பெரிய அளவில் உயராது என்றே கணிக்கின்றனர். தங்கம் விலை 20 முதல் 40 சதவீதத்திற்குள் உயர வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications