இந்தியாவின் தங்கம் என்பது ஆபரணமாக அணியும் ஒரு பொருள் மட்டுமல்ல. அது ஒரு குடும்பத்தின் அந்தஸ்து, அவசர காலத்திற்கு உடனே பணமாக மாறும் ஒரு பொருள், நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுடனும் கலந்திருக்கும் ஒரு உலோகம் என கூறி கொண்டே போகலாம்.
இந்தியர்கள் மத்தியில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தாலே உடனே தங்கமாக வாங்கி வைத்துவிடுவார்கள். சிறு சிறுக நகைசீட்டு போட்டு தங்க நகை வாங்குவது இந்திய பெண்களுக்கு உள்ள கைவந்த கலை. பல ஆண்டுகளாக தங்கத்தின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்து இந்திய குடும்பங்களுக்கு லாபத்தை தான் தந்திருக்கிறது.

அந்த வகையில் 2016இல் அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வாங்கிய ஒரு சிறிய தங்க மோதிரத்தின் மதிப்பு, இன்று எவ்வளவாக உயர்ந்திருக்கும் என்பதை கணக்கிட்டு பார்த்தால் தங்கம் என்றுமே மோசம் செய்யாத முதலீடு என்பது நமக்கு தெரிந்துவிடும். நீங்கள் 2016 ஆம் ஆண்டில் 5 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்க மோதிரத்தை வாங்கினீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது 1 கிராம் தங்கம் விலை சுமார் 3000 ரூபாய் தான். அப்படி பார்த்தால் 5 கிராம் விலை 15,000 ரூபாய். இத்துடன் செய்கூலி, சேதாரம் , ஜிஎஸ்டி ஆகியவற்றை சேர்க்கலாம்.
2016இல் 5 கிராம் மோதிரம் ஒன்றை நீங்கள் 18,000 ரூபாய்க்கே வாங்கி இருப்பீர்கள். அதுவே 2026ஆம் ஆண்டில் இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,070 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 5 கிராமின் விலை 72,000 ரூபாய். இதில் செய்கூலி, ஜிஎஸ்டி சேரும் போது 5 கிராம் எடை கொண்ட தங்கம் மோதிரத்தை சுமார் 82,000 ரூபாய் தந்து வாங்க வேண்டும்.
அட்தாவது நீங்கள் 2016-ல் சுமார் 18,000 ரூபாய்க்கு வாங்கிய ஒரு மோதிரத்தின் இன்றைய சந்தை மதிப்பு 5 மடங்கு உயர்ந்து, கிட்டத்தட்ட 82,000 ரூபாயைத் தொட்டுள்ளது. அதாவது எளிமையாக தங்கத்தில் செய்த முதலீடு 5 மடங்கு லாபம் தந்துள்ளது. எனவே தான் தங்கம் விலை குறையும் போதெல்லாம் வாங்கி போடுங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் தற்போதைய சூழலில் தங்கம், விலை வெகுவாக குறைந்துள்ளது. ஜனவரி 29இல் ஒரு சவரன் 1.33 லட்சத்திற்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 1.12 லட்சத்திற்கு விற்பனையாகிறது. அதாவது உச்ச பட்ச விலையில் இருந்து சுமார் 20000 ரூபாய் விலை குறைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கம் வாங்கி போட்டால் 2036இல் அதன் மதிப்பு இதே போல 5 மடங்கு பெருகி இருக்க வாய்ப்புள்ளது. அதாவது 82,000 ரூபாய் முதலீடு 4 லட்சம் ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


