உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. ஆகஸ்ட்டில் தொடர்ந்து 20 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை திடீரென கடந்த வாரம் முதல் விலை குறைந்து வருகிறது. இந்த விலை குறைவு நீடிக்குமா அல்லது செப்டம்பரில் இருந்து விலை உயர தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முதலில் தங்கம் விலை சரிவுக்க்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம். ஜூன், ஜூலை மாதங்களில் தங்கம் விலை சரிந்தது, ஆகஸ்ட் மாதம் விலை உயர்வு கண்டது. இந்நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை ஈட்டும் நோக்கில் தங்கத்தை விற்பனை செய்து லாபம் பார்க்க தொடங்கினர். இதனை Profit booking என அழைக்கிறோம். அதாவது ஓரளவு விலை உயர்ந்த உடன் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று லாபம் பார்த்துள்ளனர். இதனால் தான் விலை குறைந்ததுள்ளது.

ஆகஸ்ட் மாதம் தொடங்கி குறுகிய காலத்தில் தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்ததால், தொழில்நுட்ப ரீதியாக அதிகப்படியான வாங்கும் நிலையை தாண்டி சென்றது தங்கம். இதனால் ஏற்பட்ட இயற்கையான திருத்தமே (Correction) இந்த விலை சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் தான் விலை சரிவு நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு நிபுணர்கள் விளக்கம் தருகின்றனர். அதாவது தங்கம் விலையில் சில சரிவுகள் கண்டாலும், வரவிருக்கும் மாதங்களில் மற்றும் ஆண்டின் இறுதிக்குள் தங்கம் மற்றும் வெள்ளி மீண்டும் ஏற்றம் காண பல வலுவான காரணங்கள் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலகளவில் ஈரான் போர், உக்ரைன் போர் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாக கருதும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகளை தொடர்ந்து தக்க வைப்பார்கள் எனவே தங்கம், வெள்ளிக்கான டிமாண்ட் எப்போதுமே குறையாது.
உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் பொருட்டு, தொடர்ந்து அதிக அளவில் தங்கத்தை குவித்து வருவது தங்கம் விலை உயர காரணமாக இருக்கும். எனவே தங்கம், வெள்ளி விலைகள் குறைந்திருப்பது தற்காலிக விலை சரிவு தானாம். முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
கடந்த ஆண்டில் கூட அக்டோபர் மாதம் முதல் தான் தங்கம் விலை வேகமாக உயர தொடங்கியது. எனவே இந்த ஆண்டும் அது ரிபீட் ஆகும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கம் மீண்டும் ஒரு Bullish Rallyஐ பார்க்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர்.
எனவே இப்போது தங்கம், வெள்ளி விலைகள் குறைகிறதே இனி இப்படி தான் இருக்கும் என மக்கள் நினைக்க கூடாது விரைவிலேயே தங்கம் விலை எகிற போகிறது என monarch pms என்ற நிறுவனம் கூறுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை 25% வரை உயர வாய்ப்புள்ளது என கணிப்பு வெளியிட்டுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5000 டாலர்களை மிஞ்சும் என கூறுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

