ஒரே நாளில் ஏறி இறங்கிய தங்கம், வெள்ளி விலை: இறக்குமதி வரி உயர்வுக்கு பின் எது வாங்கினால் லாபம்?

பொதுமக்கள் தங்கம், வெள்ளி வாங்குவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6%லிருந்து 15%ஆக உயர்த்தியது. இந்தியா முழுவதுமே தற்போது பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இதுதான் இருக்கிறது. அரசு இறக்குமதி வரியை உயர்த்தியதால் தங்கம் , வெள்ளியின் விலைகளும் உயர்ந்து விட்டன.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,20, 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 16,418 ரூபாய்க்கும் 10 கிராம் 1,64,120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தவரை இன்றைய தினம் ஒரு கிராம் 315 ரூபாய்க்கு ஒரு கிலோ 3 .15 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் ஏறி இறங்கிய தங்கம், வெள்ளி விலை: இறக்குமதி வரி உயர்வுக்கு பின் எது வாங்கினால் லாபம்?

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதால் அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டும் , கையில் இருக்கும் டாலரைக் கொண்டு கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதால் மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டு கொண்டுள்ளது. இதனால் தங்கம் இறக்குமதி குறையும் என அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் தான் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது.

Also Read

உலக தங்க கவுன்சில் வெளியிடக்கூடிய தரவுகளின் படி இந்தியாவில் ஒரு சதவீதம் இறக்குமதி வரி உயர்ந்தால் கூட வாடிக்கையாளர்கள் மத்தியில் தங்கத்திற்கான தேவை 6.4 டன் குறைந்து விடுமாம். தற்போது 9 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது அப்படி பார்க்கும்போது இந்தியாவில் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் தங்கத்திற்கான டிமாண்ட் 57 டன்கள் வரை குறைந்திருப்பது தெரிய வருகிறது. ஆனால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு கள்ளச் சந்தை மூலம் இந்தியாவிற்குள் தங்கம் வருவதை ஊக்குவிக்கும் என ஆகுமென்ட் ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் ரெனிஷா சைனானி கவலை தெரிவித்து இருக்கிறார்.

ஒரே நாளில் ஏறி இறங்கிய தங்கம், வெள்ளி விலை: இறக்குமதி வரி உயர்வுக்கு பின் எது வாங்கினால் லாபம்?

இதற்கிடையே Gold - silver ratio எனப்படும் தங்கம் - வெள்ளி இடையிலான விகிதம் 55க்கும் கீழ் குறைந்திருக்கிறது. தங்கம் வெள்ளி ரேஷியோ என்பது எவ்வளவு அவுன்ஸ் வெள்ளியைக் கொண்டு ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்க முடியும் என்பதை கணக்கிடும் ஒரு அளவீடு. தங்கம் - வெள்ளி விகிதம் 80 ஐ விட உயரும்போது வெள்ளியை விட தங்கத்தின் மதிப்பு வேகமாக உயர்கிறது என அர்த்தம். அதுவே குறைகிறது என்றால் தங்கத்தை விட வெள்ளியின் மதிப்பு அதிகரிக்கிறது என அர்த்தம்.

அப்படி பார்க்கும்போது தற்போது இந்த ரேஷியோ 55 என்ற அளவில் இருக்கிறது. எனவே வெள்ளி விலை தங்கத்தை விட சிறப்பாக உயர்ந்து வருகிறது என்பதை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் குறுகிய காலத்தில் தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என தெரிவித்திருக்கிறது டாடா மியூச்சுவல் ஃபண்டு. அதாவது ஐந்து சதவீதம் கூடலாம் ஐந்து சதவீதம் குறையலாம் என கணிப்பதாக கூறியிருக்கிறது. ஈரான் அமெரிக்கா இடையிலான மோதல் பங்குச்சந்தையில் இந்த ஏற்ற இறக்கத்திற்கு காரணமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறது.

Recommended For You

நீண்ட கால அடிப்படையில் தங்கம் சிறந்த வளர்ச்சியை தரும் என்பதால் முதலீட்டாளர்கள் விலை குறையும்போது தங்கத்தை வாங்கி முதலீடு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தி இருக்கிறது. வெள்ளிக்கு தொழில் ரீதியாக தேவை அதிகமாக இருக்கிறது என்பதால் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் வெள்ளியில் முதலீடு செய்யலாம் என கூறுகிறது. குறுகிய காலத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை கண்டு கொள்ள வேண்டாம் என்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+