2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு கண்டு மற்ற முதலீடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து விட்டது. பாரம்பரியமாக பாதுகாப்பான முதலீடு தங்கம் தான் என்ற பெயரை தொடர்ந்து அது தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
அனைத்து ஆண்டுகளிலும் தங்கம் விலை இதேபோல உயருமா என்றால் வரலாற்றை பார்க்கும்போது அப்படி நிகழ்ந்தது கிடையாது . சர்வதேச காரணிகள் தான் இந்த ஆண்டு தங்கத்தின் விலை இப்படி பல மடங்கு உயர்வதற்கு காரணமாக அமைந்துவிட்டன. 2025 போலவே 2026இலும் தங்கம் விலை உயருமா அல்லது மற்ற ஆண்டுகளைப் போலவே ஒரு சராசரி வளர்ச்சியை தான் எட்டுமா என்று கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் முக்கியமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

உலக சந்தையில் பெரிய கமாடிட்டிகள் என்றால் அது கச்சா எண்ணையும் தங்கமும் தான் . 2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஆண்டா அல்லது கச்சா எண்ணெய்க்கான ஆண்டா கோல்டுமேன் சாக்ஸ் குறிப்புரையாக அனுப்பி இருக்கிறது. இதன் மூலம் வங்கிகள் எந்த பொருளை வாங்குவது என்ற முக்கிய முடிவினை எடுக்கும்.
2025ஐ போலவே 2026ஆம் ஆண்டிலும் தங்கம் விலை உயரும் என கூறி இருக்கிறது . கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவில் தான் இருக்கும் என கூறும் கோல்டு மேன் சாக்ஸ், உலக சந்தையில் சர்ப்பிளஸாக தற்போது கச்சா எண்ணெய் இருப்பதால் அதன் விலை உயர்வதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. எனவே பலரும் தங்கத்தை தான் வாங்குவார்கள் தங்கம் விலை தான் உயரும் என தெரிவித்துள்ளது.

தங்கம் விலை வரும் ஆண்டில் ஒரு அவுன்ஸ் 4900 டாலர்களை எட்டும் என கணித்துள்ளது. இதன்படி நாம் கணக்கீடு செய்தால் இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ஆயிரம் ரூபாயை கடக்கும் என கூறலாம் . 15 ஆயிரம் ரூபாயை கடக்கிறது என்றால் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 1 .25 லட்சம் ரூபாயை எட்டும். அதாவது தற்போது இருப்பதை விட சுமார் 25% வரை விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளாது.
மத்திய நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்குவது, வங்கி டெபாசிட்களுக்கான வட்டிகள் குறைந்தது , ஈடிஎப் முதலீடுகள் அதிகரித்தது , கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை குறைவது , டாலரின் மதிப்பு சரிவது ஆகியவை தங்கத்தின் விலையை உயர்விலேயே வைத்திருக்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் குறிப்பிடுகிறது.
இந்தியாவில் ஆபரண தங்கம் விலை ஏற்கனவே ஒரு சவரன் ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 1.25 லட்சம் வரை எட்டலாம் என்ற கணிப்பு சாமானிய மக்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications