1 கிராம் தங்கம் விலை ரூ.1 லட்சமாகும்!! அதுவும் இத்தனை ஆண்டுகளுக்குள் நடக்கும் – ராபர்ட் கியோசாகி

3 மாதங்களுக்கும் மேலாக நீடித்த ஈரான் போர் வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. ஈரானும் அமெரிக்காவும் வரும் வெள்ளியன்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. இத்துடன் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் சீராக உள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியது இந்தியாவுக்கு நல்ல செய்தி. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலைகள் குறையும். அதே வேளையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த உடன் தங்கம் விலை உயர தொடங்கிவிட்டது. நேற்று ஒருநாள் மட்டும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 100 டாலர் வரை உயர்ந்து 4,300 டாலருக்கு விற்பனையானது. இன்றும் 4,343 டாலருக்கு தொடர்ந்து வர்த்தகமாகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை 100 டாலருக்கும் மேல் உயர்ந்து அதே விலையில் நீடிப்பதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 கிராம் தங்கம் விலை ரூ.1 லட்சமாகும்!! அதுவும் இத்தனை ஆண்டுகளுக்குள் நடக்கும் – ராபர்ட் கியோசாகி

உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததால் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்தது. இதன் மூலம் ரெஸ்ட் மோடில் இருந்த தங்கம் பீஸ்ட் மோடுக்கு திரும்ப தொடங்கியுள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் தங்கம் விலை உயர்வை தடுக்கவே முடியாது என்கின்றனர் நிபுணர்கள். ரிச் டேட் புவர் டேட் புத்தக எழுத்தாளரும், முதலீட்டாளருமான ராபர்ட் கியோசாகி தங்கம் தன் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது எனவும், 2035ஆம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 35,000 டாலருக்கு விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

Also Read

ராபர்ட் கியோசாகி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீண்ட நாட்களுக்குப் பின் தங்கத்தின் விலை ஏற தொடங்கி இருக்கிறது. ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கம் 100 டாலருக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வை நீங்கள் கவனித்தீர்களா? ஒருவேளை இந்த விலையேற்றத்தை நீங்கள் கவனிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் தங்கத்தின் விலையேற்றம் இப்போது தான் தொடங்கியுள்ளது என கூறியுள்ளார்.

வரும் 2035-ம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 35,000 டாலராக உயரும் என நான் உறுதியாக நம்புகிறேன். 35இல் தொடங்கி 35 இல் முடியும் அற்புதமான எண்கள் மற்றும் தேதிகள் இவை என கூறியுள்ள அவர், பணத்தை பணமாகவே சேமித்து வைத்திருப்பவர்கள் இழப்பை சந்திப்பார்கள். நீங்கள் தோல்வியாளராக இருக்க வேண்டாம். உங்கள் பணத்தைக் கொண்டு தங்கம், வெள்ளி, பிட்காயின், எதீரியம் மற்றும் கச்சா எண்ணெயை வாங்குங்கள் என கூறுகிறார்.

பல ஆண்டுகளாக நான் இப்படித் தான் முதலீட்டை மேற்கொண்டு வருகிறேன். போலியான காகித பணத்தை மாற்றி, உண்மையான சொத்தை சேமித்து வருகிறேன். தோல்வி அடைந்தவனாக இருப்பது எனக்கு பிடிக்காது. நீங்கள் தோல்வி அடைவதையும் நான் விரும்பவில்லை. முதலீட்டு உலகில் கவனமாக இருங்கள் என ராபர்ட் கியோசாகி கூறியுள்ளர்.

Recommended For You

அதாவது பணத்தை அப்படியே வங்கி சேமிப்பு கணக்கில் வைக்காமல் தங்கம், வெள்ளி , பிட்காயின் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள் என்பதே அவரது அறிவுரை. ஒரு அவுன்ஸ் தங்கம் 35,000 டாலர் செல்லும் என்பது அவரது கணிப்பு. இப்போதுள்ள 4,300 டாலர் என்ற விலையை விட 2035இல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின விலை சுமார் 8 மடங்கு உயரும் என்கிறார் ராபர்ட் கியோசாகி.

You May Also Like

அவரது கணிப்பை இந்திய சந்தைக்கு பொருத்தி பார்த்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது 2035இல் 24 கேரட் மற்றும் 22 கேரட் தங்கம் விலை 8 மடங்கு உயர்ந்திருக்கும். இன்று சென்னையில் 1,12,000 ரூபாய்க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இது இன்னும் 8 மடங்கு அதிகரிக்கும் என்றால் வரும் 2035இல் ஒரு சவரன் ஆபரண தங்கம் 9 லட்சம் ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கும். அதாவது ஒரு கிராம் தங்கம் விலை 1.12 லட்சமாக இருக்கும் என்பதே இவரது கணிப்பு.எனவே மொத்தமாக தங்கம் வாங்குவது என்பது இனி எட்டாக்கனி தான். தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் சிறுக சிறுக முதலீடு செய்தால் மட்டுமே இனி வரும், காலங்களில் தங்கம் வாங்க முடியும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+