உலகளவில் பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படும் நிலையில் அண்மைக்காலமாக முதலீட்டாளர்கள் பார்வை கிரிப்டோ கரன்சிகள் பக்கம் திரும்பி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு பொறுத்தவரை தங்கம் எப்படி வரலாறு காணாத உச்சத்தை எட்டியதோ அதேபோல பிட்காயினின் மதிப்பும் இந்த ஆண்டு பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
தங்கம் Vs பிட்காயின் :2025 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு பிட்காயின் மற்றும் தங்கம் ஆகிய இரண்டில் எது அதிக லாபம் தந்தது, இந்த முதலீடுகளில் உள்ள ஆபத்துகள் என்னென்ன, தொடர்ந்து இவற்றில் முதலீடு செய்யலாமா என்பதை விரிவாக இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

தங்கம்: 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3500 டாலர்களை கடந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையிலான இந்த எட்டு மாத காலத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 29 சதவீதம் உயர்ந்திருக்கிறது . மார்க்கெட் வாட்ச் என்ற இணையதளம் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது.
தங்கம் உயர்வுக்கு என்ன காரணம்: சர்வதேச பொருளாதார மந்த நிலை , புவிசார் அரசியல் பதற்றங்கள், கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் குவியும் முதலீடுகள், மத்திய வங்கிகள் அதிகம் தங்கம் வாங்கி வைப்பது , டாலர் மதிப்பு சரிவு, ஆகிய காரணங்களால் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி பலரும் படையெடுத்தது தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டன.
பிட்காயின் : கிரிப்டோ கரன்சிகளில் பிரபலமாக இருக்கக்கூடிய பிட்காயின் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 25% லாபத்தை தந்திருக்கிறது. தங்கத்துடன் ஒப்பிடும்போது பிட்காயின் அளித்த லாபம் குறைவுதான் இருந்தாலும் சமீப காலமாக அமெரிக்க அரசாங்கம் மற்றும் பல்வேறு நாடுகளும் கிரிப்டோ நாணயங்களை அங்கீகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருவது பிட்காயின் போன்றவற்றின் மதிப்புகள் உயர்வதற்கு காரணமாக இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில்: ஸ்டாட் மியூஸ் என்ற தளம் வெளியிட்டுள்ள தரவின்படி பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பிட்காயின் மதிப்பு 984 சதவீதம் உயர்ந்திருக்கிறது 2020ல் இருந்து 2025 வரையிலான காலகட்டத்தில் தங்கத்தின் மதிப்பு 37 சதவீதம் தான் உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்த முதலீடாக தங்கம் இருந்தாலும் கடந்த ஐந்தாண்டு காலமாக பார்க்கும்போது பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபத்தை ஈட்டி தந்திருக்கிறது.
தங்கத்தின் சாதக, பாதகம்: பிட்காயின் மற்றும் தங்கம் ஆகிய இரண்டுமே அதற்கான சாதக பாதகங்கள் கொண்டுள்ளன என்பதை மறந்து விடக்கூடாது . இரண்டுமே லாபம் அளிக்கக்கூடிய முதலீட்டு கருவிகள் தான். தங்கத்தை பொறுத்தவரை இந்திய பார்வையில் பார்க்கும்போது தங்கத்தை நாம் முதலீடாக மட்டும் இல்லாமல் நம்முடைய அந்தஸ்தாகவும் பார்க்கிறோம் அதிக அளவில் தங்கத்தை நகைகளாக வாங்க கூடியவர்கள் நாம். பணவீக்கத்துக்கு நிகரான அதே வேலையில் பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் தங்கம் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது .தங்கத்தின் ஏற்ற இறக்கம் சராசரியாக 15% தான்.
பிட்காயினின் சாதக, பாதகம்: பிட்காயினை பொருத்தவரை இந்தியாவில் அது இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு முதலீடு கிரிப்டோ கரன்சிகளில் பல்வேறு செயலிகள் வாயிலாக நாம் முதலீடு செய்யலாம். ஆனால் அது லாபம் பார்க்கும் போது அரசுக்கு பல மடங்கு தொகையை நாம் வரியாக செலுத்த வேண்டியிருக்கும். இந்திய அரசாங்கம் இதுவரை இந்த முதலீட்டை அங்கீகரிக்கவில்லை. ஆனால் பிட்காயினின் ஏற்ற இறக்கங்கள் பார்த்தால் திடீரென வரலாறு காணாத உச்சத்தையும் ஒரே நாளில் பல மடங்கு சரிவையும் காணும் ஒரு முதலீடு . எனவே அதிக ஏற்ற இறக்கம் கொண்ட முதலீடாக பிட்காயின் இருக்கிறது .
யாருக்கு எந்த முதலீடு பொருந்தும் : நிலையான பாதுகாப்பான பணவீக்கத்திற்கு எதிரான லாபம் தர வேண்டும், நம்பகத்தன்மை கொண்ட ஒரு முதலீடாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு தங்கம் சிறந்த ஒரு முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது. பிட்காயினை பொருத்தவரை நான் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறேன் ஒரு சிறிய முதலீடு செய்கிறேன் அந்த பணம் போனாலும் பரவாயில்லை லாபம் வந்தால் எனக்கு பெரிய அளவில் வர தானே போகிறது என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு பிட்காயினில் செய்யும் முதலீடு பொருத்தமானதாக இருக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications