தீபாவளி பருவத்தின் தொடக்க விழாவான தந்தோராஸ் உடன் இன்று முதல் விழாக்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நகைக் கடைகளில் கூட்டம் களை கட்டத் தொடங்கியுள்ள நிலையில், வரவிருக்கும் நாட்களில் இன்னும் விற்பனை, தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தந்தோராஸ், சம்வாட் உள்ளிட்ட காலங்களில் பொதுவாக தங்கத்தின் மீது உணர்வுபூர்வமாக ஆர்வம் அதிகரிக்கும்.
தங்கம் Vs பிட்காயின்
தங்கம் மிக மோசமான காலகட்டத்திலும் பாதுகாப்பு புகலிடமாக இருப்பதால், நிலவி வரும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் நிச்சயம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தற்போதும் கூட பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறதா? என்பது சந்தேகமாகவும் உள்ளது. ஏனெனில் கிரிப்டோகரன்சிகள் இன்று சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளன.
டிஜிட்டல் தங்கம்
பிட்காயின் என்பது டிஜிட்டல் தங்கமாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்த காலகட்டத்தில், இந்த தீபாவளி பருவத்தில் எது சிறந்தது? முதலீட்டாளர்களின் விருப்பம் எது?
பிட்காயினை டிஜிட்டல் தங்கம் என்று கூறும் நிபுணர்கள், தங்கத்தினை போலவே பிட்காயினும் பல பண்புகளை கொண்டது.
எது பெட்டர்?
கடந்த 5 தீபாவளிகளில் தங்கத்தினை காட்டிலும் பிட்காயின் லாபகரமானதாக இருந்தது. அக்டோபர் 19,2017ல் தீபாவளி அன்று 312.5% ஏற்றத்தினை கண்டது. தங்கம் 29.5% ஏற்றத்தினை கண்டது.
அதே நேரம் நவம்பர் 6, 2018 அன்று தீபாவளியன்று பிட்காயின் 196.3%மும், தங்கம் 36.% ஏற்றத்திலும் இருந்தது.
பிட்காயின் பெட்டரா?
பிட்காயினுடன் ஒப்பிடும்போது தங்கத்தில் லாபம் குறைவாகவே காணப்பட்டது. எனினும் 2017-க்கு பிறகு பிட்காயின் மதிப்பானது சரியத் தொடங்கியது. 2019ல் பிட்காயின் மற்றும் தங்கம் முறையே 99.9% மற்றும் 11% ஆக குறைந்தது. எனினும் பிட்காயின் இன்றும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.
எது பெஸ்ட்
நவம்பர் 14, 2020ல் தீபாவளி பிட்காயின் 18.7% ஏற்றத்திலும், பிட்காயின் 11.6% ஏற்றம் கண்டது. கடந்த ஆண்டில் பிட்காயின் 68.9%மும், தங்கம் 6.7% சரிவிலும் காணப்பட்டது. ஆக கடந்த 5 ஆண்டுகளில் இரண்டையும் ஒப்பிடும்போது தங்கத்தில் லாபம் குறைவு தான் என்றாலும், இது நிலையானதாக தோறுகிறது. பிட்காயின் சற்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே பெரியளவில் மாற்றம் காணவில்லை.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க



Click it and Unblock the Notifications