சமீப காலமாகவே பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி ஆகியவற்றில் முதலீடு செய்யலாம் என மக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. இதில், நிலையான வருமானத்தை விரும்புவோர், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிலையான வைப்பு நிதிகளில் முதலீடு செய்து வருகின்றனர். அதே நேரத்தில், பெரிய லாபத்தை எதிர்பார்ப்பவர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் பக்கம் போகிறார்கள். ஆனால், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு என்பது நம் இந்தியாவில் காலங்காலமாக நடைமுறையில் இருந்து தான் வருகிறது.
இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம், பாதுகாப்பான முதலீட்டுக்கான தேவை மேலும் அதிகரித்துள்ளதால், பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால், தங்கம் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும், பலர் தங்கத்தை நகையாக வாங்குவதை விட, ஈடிஎஃப்களில் (Gold ETF) முதலீடு செய்து நல்ல லாபம் பெறுகின்றனர். நகையாக வாங்கினால் அதற்கு செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவை இருக்கும். ஆனால், அதற்கு பதிலாக கோல்டு ஈடிஎஃப்களில் முதலீடு செய்தால், எந்த பிரச்சனையும் இருக்காது.

அதேபோல், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களை அவற்றின் பிசிகல் வடிவத்தில் வைத்திருக்காமல், அதிலிருந்து பயனடைய விரும்பும் முதலீட்டாளர்கள் அதை மின்னணு வடிவத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்க ஈடிஎஃப்களில் மிக அதிக தூய்மை கொண்ட தங்கத்தின் விலையைக் கண்காணிக்கும் அதேசமயம், வெள்ளியின் விலையையும் கண்காணிக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி ரூ.1,99,999 முதலீட்டில் ஒரு வருடத்தில் எது பணக்காரர்களாக்கியுள்ளது..? சிறந்த முதலீடு தங்கமா..? வெள்ளியா..? என்பதை தற்போது பார்ப்போம்.
தங்க ஈடிஎஃப்களில் ஒரு வருட காலத்தில் 32.97% வருமானத்தை அளித்துள்ளது. இந்த ஈடிஎஃப்க்கு ரூ.658 கோடி அளவிலான மூலதன மேலாண்மைச் சொத்துகள் (Assets Under Management - AUM) உள்ளது. அதே நேரத்தில் மே 9, 2025 தேதியிலான இதன் நிகர சொத்து மதிப்பு (Net Asset Value - NAV) ரூ.9.4145 ஆக இருந்தது. தங்கத்தின் உள்நாட்டு விலைக்கு எதிராக கணக்கிடப்பட்ட இந்த ஈடிஎஃப், ஜனவரி 2024ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து 0.38% வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. 0.38% செலவு விகிதத்தில், இந்த நிதி குறைந்தபட்ச மொத்த முதலீடாக ரூ.100ஐ கொண்டுள்ளது.
தங்க ஈடிஎஃப்களில் ஒரு வருடத்திற்கு முன் ரூ.1,99,999 என முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.2,65,938.67 ஆக உயர்ந்துள்ளது. அதாவது அதே உச்ச நிலை பெற்ற தங்க ஈடிஎஃப்-யில் 32.97% வருமானம் கிடைத்துள்ளது. இது முதலீட்டின் விலை உயர்வால் ஏற்பட்ட ஒரு கணிசமான வளர்ச்சியாகும்.
அதேபோல், வெள்ளி ETF கடந்த ஒரு வருட காலத்தில் 16.63% வருமானம் வழங்கியுள்ளது. இந்த ஈடிஎஃப்-க்கு ரூ.190 கோடி அளவிலான மூலதன மேலாண்மைச் சொத்துகள் (AUM) உள்ளது. மே 9, 2025 தேதியிலான இதன் நிகர சொத்து மதிப்பு (NAV) ரூ.106.1007 ஆக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன் ரூ.1,99,999 என்ற தொகையை உச்ச நிலை பெற்ற வெள்ளி ஈடிஎஃப் -யில் முதலீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.2,33,258.83 ஆக உயர்ந்துள்ளது. இதுவும் 16.63% வளர்ச்சியைக் குறிக்கிறது. இது வெள்ளி விலையின் அதிகரிப்பால் ஏற்பட்ட லாபமாகும்.
மற்ற மியூச்சுவல் ஃபண்டுகளைப் போல் அல்லாமல், தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்-களை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யலாம். ஒரு முதலீட்டாளர் மற்ற பங்குகளைப் போல அதை வாங்கவும், விற்கவும் முடியும். ஒரு ஈடிஎஃப்-இன் நிகர சொத்து மதிப்பு (NAV)-இன் விலை, பங்கு விலையைப் போலவே வர்த்தக நேரங்களில் உயர்ந்து குறையும். தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்-களில் வர்த்தகம் செய்ய ஒருவருக்கு டீமேட் கணக்கு இருக்க வேண்டும். அவர்கள் முதலீட்டு செயலியில் இருந்து நேரடியாகவோ அல்லது ஒரு தரகர் மூலமாகவோ ஈடிஎஃப்-களை வாங்கிக் கொள்ளலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்களில் குறுகிய காலத்தில் விகிதங்களைக் கணிப்பது கடினம். ஆனால், இதன் விலைகள் வேகமாக உயரும் போது பயனடையலாம். அத்தகைய ஏற்றங்கள் எவ்வளவு காலம் தொடரும் என்பதை கணிக்க முடியாது என்றாலும், நீண்ட காலத்திற்கு ஈடிஎஃப்-களில் முதலீடு செய்வது மிகவும் பொருத்தமானது.
More From GoodReturns

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?



Click it and Unblock the Notifications