தங்கம் Vs வெள்ளி.. எது சிறந்த முதலீடு.. நீங்க எதில் செய்ய போறீங்க?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய ஆண்டுகளாகவே விலையுயர்ந்த உலோகங்களான தங்கம் மற்றும் வெள்ளி என்பது முதலீட்டு சந்தையில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

 

இதனை வெறும் ஆபரணம் என்பதை தாண்டி சிறந்த முதலீடாகவும் மக்கள் பார்க்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக தற்போது சர்வதேச சந்தையில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது முதலீட்டு ரீதியாக அதிகரித்துள்ளது.

பங்கு சந்தைகள் மோசமான சரிவினை காணும்போதெல்லாம், முதலீட்டு கண்ணோட்டத்தில் தங்கம் ஆதாரவாக அமைகிறது.

தங்கமா? வெள்ளியா?

தங்கமா? வெள்ளியா?


உலகம் தற்போது பெரும் மந்த நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், விலைமதிப்பற்ற உலோக முதலீட்டிற்கான தேவை மீண்டும் அதிகரித்து வருகிறது. எனினும் தங்கம் மற்றும் வெள்ளி இவை இரண்டில் எது சிறந்தது? இவை இரண்டும் ஒரு சிறந்த ஹெட்ஜிங் ஆக உள்ளது. ஆக பணவீக்கத்திற்கு எதிராக ஒரு சிறந்த கருவியாகவும் பார்க்கப்படுகிறது.

சந்தையில் ஏற்ற இறக்கம்

சந்தையில் ஏற்ற இறக்கம்

வரலாற்று ரீதியாக தங்கத்தினை விட வெள்ளியில் ஏற்ற இறக்கம் என்பது அதிகமாகும். தொழிற்துறை உலோகமான வெள்ளியின் தேவையானது அதிகரித்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சி கண்ணோட்டமானது மாறி வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம். தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் இருந்து வந்தாலும், தங்கம் விலையில் சிறிது மாற்றம் இருந்தாலும், அது வெள்ளி விலையில் பெரியளவில் மாற்றம் ஏற்பட வழிவகுக்கலாம். இது அதிக லாபம் கொடுக்க வழிவகுக்கலாம். எனினும் அதே அளவுக்கு ரிஸ்கும் அதிகம் எனலாம். வெள்ளி விலையுடன் ஒப்பிடும்போதும் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி இருக்கும்.

பணப்புழக்கம்
 

பணப்புழக்கம்

தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே அதிக பணப்புழக்கம் புழங்கும் ஒரு முதலீடாக பார்க்கப்பட்டாலும், தங்கம் மற்றும் வெள்ளியின் சந்தைக்கான அளவு 25.4 மற்றும் 4.4 ட்ரில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு உலோகங்களும் பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்பட்டாலும், இருப்பினும் தங்கத்தின் தேவை வெள்ளியை விட 6 மடங்கு அதிகம் எனலாம்.

உலோகத்தின் தேவை

உலோகத்தின் தேவை

இரு உலோகங்களும் விலை மதிப்பற்ற உலோகங்களாக உள்ளன. அதேசமயம் தொழிற்துறை உலோகங்களாகவும் விரிவான தேவையை கொண்டுள்ளன. தங்கம் கண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ், தெர்மல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதே வெள்ளியானது எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், மருந்துகள் மற்றும் உற்பத்தி துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

சேமிப்பு இடம்

சேமிப்பு இடம்

வெள்ளியை சேமிக்க அதிக இடம் தேவைப்படும். வெள்ளி தங்கத்தினை விட அடர்த்தியானது. இது வெள்ளியை முதலீடு செய்யும்போது சிக்கலாக மாறலாம். வெள்ளி ஆக்சிஜனேற்றம் செய்யாததால் நச்சுத்தன்மையற்றதாகவும் உள்ளது.

மலிவு விலை

மலிவு விலை

தங்கத்தினை விட வெள்ளியானது மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் தங்கம் ஒரு விலை உயர்ந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. அரசாங்கமும் வங்கிகளும் தங்கத்தை சேமிக்கின்றன. வெள்ளி அரிதாகவே சேமிக்கப்படுகிறது.

தங்கமா Vs வெள்ளியா?

தங்கமா Vs வெள்ளியா?

இந்தியாவில் தங்கம் மிகவும் விரும்பப்படும் உலோகங்களில் ஒன்றாக உள்ளது. இது தங்கம் ஒரு பிரபலமான முதலீட்டு விருப்பமாகவும் உருவெடுத்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் தங்கத்தினை வாங்குவது சில சவால்களை ஏற்படுத்துகிறது. ஆக தங்கத்திற்கு மாற்றாக தங்க பத்திரங்கள், டிஜிட்டல் தங்கம், தங்கம் இடிஎஃப் உள்ளிட்ட முதலீடுகளில் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold Vs Silver: which is better investment for you amid inflation?

Precious metals such as gold and silver have gained prominence in the investment market in recent years. But which is better between gold and silver?
Story first published: Wednesday, November 23, 2022, 20:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X