தங்கம் Vs வெள்ளி : எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் ?- நிபுணர்கள் பதில்..

உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. கடந்த வாரம் தங்கத்தின் விலை சற்றே குறைந்தாலும் தற்போது அதைவிட அதிகமாக விலை ஏறி விட்டது. சர்வதேச காரணிகளை பொறுத்துதான் தங்கத்தின் விலையில் ஏற்றத்தையும் இறக்கத்தையும் நாம் காண முடிகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரம், சர்வதேச பொருளாதார சூழல் ,குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் ,வரிவிதிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் பார்க்கும்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்த வண்ணம் தான் இருக்கிறது.

தங்கம் Vs வெள்ளி : எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் ?- நிபுணர்கள் பதில்..

இன்றைய தங்கம் விலை என்ன?: 10 கிராம் தங்கத்தின் விலை எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 98,000 ரூபாயாகவும் வெள்ளி ஒரு கிலோ 1 லட்சம் ரூபாய் என்ற அளவையும் எட்டியுள்ளன. அமெரிக்க பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகள், சர்வதேச அளவிலான பொருளாதார பதற்றங்கள், தங்கத்தின் விலையை மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்கின்றன.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை: உலக முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பமான மனநிலை ஏற்பட்டு இருப்பதால் பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். சர்வதேச அளவில் பார்க்கும்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,370 டாலர்களாக இருக்கிறது, வியாழக்கிழமை அன்று இந்தியாவில் தங்கத்தின் விலையை பார்க்கும் போது 10 கிராம் தங்கத்தின் விலை எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 98,610 ரூபாய் என உயர்வை கண்டது.

வெள்ளியின் விலை ஏன் உயர்கிறது:அதே வேளையில் வெள்ளியின் விலை சர்வதேச அளவில் பார்க்கும்போது ஒரு அவுன்சின் விலை 34.50 டாலர்களாக இருக்கிறது .இது கடந்த ஏழு மாதங்களில் இல்லாத உயர்வாகும். எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,06,609 ரூபாய் என 0.23 சதவீதம் உயர்ந்திருந்தது. சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்றம் அடைந்து வரக்கூடிய இந்த சூழலில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாமா அல்லது வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து நிபுணர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தங்கம் Vs வெள்ளி எதில் முதலீடு செய்யலாம்: ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளராக இருக்கக்கூடிய ஜிகார் திரிவேதி மிண்ட் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தங்கம் எப்பொழுதுமே ஒரு பாதுகாப்பான முதலீடாக தான் ,இருக்கும் சில சமயம் தங்கத்தின் விலையில் சில திருத்தங்களை நாம் எதிர்பார்க்கலாம் . வெள்ளியை பொருத்தவரை பல்வேறு துறைகளிலும் தொழிற்சாலைகளிலும் இதற்கான டிமாண்ட் அதிகரித்து இருக்கிறது. மின்சார வாகனங்கள் ,சோலார் பேனல்கள் உள்ளிட்டவற்றில் வெள்ளி பயன்படுத்தப்படுவதால் அதற்கான தேவை அதிகரித்து அதன் விலையும் அதிகரித்து வருகிறது என கூறுகிறார்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 34.50 டாலருக்கு மேல் செல்லும்போது நிச்சயம் அது 36 டாலர்கள் என்ற மதிப்பை எட்டும் என அவர் கணித்திருக்கிறார். எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஜூலை சில்வர் ஃபியூச்சர்ஸின் மதிப்பு 1,10,000 வரை உயரக் கூடும் என்றும் சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை உயரும் போது இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் வெள்ளியின் மதிப்பு அதிகரிக்கும் என கூறுகிறார்.

எப்படி முதலீட்டை பிரிக்கலாம்: எனவே தங்கமா அல்லது வெள்ளியா என பிரித்து பார்க்காமல் முதலீட்டாளர்கள் தங்களுடைய போர்ட்போலியோவில் 5 முதல் 8% தங்கத்திலும் , 10 முதல் 15 சதவீதத்தை வெள்ளியிலும் முதலீடு செய்யலாம் என அவர் பரிந்துரை செய்கிறார். தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யும் போது ஒரு சமமான அணுகுமுறை இருந்தால் இரண்டிலும் வரக்கூடிய ஏற்ற இறக்கங்களை கடந்து நம்மால் லாபம் பார்க்க முடியும் என அவர் கூறுகிறார்.

ஏன் வெள்ளி மீது நம்பிக்கை அதிகரிப்பு: கேடியா அட்வைசரி இயக்குனரான அஜய் கேடியா தற்போது பெரும்பாலான முதலீட்டாளர்கள் வெள்ளியை நோக்கி திரும்பி இருக்கிறார்கள் எனக் குறிப்பிடுகிறார். தொழிற்சாலைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதற்கான டிமாண்ட் அதிகரித்து எதிர்காலத்தில் அதன் விலை பல மடங்கு உயரும் என பலரும் நம்பிக்கையோடு அதில் முதலீடு செய்கின்றனர் என சுட்டிக்காட்டி உள்ளார். நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தங்கத்தை விட வெள்ளியின் விலை அதிகமாக உயரும் என தெரிவிக்கும் அவர் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி 1,04,800 என்ற அளவை கடந்து விட்டால் 1,08,600 என்ற அளவை எட்டும் என கணிப்பு வெளியிட்டுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+