தங்கம் Vs எஸ்ஐபி: மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் எது அதிக லாபம் தரும்?

சென்னை: முதலீடு என்றாலே தங்கம் என்ற நிலை தற்போது மாறி இருக்கிறது. பலரும் ஈக்விட்டி மற்றும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கின்றனர். தங்கத்தை பொறுத்தவரை வரலாற்று ரீதியாக பார்க்கும் போது முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் லாபத்தை தான் தந்திருக்கிறது .மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஈக்விட்டி சந்தைகளை பொருத்தவரை நீண்ட காலம் காத்திருந்தவர்களுக்கு சிறந்த லாபம் தந்து இருக்கிறது.

நாம் இந்த கட்டுரையில் எஸ்ஐபி முறையில் செய்யும் முதலீடு நல்ல லாபம் தருமா அல்லது தங்கத்தில் செய்யும் முதலீடு நல்ல லாபம் தருமா என்பதை ஒப்பீடு செய்து பார்க்க இருக்கிறோம். உதாரணமாக மாதத்திற்கு 5,000 ரூபாயை அடுத்த 15 ஆண்டு காலத்திற்கு தங்கத்தில் முதலீடு செய்தால் நமக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும், அதுவே எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை கணக்கீடலாம்.

தங்கம் Vs எஸ்ஐபி: மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் எது அதிக லாபம் தரும்?

எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு மற்றும் தங்கத்தில் செய்யும் முதலீடு ஆகிய இரண்டுமே அதற்கு உரிய சாதக பாதகங்ளை கொண்டுள்ளன. உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கும், அதன் பிறகு சற்று குறைந்தாலும் பெரிய அளவிலான விலை குறைவை நாம் பார்க்க முடியாது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்டில் நாம் தாக்கங்களை காண முடியும்.

எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டு : எஸ்ஐபி முறையில் மாதம் 5 ,000 ரூபாயை நாம் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என வைத்துக் கொள்ளலாம். முதலீடு செய்யும் காலம் 15 ஆண்டுகள் . மாதாந்திர எஸ் ஐபி தொகை 5,000 ரூபாய், ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் தரக்கூடிய திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என வைத்து கொள்வோம்.

மாதாந்திர முதலீடு = ரூ.5,000

முதலீடு செய்யும் ஆண்டுகள் = 15

ஆண்டுக்கு தரும் லாபம் =12%

15 ஆண்டுகள் செய்த முதலீடு = ரூ.9,00,000

கிடைக்கும் லாபம் = ரூ. 16,22,879

15 ஆண்டு முடிவில் கிடைக்கும் மொத்த பணம் = ரூ.25, 22,879

தங்கத்தில் முதலீடு: 15 ஆண்டு காலத்திற்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் தங்கத்தில் முதலீடு செய்கிறோம் என வைத்துக் கொள்ளலாம். தங்கம் சராசரியாக ஆண்டுக்கு 10 சதவீதம் லாபம் தருகிறது என வைத்துக் கொள்வோம். அப்படி பார்க்கும்போது

மாதாந்திர முதலீடு = ரூ.5,000

முதலீடு செய்யும் ஆண்டுகள் = 15

ஆண்டுக்கு தரும் லாபம் =10%

15 ஆண்டுகள் செய்த முதலீடு = ரூ.9,00,000

கிடைக்கும் லாபம் = ரூ. 11,89,621

15 ஆண்டு முடிவில் கிடைக்கும் மொத்த பணம் = ரூ.20, 89,621

தங்கத்தை பொறுத்தவரை பொருளாதார நிலையற்ற தன்மை காணப்படும் ஆண்டுகளில் தான் அதன் விலை வேகமான உயர்வை காணும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தற்போது வரையில் இந்த ஆறு மாத காலத்திலேயே தங்கம் 25 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை தந்துவிட்டது. ஆனால் எல்லா ஆண்டுகளிலும் இது அவ்வாறு இருக்கும் என கருத முடியாது .இதனால் தான் ஆண்டு சராசரி வருமானமாக 10 சதவீதத்தை கொண்டு கணக்கீடு செய்கிறோம்.

நாம் நம்முடைய முதலீட்டை திரும்ப எடுக்கக்கூடிய காலத்தில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தால் மியூச்சுவல் ஃபண்டை விட அது அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதலீடாக இருக்கலாம் . இந்த இரண்டிலும் நமக்கு கிடைக்கும் லாபங்களை அந்த சமயத்தில் தங்கத்தின் விலை நிலவரம் மற்றும் பங்குச்சந்தை நிலவரம் ஆகியவற்றை பொறுத்துதான் அமையும். மொத்தத்தில் இந்த இரண்டு முதலீடுகளுமே முதலீட்டாளர்களுக்கு பண வீக்கத்தை விட அதிக லாபம் தரும் முதலீடுகளாக தான் இருக்கின்றன. எனவே இரண்டிலுமே பிரித்து பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு சந்தை ஏற்ற இறக்கம் தங்கம் விலை ஏற்ற இறக்கம என இரண்டின் சாதகங்களிலும் வருமானம் காணலாம்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+