நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கி எச்டிஎஃப்சி வங்கியில் நீங்கள் கிரெடிட் கார்டு வாங்க யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்காக எச்டிஎஃப்சி வங்கி பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி பல்வேறு வகையான ரகங்களில் லைஃப்டைம் ஃப்ரீ கிரெடிட் கார்டுகளை வங்கி வெளியிட்டுள்ளது. இந்த லைஃப்டைம் இலவச கிரெடிட் கார்டுகளை பெற விரும்பினால், இதோ உங்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில முக்கிய கிரெடிட் கார்டுகளை வாழ்நாள் முழுவதும் இலவசமாக வழங்குகிறது. ஆனால் இதற்கான கடைசி வாய்ப்பு ஜனவரி 16, 2025 ஆகும். இந்த இலவச கிரெடிட் கார்டு டிசம்பர் 17, 2024 முதல் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.
எச்டிஎஃப்சி வங்கி வழங்கும் வாழ்நாள் இலவச கிரெடிட் கார்டுகளில் மில்லேனியம், டைனர்ஸ் கிளப், ப்ரிவில்லேஸ், பிஸ் குரோ, பிக்சல் ப்ளே மற்றும் பிக்சல் கோ ஆகிய கிரெடிட் கார்டுகள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக வழங்கப்படும். முதல் வருடத்திற்கு ரெகாலியா கோல்டு கிரெடிட் கார்டுகளையும் வங்கி இலவசமாக வழங்குகிறது.இந்த வாழ்நாள் இலவசச் சலுகைகளுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 17, 2024 முதல் ஜனவரி 16, 2025 வரை மட்டுமே பெறமுடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

அதேபோல், சில முக்கிய கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது என்று வங்கி தெரிவித்துள்ளது. எச்டிஎஃப்சி வங்கி அதன் முதன்மை கிரெடிட் கார்டுகளில் வருடாந்திர கட்டணம் இல்லாத பண்டிகை கால சலுகையையும் வழங்கியுள்ளது. அதில், ஸ்விக்கி எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு, டாடா நியூ பிளஸ் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டாடா நியூ இன்ஃபினிட்டி வங்கி கிரெடிட் கார்டு 31 டிசம்பர் 2024 வரையிலான சலுகைகள் வழங்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல், சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மில்லேனியா கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாதம் 35000 ஆயிரம் சம்பளம் மற்றும் ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாய் ஐடிஆர் சமர்ப்பிப்புடன் சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படுகிறது. மில்லேனியம் கிரெடிட் கார்டு ஆண்டு ஜாயினிங் கட்டணம் ரூ 1000 ஆகும். வாடிக்கையாளர் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் செலவழித்தால் இந்தக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
டைனர்ஸ் கிளப் பிரிவில்லேஜ் கார்டுக்கு மில்லேனியா கார்டுக்கு இணையான ஆரம்ப கட்டணம் இருந்தாலும், வாடிக்கையாளர் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் செலவழித்தால் மட்டுமே வருடாந்திர கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். டைனர்ஸ் கிளப் பிரிவிலேஜ் கார்டு, சுயதொழில் செய்யும் ஐடிஆர்-ஃபைலிங் வருமானம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications