நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி ரூ. 3 கோடி முதல் ரூ.5 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள மொத்த நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது.
எச்டிஎஃப்சி வங்கியில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்றால் அது மிகையாகாது. ரிஸ்க் இல்லாமல் நிலையான வருமானம் பெற விரும்புபவர்கள் எச்டிஎஃப்சி வங்கியில் முதலீடு செய்யலாம்.

தற்போது எச்டிஎஃப்சி வங்கி ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள மொத்த நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது. இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் டிசம்பர் 05 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இப்போது வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளில் பொது வாடிக்கையாளர்களுக்கு 4.75 சதவீதம் முதல் 7.40 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவீதம் முதல் 7.90 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. எச்டிஎஃப்சி வங்கி தற்போது வழக்கமான வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
1 வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு வங்கியானது பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.40 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.90 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
வங்கி இப்போது 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 4.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு 5.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.00 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 90 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.85 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 9 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 7.40 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 7.05 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
வங்கி இப்போது 21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 7.05 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications