வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி (The housing development finance corp Ltd - HDFC) அதன் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினை 10 - 22 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது.
இது அக்டோபர் 22 முதல் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஒப்பிடும்போது இந்த நிதி நிறுவனம் நான்காவது முறையாக டெபாசிட்டுகளுக்கு வட்டியை குறைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை குறைத்த நிலையில், இவ்வங்கி அல்லாத நிதி நிறுவனம் தொடர்ந்து வட்டி விகிதத்தினை குறைத்து வருகிறது. .

இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் ரெகுலரான பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதமாகும்.
- இது 12 - 23 மாதங்களுக்கு, மாத திட்டம் எனில் 5.45% வட்டி விகிதமும், இதுவே காலாண்டு திட்டமெனில் 5.50%மும், இதே அரையாண்டுத் திட்டம் எனில் 5.55% வட்டி விகிதமும், ஆண்டு திட்டத்திற்கு வட்டி விகிதம் கொடுக்கப்படவில்லை. இதுவே மொத்த வட்டி விகிதம் 5.65% ஆகும்.
- இதுவே 24 . 35 மாதங்களுக்கு, மாத திட்டம் எனில் 5.45% வட்டி விகிதமும், இதுவே காலாண்டு திட்டமெனில் 5.50%மும், இதே அரையாண்டுத் திட்டம் எனில் 5.55% வட்டி விகிதமும், ஆண்டு திட்டத்திற்கு 5.65% வட்டி விகிதமும், மொத்த வட்டி விகிதம் 5.65% ஆகும்.
- இதுவே 36 . 59 மாதங்களுக்கு, மாத திட்டம் எனில் 5.75% வட்டி விகிதமும், இதுவே காலாண்டு திட்டமெனில் 5.80%மும், இதே அரையாண்டுத் திட்டம் எனில் 5.85% வட்டி விகிதமும், ஆண்டு திட்டத்திற்கு 5.95% வட்டி விகிதமும், மொத்த வட்டி விகிதம் 5.95% ஆகும்.
- இதுவே 60 . 84 மாதங்களுக்கு, மாத திட்டம் எனில் 5.85% வட்டி விகிதமும், இதுவே காலாண்டு திட்டமெனில் 5.90%மும், இதே அரையாண்டுத் திட்டம் எனில் 5.95% வட்டி விகிதமும், ஆண்டு திட்டத்திற்கு 6.05% வட்டி விகிதமும், மொத்த வட்டி விகிதம் 6.05% ஆகும்.
அரசின் அம்சமான 12 சேமிப்பு திட்டங்கள்.. என்னென்ன திட்டங்கள்.. என்ன சலுகைகள்.. விவரம் என்ன?
ஹெச்டிஎஃப்சி பிரீமியம் பிக்ஸட் டெபாசிட் - ரூ.2 கோடி ரூபாய்க்குள்
- 15 மாதங்கள் - மாத திட்டம் எனில் 5.50% வட்டி விகிதமும், இதுவே காலாண்டு திட்டமெனில் 5.55%மும், இதே அரையாண்டுத் திட்டம் எனில் 5.60% வட்டி விகிதமும், மொத்த வட்டி விகிதம் 5.70% கொடுக்கப்படுகிறது.
- 22 மாதங்கள் - . மாத திட்டம் எனில் 5.60% வட்டி விகிதமும், இதுவே காலாண்டு திட்டமெனில் 5.65%மும், இதே அரையாண்டுத் திட்டம் எனில் 5.70% வட்டி விகிதமும், ஆண்டு திட்டத்திற்கு 5.80% வட்டி விகிதமும், மொத்த வட்டி விகிதம் 5.80% கொடுக்கப்படுகிறது.
- 30 மாதங்கள் - மாத திட்டம் எனில் 5.55% வட்டி விகிதமும், இதுவே காலாண்டு திட்டமெனில் 5.60%மும், இதே அரையாண்டுத் திட்டம் எனில் 5.65% வட்டி விகிதமும், ஆண்டு திட்டத்திற்கு 5.75% வட்டி விகிதமும், மொத்த வட்டி விகிதம் 5.75% ஆகும்.
- 44 மாதங்கள் - மாத திட்டம் எனில் 5.90% வட்டி விகிதமும், இதுவே காலாண்டு திட்டமெனில் 5.95%மும், இதே அரையாண்டுத் திட்டம் எனில் 6.00% வட்டி விகிதமும், ஆண்டு திட்டத்திற்கு 6.10% வட்டி விகிதமும், மொத்த வட்டி விகிதம் 6.10% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் 2 கோடி ரூபாய் வரை
- 33 மாதங்கள் - மாத திட்டம் எனில் 5.65% வட்டி விகிதமும், இதுவே காலாண்டு திட்டமெனில் 5.70%மும், இதே அரையாண்டுத் திட்டம் எனில் 5.75% வட்டி விகிதமும், ஆண்டு திட்டத்திற்கு 5.85% வட்டி விகிதமும், மொத்த வட்டி விகிதம் 5.85% ஆகும்.
- 66 மாதங்கள் - மாத திட்டம் எனில் 6.05% வட்டி விகிதமும், இதுவே காலாண்டு திட்டமெனில் 6.10%மும், இதே அரையாண்டுத் திட்டம் எனில் 6.15% வட்டி விகிதமும், ஆண்டு திட்டத்திற்கு 6.25% வட்டி விகிதமும், மொத்த வட்டி விகிதம் 6.25% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications