இந்தியாவில் மியூச்சவல் பண்ட் சேவைகளை அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்டிஎப்சி மியூச்சவல் பண்ட் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள குளோபல் பண்ட் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
கிரெடிட் சூசி நிறுவனம் உருவாக்கியுள்ள இத்திட்டத்தில் இன்டர்நேஷன்ல் ETF மற்றும் இண்டெக்ஸ் பண்ட் ஆகியவை ஒன்றிணைந்த திட்டமாக இது விளங்குகிறது.
ஹெச்டிஎப்சி மியூச்சவல் பண்ட்
ஹெச்டிஎப்சி-யின் முதல் சர்வதேச மியூச்சவல் பண்ட் திட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ள இத்திட்டம் HDFC Developed World Indexes Fund of Funds (HDWI FoFs) பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம் இந்திய முதலீட்டாளர்களுக்கு உலக நாடுகளில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.
5 குளோபல் பண்டுகள்
HDWI FoF இத்திட்டம் மூலம் செய்யப்படும் முதலீடுகள் 5 குளோபல் பண்டுகளில் முதலீடு செய்யப்படும் இந்தப் பண்டுகள் ஐரோப்பா, ஜப்பான், பசிபிக் (ஜப்பான் இல்லாமல்), கனடா மற்றும் அமெரிக்கா சந்தையைச் சார்ந்து இருக்கும்.
முதலீட்டு அளவு
இந்த 5 சந்தை பண்டுகளில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்போகிறது என்பது ஹெச்டிஎப்சி தான் முடிவு செய்யும், இந்த முடிவை பென்ச்மார்ட் இன்டெக்ஸ் மற்றும் MSCI வோர்ல்டு இன்டெக்ஸ் ஆகியவை அடிப்படையில் முதலீடு செய்ய உள்ளது.
பெரு முதலீட்டாளர்கள்
இந்தியாவில் இருக்கும் பிற குளோபல் பண்ட் திட்டத்தில் ஒரு சந்தையில் மட்டுமே முதலீடு செய்யும் ஆனால் ஹெச்டிஎப்சி 5 நாடுகளைச் சார்ந்த பண்டுகளில் முதலீடு செய்கிறது. இது பெரும் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான நம்மை அளிக்கும்.
23 வளர்ந்த நாடுகள்
ஹெச்டிஎப்சி HDWI FoF திட்டம் மூலம் சுமார் 23 வளர்ந்த நாடுகளின் சந்தையில் முதலீடு செய்ய உள்ளது. இதில் அமெரிக்கச் சந்தையில் 67 சதவீதமும், ஐரோப்பிய சந்தையில் 19.1 சதவீதமும், ஜப்பான் 6.6 சதவீதமும், கனடா-வில் 3.3 சதவீதமும், பசிபிக் சந்தையில் 3.3 சதவீத தொகையும் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.
நவ்நீத் முனோட்
இதுகுறித்து ஹெச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நவ்நீத் முனோட் கூறுகையில், இந்தியாவில் இயங்கி வரும் குளோபல் முதலீட்டுத் திட்டங்களில் வேறு எந்தத் திட்டத்திலும் இல்லாத diversification இந்தத் திட்டத்தில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பங்குச்சந்தை
இன்று சர்வதேச பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்புகளைப் பல நிறுவனங்கள் அளித்தாலும், முதலீட்டுச் சந்தையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் அளிக்கும் திட்டத்தில் முதலீடு செய்வது மூலம் மக்களின் முதலீடு பாதுகாக்க முடியும்.
உஷாராக முதலீடு செய்ய வேண்டும்
முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் முன்பு திட்டம் குறித்து முழுமையாக அறிந்தபின்பு, ஆபத்து காரணிகளைப் புரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அனைத்து முதலீட்டாளர்களிடமும் தமிழ் குட்ரிட்டன்ஸ் கேட்டுக்கொள்கிறது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக் காரணமாகச் சர்வதேச சந்தைகள் பணவீக்கம், பொருளாதாரச் சரிவு எனப் பல வகையில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளும் வட்டியை உயர்த்துவது குறித்து முடிவுகளை அடுத்தடுத்து வெளியிட முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications