தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டில் தான் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது என்றால் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏறுமுகமாக தான் இருக்கிறது.
சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1.10 லட்சத்தை கடந்துவிட்டது. டிசம்பர் மாதத்தில் தான் ஒரு சவரன் தங்கம் விலை 1 லட்சத்தை கடந்தது அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த மாதத்திலேயே தங்கத்தின் விலை 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகிறது. இப்படி தங்கம் விற்கும் விலையை பார்க்கும் போது சாமானிய மக்கள் சவரன் சவரனாக நகை வாங்குவதெல்லாம் இனி எட்டாக்கனி தான்.

தங்கம் வாங்க வேண்டும் ஆனால் லட்சக்கணக்கில் பணம் இல்லை என்பவர்களுக்காகவே ஈடிஎஃப் திட்டங்கள் இருக்கின்றன. தங்கம் , வெள்ளி விலை உயர்வுக்கு ஏற்ப ஈடிஎஃப்களின் மதிப்பும் உயர்கின்றன. குறைந்தபட்சம் 110 ரூபாய் முதலே முதலீடு செய்ய முடியும்.நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய தகுந்த நான்கு ஈடிஎஃப் திட்டங்களை ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இதில் பணத்தை போட்டுவிட்டு முதலீட்டாளர்கள் தங்கம் விலை ஏறுகிறதா இறங்குகிறதா என்பதை பற்றி கவலையே படாமல் இருக்கலாம்.
எஸ்பிஐ கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடிட் ஸ்கீம் ( SBI Gold Exchange Traded Scheme): இதனை ஒரு பங்கின் விலை 117 ரூபாய் என வாங்க பரிந்துரை செய்கிறது. விரைவில் இதன் விலை 136 ரூபாயை எட்டும் என்றும் கணித்துள்ளது. டெக்னிக்கல் ஆய்வுகளின் படி இந்த ஈடிஎஃப் -இன் போக்கு தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் என்றே கூறுகிறது என தெரிவித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி கோல்டு ஈடிஎஃப் (HDFC Gold Exchange Traded Fund) : இந்த ஈடிஎஃப் பங்கினை 117 ரூபாய் என்ற விலைக்கு வாங்க பரிந்துரை செய்துள்ளது. தங்கம் விலை உயர உயர இதன் மதிப்பும் உயரும் என தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாகவே தங்க சந்தையே புல்லிஷ் மோடில் இருப்பதே இதற்கு காரணம்.
ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் சில்வர் ஈடிஎஃப் (ICICI Prudential Silver ETF) : தற்போது இதனை 240 ரூபாய்க்கு வாங்கலாம் என பரிந்துரை செய்கிறது. இந்த ஈடிஎஃப் மதிப்பு 300 ரூபாய் வரை உயரும் வாய்ப்புள்ளதாம். சர்வதேச காரணிகள், தொழில்துறை தேவை என வெள்ளிக்கான டிமாண்ட் இருந்து கொண்டே இருப்பதால் இதில் முதலீடு செய்யலாம் என பரிந்துரைக்கிறது.
ஹெச்டிஎஃப்சி சில்வர் ஈடிஎஃப் (HDFC Silver ETF): இந்த ஈடிஎஃப்பில் 236 ரூபாயில் முதலீடு செய்யலாம், இதன் மதிப்பு 290 ரூபாய் வரை உயரும் என கணித்துள்ளது. டெக்னிக்கல் ஆய்வுகள் இது தொடர்ந்து ஏறும் என்றே காட்டுவதாலும் உலக காரணிகள் சாதகமாக இருப்பதாலும் நம்பி முதலீடு செய்யலாம் என தெரிவித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications