இந்தியாவில், உத்தரவாதமான வருமானம் மற்றும் பாதுகாப்பு காரணமாக நிலையான வைப்புநிதி எனப்படும் Fixed Depositsகளில் தான் இன்றும் பலரும் பணத்தை போட்டு வைக்கின்றனர். மக்கள் மிகவும் விரும்பும் முதலீட்டு வழிகளில் ஒன்றாக இவை இருக்கின்றன.
தற்போது, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற பிரபலமான வங்கிகள் மூன்று ஆண்டு வைப்புநிதிகளுக்கு சுமார் 6.6% வட்டி விகிதத்தை வழங்குகின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சுமார் 6.15% வழங்குகிறது. இருப்பினும், 2025ஆம் நிதியாண்டில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் இந்த FD வட்டி விகிதங்களை விட அதிகமாக ஈவுத்தொகை (dividend) வருவாயை வழங்கியுள்ளன.

வேதாந்தா: வேதாந்தா நிறுவனம் 2025 நிதியாண்டில் பல இடைக்கால ஈவுத்தொகைகள் மூலம் ஒரு பங்குக்கு மொத்தம் ரூ. 43.50 ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. இது 9.8% ஈவுத்தொகை வருவாயை பிரதிபலிக்கிறது. இருப்பினும், 2023 மற்றும் 2024 நிதியாண்டுகளில் முறையே 29.7% மற்றும் 23% ஆக ஈவுத்தொகை வழங்கியுள்ளது அதனை விட இது குறைவு. கடந்த ஓராண்டில் இந்த பங்கு 1% உயர்ந்திருந்தாலும், கடந்த ஆறு மாதங்களில் 1.5% சரிந்துள்ளது.
ஜாக்ரன் பிரகாஷன்: ஜாக்ரன் பிரகாஷனின் ஈவுத்தொகை வருவாய் 2025ஆம் நிதியாண்டில் 8.32% ஆக இருந்தது. இது அதன் கடைசி ஈவுத்தொகை மற்றும் தற்போதைய பங்கு விலையான ரூ. 72.11 ஐ அடிப்படையாக கொண்டது. நிறுவனம் மே 2025 இல் ஒரு பங்குக்கு ரூ.6 இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்தது. இது அதன் வலுவான வருவாய்க்கு காரணமாக அமைந்தது. கடந்த ஓராண்டில் இந்த பங்கு 23% சரிந்திருந்தாலும், கடந்த ஆறு மாதங்களில் 5% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
MSTC: MSTC நிறுவனம் 2025ஆம் நிதியாண்டில் ஒரு பங்குக்கு கிட்டத்தட்ட ரூ. 40.50 ஈவுத்தொகையாக வழங்கியது. இது தற்போதைய சந்தை நிலவரப்படி சுமார் 7.5-8% ஈவுத்தொகை வருவாய் ஆகும். . கடந்த ஓராண்டில் இந்த பங்கு 25% வீழ்ச்சி அடைந்திருந்தாலும், கடந்த ஆறு மாதங்களில் 13% மீண்டு வந்துள்ளது.
PTC இந்தியா: PTC இந்தியா நிறுவனம் 2025ஆம் நிதியாண்டில் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு மொத்தம் ரூ.11.70 ஈவுத்தொகையை வழங்கியது. சுமார் ரூ. 174-175 சந்தை விலையில், இது 7.6-8% வருவாயை தருகிறது. கடந்த ஓராண்டில் இந்த பங்கு 27% சரிந்திருந்தாலும், கடந்த ஆறு மாதங்களில் 10% மீண்டுள்ளது.
கோல் இந்தியா: கோல் இந்தியா ஒரு பொதுத்துறை ஈவுத்தொகை ஜாம்பவான் என்ற நற்பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2025ஆம் நிதியாண்டில், இது ஒரு பங்குக்கு மொத்தம் ரூ.26.50 ஈவுத்தொகையை அறிவித்தது. இது 2024 நிதியாண்டில் ரூ.25.50 ஆக இருந்தது. இது சுமார் 7.1% வருவாயை அளிக்கிறது. கடந்த ஓராண்டில் இந்த பங்கு 18% சரிந்திருந்தாலும், கடந்த ஆறு மாதங்களில் 1% உயர்ந்துள்ளது.
இருந்தாலும் முதலீட்டாளர்கள் நிலையான வைப்புநிதிகளைப் போலன்றி, ஈவுத்தொகைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஈவுத்தொகைகள் நிறுவனத்தின் செயல்திறன், பணப்புழக்கம் அல்லது பரந்த பொருளாதார நிலைமைகளால் மாற்றத்துக்கு உட்பட்டது.
நிலையான வைப்புநிதிகளை விட அதிக வருமானத்திற்காக பங்குச் சந்தை அபாயத்தை ஏற்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, ஈவுத்தொகை வழங்கும் பங்குகள் ஒரு வலுவான வாய்ப்பாகவே இருக்கின்றன. வேதாந்தா மற்றும் கோல் இந்தியா பெரிய நிறுவனங்களில் ஸ்திரத்தன்மையை வழங்குகின்றன. அதே நேரத்தில் ஜாக்ரன் பிரகாஷன், MSTC மற்றும் PTC இந்தியா நடுத்தர நிறுவனங்களில் கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications