இந்திய குடும்பங்களில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு மற்றும் அவசர காலத்திற்கான பெரும் சேமிப்பு. ஆனால் உங்கள் வீட்டு லாக்கரில் பாதுகாப்பாக இருக்கும் அந்த தங்கத்தின் மீது இப்போது வருமான வரித் துறையின் (Income Tax) பார்வை விழுந்துள்ளது.
சமீப காலமாக தங்கம் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. குறிப்பாக 100 கிராம் என்ற வரம்பை தாண்டும்போது, நீங்கள் வருமான வரித் துறையின் ஸ்கேனருக்குள் வர வாய்ப்புள்ளதா? முறையான ரசீது அல்லது ஆவணங்கள் இல்லாமல் தங்கம் வைத்திருப்பவர்கள் மீது ஐடி (IT) துறை ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறது.

யார் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம், எப்போது நோட்டீஸ் வரும், மற்றும் உங்கள் சேமிப்பை பாதுகாப்பது எப்படி என்பது குறித்த முழுமையான A to Z தகவல்களை இந்த தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.
இந்திய குடும்பங்களை பொறுத்த வரை தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல. அது தலைமுறை தலைமுறையாக கைமாறும் ஒரு சென்டிமென்ட் சொத்து. திருமணம், விசேஷங்கள் என சிறுக சிறுகச் சேர்த்த தங்கத்தின் மீது இப்போது வருமான வரித்துறையின் பார்வை விழுந்துள்ளது.
உங்களிடம் 100 கிராமுக்கு மேல் தங்கம் இருந்து, அதற்குரிய முறையான ஆவணங்கள் இல்லையென்றால், வருமான வரித்துறை விசாரணையின் போது பல்வேறு கேள்விகள் எழக்கூடும். இந்தியாவில் தங்கம் என்பது வெறும் முதலீடாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அது தலைமுறை தலைமுறையாக கை மாறக்கூடிய, திருமணங்களின் போது பரிசளிக்கப்படக்கூடிய மற்றும் காலப்போக்கில் சிறுக சிறுகச் சேர்க்கப்படக்கூடிய ஒரு விலைமதிப்பற்ற சொத்தாக கருதப்படுகிறது. இருப்பினும் தங்கம் தொடர்பான வருமான வரி விதிமுறைகளை பொறுத்தவரை, பலருடைய மனதிலும் சில கேள்விகள் நீடிக்கின்றன. ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு ஏதேனும் வரம்பு இருக்கிறதா, ஒருவேளை அந்த வரம்பைத் தாண்டினால் என்ன நடக்கும்?
இந்தியாவில் ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சட்டப்பூர்வமாக எந்த உச்ச வரம்பும் இல்லை. நீங்கள் வாங்கிய தங்கத்திற்கான வருமான ஆதாரம் சரியாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் வைத்திருக்க முடியும். இருப்பினும் வருமான வரி சோதனையின் போது அதிகாரிகள் தன்னிச்சையாக பறிமுதல் செய்ய முடியாத சில வரம்புகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வகுத்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) சுற்றறிக்கையின்படி, ஒரு நபர் தனது வீட்டில் வருமான ஆதாரங்களை நிரூபிக்காமல் வைத்திருக்கக்கூடிய தங்கத்தின் அளவுகள் பின்வருமாறு;
திருமணமான பெண்கள்: 500 கிராம் வரை
திருமணமாகாத பெண்கள்: 250 கிராம் வரை
ஆண்கள் (திருமணமானவர் அல்லது ஆகாதவர்): 100 கிராம் வரை.
மேலே குறிப்பிட்ட அளவுக்குள் தங்கம் இருந்தால், வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்ய முடியாது.
ஒருவேளை உங்கள் வசம் இந்த வரம்புக்கு மேல் தங்கம் இருந்து, அதற்கான முறையான பில் அல்லது பணப்பரிமாற்ற ஆதாரங்கள் இல்லை என்றால், அந்த தங்கம் கணக்கில் வராத சொத்தாக கருதப்படும். உங்களுக்குப் பரம்பரை சொத்தாக தங்கம் வந்திருந்தாலோ அல்லது திருமணத்தின் போது பரிசாக கிடைத்திருந்தாலோ, அதை நிரூபிக்க உயில் அல்லது குடும்ப பெரியவர்களின் உறுதிமொழி போன்ற ஆவணங்கள் கைவசம் இருப்பது நல்லது.
கூடுதல் தங்கம் வைத்திருப்பது குற்றம் கிடையாது. ஆனால், அது எப்படி வந்தது (வாங்கியதா, பரிசா அல்லது பரம்பரைச் சொத்தா) என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அந்த நகை வாங்கியதற்கான பில்கள், உயில் ஆவணங்கள் அல்லது உங்கள் வருமான விவரங்களை கொண்டு விளக்கமளித்தால் எந்த பிரச்சனையும் வராது. நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவை விட, அது எந்த பணத்தில் வாங்கப்பட்டது என்பதை நிரூபிப்பதே மிக முக்கியம்.
தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை?
வருமான வரிச் சட்டப்படி, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொடுத்து நகை வாங்க முடியாது. அப்படியே 2 லட்சம் ரூபாயை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சமர்ப்பிப்பது கட்டாயம். நகைக் கடைக்காரர்கள் உங்கள் விவரங்களை பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என்பது விதி.
தங்கம் விலை ஏறிக் கொண்டே இருப்பதால், சிறிய அளவில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு பெரிய ஆவணங்கள் தேவையில்லை. ஆனால் அதிக அளவில் தங்கம் வைத்திருப்பவர்கள், வருங்கால சிக்கல்களை தவிர்க்க அதன் ஆதாரங்களை (பில்கள் அல்லது உயில்) பத்திரமாக வைத்திருப்பது அவசியமாகும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி



Click it and Unblock the Notifications