Home Loan EMI: வெறும் ரூ.1,000 போதும்..!! லட்சக்கணக்கில் சேமிக்கலாம் தெரியுமா?

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் சொந்த வீட்டு கனவினை வங்கிகள் வழங்கும் வீட்டு கடன்கள் தான் நனவாக்குகின்றன. ஆனால் வீட்டு கடன் என்பது ஒரு டிராப் ஏனெனில் அதன் பின்னர் குறைந்தது 20 ஆண்டுகளுக்கு ஹோம் லோன் ஈஎம்ஐ செலுத்தவே நீங்கள் ஓட வேண்டி இருக்கும்.

வீட்டு கடன் வாங்கிய பெரும்பாலானவர்கள் மாதம் ஈஎம்ஐ கட்டுவார்கள் ஆனால் கடன் மட்டும் குறையவே குறையாது. வீட்டு கடனை திரும்ப செலுத்துவதில் சில டிரிக்குகள் இருக்கின்றன. இவற்றை ஃபாலோ செய்தால் முன்கூட்டியே கடனையும் செலுத்தலாம், பல லட்சங்களையும் சேமிக்கலாம்.

Home Loan EMI: வெறும் ரூ.1,000 போதும்..!! லட்சக்கணக்கில் சேமிக்கலாம் தெரியுமா?

இன்றைய சராசரி வட்டி விகிதமான 8.5%ஐ கொண்டு கணக்கு செய்தால், 50 லட்சம் ரூபாய் வீட்டு கடனுக்கு 20 ஆண்டுகள் காலத்தில் வட்டியாக மட்டும் சுமார் 54.13 லட்சம் ரூபாய் செலுத்த நேரிடும். அதாவது, வாங்கியது 50 லட்சம் ஆனால் திரும்ப செலுத்தியது வட்டியோடு சேர்த்து 1.04 கோடி ரூபாய்.

இந்நிலையில், உங்களது வீட்டு கடனுக்கான ஈஎம்ஐ தொகையை வெறும் 1,000 ரூபாய் கூடுதலாக உயர்த்தினால் போதும், வட்டி சுமையை கணிசமாக குறைப்பதோடு, கடன் செலுத்தும் கால அளவையும் குறைக்கலாம் என நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.

கார்மிகா வெல்த் மென்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கிராங் காந்தி அளித்துள்ள பேட்டியில், 8.5% வட்டி விகிதத்தில், 20 ஆண்டுகள் காலக்கெடுவிற்கு 1 கோடி ரூபாய் வீட்டு கடன் பெறப்பட்டது என வைத்துக்கொள்வோம். இதற்கு மாதம்தோறும் செலுத்த வேண்டிய ஈஎம்ஐ தோராயமாக 86,782 ரூபாய்.

Also Read

இந்த ஈஎம்ஐ தொகையை வெறும் 1,000 ரூபாய் அதிகரித்து, 87,782 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்கிறார். அந்த வகையில் இந்த சிறிய மாற்றத்தின் மூலம், கடன் செலுத்தும் காலமானது சுமார் 7 மாதங்கள் குறையும், அதாவது 240 மாதங்களுக்கு பதிலாக 233 மாதங்களிலேயே கடன் அடைபட்டுவிடும் என்கிறார்.

இதன் மூலம் வட்டி தொகையில் மட்டும் சுமார் 3.74 லட்சம் ரூபாய் வரை மிச்சமாகும் என கூறுகிறார். சிறிய அளவிலான வீட்டு கடன்களை பெற்றிருப்பவர்களுக்கு இந்த 1,000 ரூபாய் கூடுதல் ஈஎம்ஐ முறை இன்னும் அதிக பலனை தரும் அதாவது வட்டி சேமிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என கூறுகிறார்.

Recommended For You

கடன் திரும்ப செலுத்தும் போது ஆரம்ப கட்டங்களில்தான் ஈஎம்ஐ-இல் வட்டி பகுதி அதிகமாக இருக்கும். எனவே, முன்கூட்டியே அல்லது கடனின் தொடக்க காலத்திலிருந்தே கூடுதல் ஈஎம்ஐ அல்லது Pre-payment ஐ தொடங்குவது அதிகப்படியான வட்டி சேமிப்பை தரும் என்பதால் முன்கூட்டியே தொடங்கினால் தான் முழு பலனை அடைய முடையும் என சுட்டிக்காட்ட்டுகிறார்.

கையில் ரொக்கமாக பணம் வருகிறது, போனஸ் வருகிறது , சம்பளம் உயர்வு, அரியர் பணம் வருகிறது என்பன போன்ற சமயங்களில் அந்த பணத்தை கொண்டு வீட்டு கடனை ப்ரீ பேமெண்ட் செய்யும் போது அசல் தொகை குறைந்து நீண்ட கால அடிப்படையில் பெரிய சேமிப்பை தரும் என யோசனை கூறுகிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+