எல்லாருக்குமே சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற நியாயமான கனவு இருக்கும். இன்றைய ரியல் எஸ்டேட் விலை மற்றும் குடும்ப செலவுகளுக்கு மத்தியில் காசு சேர்த்துதான் வீடு கட்ட வேண்டும் என்றால் அது மிக கடினம். எனவே வீட்டுக் கடன் வாங்காமல் சொந்த வீடு கனவை நிறைவேற்றுவது சாத்தியமில்லை.
வீட்டை வாங்குவதற்கு கடன் பெறுவது ஒரு வசதியான வாய்ப்பாகும். வீட்டுக் கடன் விண்ணப்பிக்கும் போது டவுன் பேமண்ட் அதிகமாக வைத்திருந்தால், உங்கள் வீட்டுக்கான விலையை கணிசமாக குறைக்கும் மற்றும் முடிந்த அளவுக்கு முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்தினாலும் வீட்டுக் கடனுக்கான தவணை காலம் குறைவதோடு வட்டியும் குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

பேசிக் ஹோம் லோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான அதுல் மோங்கா கூறுகையில், பெரிய டவுன் பேமெண்ட்டுடன், நீங்கள் கடனளிப்பவரிடமிருந்து ஒரு சிறிய கடனை மட்டுமே எடுக்க வேண்டும். இதன் விளைவாக உங்கள் கடன் காலத்தில் குறைவான வட்டி மட்டுமே செலுத்தவீர்கள்.
உங்கள் இ.எம்.ஐ.களில் அசல் தொகை குறைக்கப்படுவதால் அவை மிகவும் மலிவானதாக மற்றும் நிர்வகிக்கக்கூடியதாக மாறும். ஒரு வீட்டை வாங்கும் போது கணிசமான டவுன் பேமெண்ட் செலுத்துவது உங்கள் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை வலுப்படுத்தும்.
ஒரு கணிசமான டவுன் பேமெண்ட் உங்கள் நிதி ஒழுக்கம் மற்றும் பொறுப்பை நிரூபிக்கிறது. இதன் விளைவாக, கடனை திருப்பி செலுத்துவதில் உறுதியான இருக்கும் ஆபத்தில்லாத வாடிக்கையாளர் என்று உங்களுக்கு கடன் வழங்குவர் ஆர்வத்துடன் செய்து கொடுப்பார் என்று தெரிவித்தார்.
Intrinsic Value Equity Advisors நிறுவனத்தின் நிறுவனர் நிகில் கங்கில் தனது அனுபவத்தை கூறுகையில், கோவிட் காலத்தில் ஒரு பிரபல வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினேன். அப்போது நான் 6.85 சதவீத வட்டியில் வீட்டு கடன் பெற்று இருந்தேன். அது மொத்தம் 240 மாத கால கடனாக இருந்தது. இடையில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை உயர்த்தியதால், வட்டி விகிதம் 9.35 சதவீதமாக உயர்ந்தது.
இதனையடுத்து வங்கி மாதந்திர தவணை தொகையை அதிகரிப்பதற்கு பதிலாக தவணை காலத்தை 370 மாதங்களாக உயர்த்தியது. இதனையடுத்து கடனை முன்கூட்டியே திரும்ப செலுத்த முடிவு செய்தேன். 5 மாத இடைவெளியில் 20 இ.எம்.ஐ. மற்றும் 16 இ.எம்.ஐ.களை செலுத்தினேன்.
மொத்தம் 36 இ.எம்.ஐ.க்களை முன்கூட்டியே செலுத்தியதால், அது அசலில் இருந்து கழிக்கப்பட்டது. இதனால் எனது தவணைகாலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது, சற்று அதிகரிக்கப்பட்ட இ.எம்.ஐ.வுடன், எனது தவணைகாலம் 121 மாதங்களாக உள்ளது.
ஏனென்றால் வங்கிகள் 75 சதவீத வட்டியை வசூலிக்கும்போது நான் எனது முதல் 3 வருட கடனில் இருப்பதால் இது முக்கியமாக நடந்தது. ஒவ்வொரு இ.எம்.ஐ.யிலும் 25 சதவீதம் தான் அசல் கழிகிறது. கடன்கள் இப்படித்தான் செயல்படுகிறது. வங்கிகள் முதல் 5 முதல் 7 ஆண்டுகளுக்கு தங்களால் இயன்ற வட்டியை எடுத்துக் கொள்கிறார்கள்.
7 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் உங்கள் கடனை முன்கூட்டியை செலுத்தினாலும் அது அவர்களின் (வங்கிகள்) வருமானத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதனால் உங்களால் முடிந்தவரை முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்துங்கள் என்பதே என் ஆலோசனை என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications