நாடு முழுவதுமே வீடு, நிலம் உள்ளிட்டவற்றின் விலைகள் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. தற்போது பெரும்பாலானவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்கின்றனர்.
இப்படி நகரங்களில் வேலைக்காக வருபவர்கள் இங்கேயே வாழ்க்கை துணையையும் தேடிக்கொண்டு செட்டில் ஆகிவிடுகின்றனர். ஆனால் இவ்வாறு நகர் பகுதிகளில் வசிக்கக்கூடிய பெரும்பாலான தம்பதிகளுக்கு ஒரு பெரிய குழப்பம் இருக்கிறது. தங்களுக்கான சொந்த வீட்டினை நகரத்தில் வாங்குவதா அல்லது தங்களுடைய சொந்த ஊரில் வாங்குவதா என்ற குழப்பம் இருக்கிறது.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவு, நம் பல ஆண்டுகால சம்பளத்தை இதற்காக நாம் தர வேண்டி இருக்கிறது. எனவே தான் வீடு வாங்குவது நமக்கு லாபமாகவும் இருக்க வேண்டும் அதே சமயத்தில் அது வளர்ச்சி அடையும் ஒரு சொத்தாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஒரு வேளை உங்களின் சொந்த ஊரில் நீங்கள் ஒரு நிலமோ அல்லது வீடோ வாங்குகிறீர்கள் என்றால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களாகவும் சொந்தக்காரர்களாகவும் உங்களுடைய கலாச்சார பழக்க வழக்கங்களுக்கு ஒத்துப்போனவர்களாகவும் இருப்பார்கள். சொந்த ஊருக்கான உங்களின் தொடர்பு நீடித்து கொண்டே இருக்கும்.
பெற்றோர், உற்றார் உறவினர்கள் இருப்பார்கள் என்பதால் சொத்தினை வாங்கும் போது ஏமாறமாட்டீர்கள், அந்த சொத்தினை மேலாண்மை செய்வது எளிது, ஒரு வேளை இடமாக வாங்கி நீங்கள் வீடு கட்டினால் உங்களுக்கு பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும்.
ஆனால் இது ஒரு முதலீடாக பார்க்கும் போது வளர்ச்சி அடையுமா இல்லையா என்ற கேள்வி இருக்கிறது. சொந்த ஊரில் வாங்கக்கூடிய வீடு அல்லது நிலம் உங்களுக்கு பாதுகாப்பான முதலீடாக இருக்கலாம் ஆனால் வேகமான வளர்ச்சி அடையாது. நகர்ப்புறங்களில் நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் பெருக்கத்திற்கு ஏற்ப ரியல் எஸ்டேட் மதிப்பு வேகமாக வளர்கிறது. அந்த அளவுக்கு வளர்ச்சி சொந்த ஊரில் இருக்காது. அதாவது நகர்ப்புறங்களில் சொத்தின் மதிப்பு உயர்வதை போல சொந்த ஊரில் உயராது.
நகரங்களில் வீடு வாங்கினால் அதன் மதிப்பு வேகமாக உயரும். ஆனால் நகர்ப்புறங்களில் நீங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தது ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இடம் வாங்கி வீடு கட்டுவது என்றாலும் கணிசமான தொகை தேவைப்படும். ஆனால் அதே பணத்திற்கு சொந்த ஊரில் மாட மாளிகையே கட்டலாம்.
ஆனால் சொந்த ஊரில் வீடு கட்டினால் உங்களால் அங்கே சென்று வசிக்க முடியாது. நகரத்தில் நீங்கள் வீட்டு வாடகை கொடுத்தே ஆக வேண்டும். எனவே தான் சொந்த வீடு வாங்கும் முடிவை எடுக்கும் போது எதிர்காலத்தில் எங்கே செட்டிலாக போகிறீர்கள், குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி திட்டமிடப் போகிறீர்கள், உங்களின் தற்போதைய நிதி நிலவரம் என்ன என்பதை அடிப்படையாக கொண்டு முடிவெடுப்பது தான் சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications