தங்க நகையை விடுங்க!! இப்படி தங்கம் வாங்கி இருந்தாலே லட்சாதிபதி ஆகி இருக்கலாம்!!

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல்களும் காரணிகளும் இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டன. 2025 ஆம் ஆண்டு தொடங்கிய போது தங்கம் விலை இப்படி வரலாறு காணாத உச்சத்தை எட்டும் என நாம் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம்.

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ஆயிரம் ரூபாயை கடக்கும் , ஒரு பவுன் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாயை கடக்கும் என சாமானிய மக்கள் எண்ணியிருக்க மாட்டார்கள். ஆனால் அது இந்த ஆண்டு நடந்திருக்கிறது. தங்கம் விலை உயர்வு என்பது தங்க ஈடிஎஃப் திட்டங்களின் மதிப்பையும் பெருமளவு உயரச் செய்திருக்கிறது.

தங்க நகையை விடுங்க!! இப்படி தங்கம் வாங்கி இருந்தாலே லட்சாதிபதி ஆகி இருக்கலாம்!!

லட்சக்கணக்கில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து தங்கம் வாங்க முடியாது ஆனாலும் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பவர்களுக்கான சிறந்த வாய்ப்பாக கோல்டு ஈடிஎஃப் (Gold exchange traded funds) செயல்படுகின்றன. இதில் குறைந்தபட்சம் 90 ரூபாய் முதலே நம்மால் முதலீடு செய்ய முடியும். தங்கத்தின் விலை ஏற ஏற இந்த ஈடிஎஃப் திட்டங்களில் நாம் செய்யும் முதலீடும் படிப்படியாக வளர்ந்து வரும்.

பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி வைத்தது , கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டுகளில் குவிந்த முதலீடுகள், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிக் குறைப்பு நடவடிக்கை தொடர்பான எதிர்பார்ப்பு , பல்வேறு நாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் மோதல்கள் ஆகியவை தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றன.

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் 2190 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலேயே அதிகபட்ச முதலீடாக இது சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் கோல்டு ஈடிஎஃப்களில் இருந்து பெருமளவிலான பணம் திரும்ப எடுக்கப்பட்ட நிலையில் முதலீடு வரவு என்பது அதிகரித்து ஆகஸ்ட் மாதம் உச்சத்தை எட்டி இருக்கிறது. தங்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து இருப்பதே இதற்கு முக்கிய காரணம் .இந்தியாவில் தற்போது முன்னணியில் இருக்கக்கூடிய சில கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் குறித்தும், அவை இந்த ஓராண்டு காலத்தில் அளித்த லாபம் குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஹெச்டிஎப்சி கோல்ட் ஈடிஎஃப்: தேசிய பங்குச்சந்தை களத்தில் வெளியிட்டிருக்கும் தகவலின்படி பார்க்கும்போது ஹெச்டிஎப்சி கோல்ட் ஈடிஎஃப் கடந்த ஓராண்டு காலத்தில் 48.28% உயர்ந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 103 சதவீதம் இதன் மதிப்பு உயர்வு கண்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் இந்த கோடி மதிப்பு 41.91% அதிகரித்து இருக்கிறது. இந்த ஒரு மாத காலத்திலே கூட இதன் மதிப்பு சுமார் 10 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது . தற்போது சந்தையில் ஹெச்டிஎப்சி கோல்ட் ஈடிஎஃப்-இன் ஒரு யூனிட் மதிப்பு 94. 20 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

நிப்பான் இந்தியா கோல்டு ஈடிஎஃப்: கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மதிப்பு 102 சதவீதம் அதிகரித்து இருக்கிறது . கடந்த ஓராண்டு காலத்தில் 48.15 சதவீதமும், 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை சுமார் 42 சதவீதமும் உயர்வு கண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று வர்த்தக முடிவின் போது நிப்பான் இந்தியா கோல்ட் ஈடிஎஃப் திட்டத்தின் ஒரு பங்கு மதிப்பு 91 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.

ஆக்சிஸ் கோல்டு ஈடிஎஃப்: அடுத்ததாக ஆக்சிஸ் கோல்டு ஈடிஎஃப் மதிப்பு தற்போது 92.12 ரூபாய் என இருக்கிறது .2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை இந்த பங்கு சுமார் 42% உயர்ந்திருக்கிறது . கடந்த ஓராண்டு காலத்தில் என பார்க்கும்போது 49 சதவீதமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 105 சதவீதமும் லாபம் தந்து இருக்கிறது.

யூடிஐ கோல்டு ஈடிஎஃப்: இந்த திட்டத்தை பொருத்தவரை 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை 43 சதவீதமும் கடந்த ஓராண்டு காலத்தில் 49 சதவீதமும் லாபம் தந்திருக்கிறது கடந்த ஐந்து ஆண்டுகள் என பார்க்கும்போது இதன் மதிப்பு சுமார் 99 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது. இது தற்போது 92.70 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது.

பொதுவாகவே இந்திய சந்தையில் தங்கம் சார்ந்த இந்த ஈடிஎஃப் திட்டங்கள் அனைத்துமே சராசரியாக கடந்த ஓராண்டு காலத்தில் 49 சதவீத லாபத்தை பதிவு செய்திருக்கின்றன. அதேபோல 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரையிலான இந்த ஒன்பது மாத காலத்தில் சராசரியாக 42 சதவீத லாபத்தை பெற்று தந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு கோல்ட் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு ஆண்டாக அமைந்திருக்கிறது. அதாவது ஜனவரி 1ஆம் தேதி இவற்றில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 1.42 லட்சம் ரூபாய் என உயர்வு கண்டிருக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+