இந்தியாவில் தங்கத்தின் மீது கடன் வாங்குவது என்பது மிக எளிமையான ஒன்று. வங்கிகள் ,நிதி நிறுவனங்கள் அல்லது வீட்டுக்கு அருகே இருக்கக்கூடிய அடகு கடைகள் ஆகியவற்றுக்கு சென்று எளிதாக நம்முடைய அவசர தேவைக்கு பணமாக மாற்றக்கூடிய பொருளாக தங்கம் இருக்கிறது.
தங்க நகை கடன்: இதனால் தான் சாதாரண மக்கள் கையில் பணம் வரும் போதெல்லாம் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஏனெனில் அவசரகால நிதி தேவைக்கு இந்த தங்கம் தான் அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியிலேயே கடன் கிடைக்கும் அதுவும் உடனடியாக கிடைத்துவிடும்.

ஏன் தங்க கடன் எளிது: பெர்சனல் லோன்களோடு ஒப்பிடும் போது கோல்டு லோன்கள் சாமானிய மக்களுக்கும் சரி, கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் சரி சாதகமாக இருக்கின்றன. சாமானிய மக்களுக்கு பெரிய அளவில் பேப்பர் வொர்க் இல்லாமல் நகையை மட்டும் கொண்டு சென்றாலே போதும் கை மேல் பணம் வந்துவிடும். கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மதிப்பு மிக்க ஒரு பொருள் கிடைக்கிறது. தங்கம் என்பதால் நிச்சயம் அவர்கள் கடனை திரும்ப செலுத்தி மீட்டு கொள்வார்கள் இல்லை என்றாலும் கவலையில்லை வங்கிகள் அந்த நகையை ஏலம் விடுத்து விட்ட தொகையை பெற்று கொள்ளும்.
இந்தியாவில் அதிகம்: தங்க நகை கடன் என்பது மிகப்பெரிய ஒரு மாய வலை. நம்மில் பெரும்பாலானவர்கள் அதனை புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் என்பது தான் உண்மை. அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு தகவலில் இந்தியாவில் தங்கத்தின் மீது கடன் வாங்கும் போக்கு இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாக கூறுகிறது . அதாவது இந்தியாவில் தங்க கடன் போர்ட்போலியோவின் மதிப்பு 1.7 லட்சம் கோடி ரூபாய் என தெரிவிக்கிறது.
உண்மை என்ன: இந்தியாவில் மற்ற கடன்களை தாண்டிலும் தங்கத்தின் மீது கடன் வாங்குவது இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஏனெனில் இவ்வகை கடன் மக்களுக்கு எளிமையாக கிடைக்கிறது என்பது முக்கிய காரணம். ஆனால் இது தான் அந்த குடும்பத்தின் செல்வத்தையே அவர்களுக்கே தெரியாமல் அழித்து வருகிறது என்பதை பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்வது கிடையாது.
மாயவலை: ஒரு குறுகிய கால தேவைக்காக நாம் அடகு வைக்கக்கூடிய தங்கம் பின்னர் நம் கையை விட்டே கூட சென்று விடக் கூடிய நிலை உண்டாகிவிடுகிறது. மிடில் கிளாஸ் குடும்பங்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவார்கள் அதற்கான வட்டியை செலுத்துவார்கள் ஓராண்டு காலம் முடிந்த உடனே ஆர்பிஐ விதிமுறைப்படி அவர்கள் அந்த கடன் தொகையை செலுத்தி தங்க நகையை மீட்டெடுக்க வேண்டும், ஆனால் அவர்களிடம் அவ்வளவு பணம் இருக்காது.

மிடில் கிளாஸ் நிலை: மீண்டும் அந்த தங்க நகை கடனை புதுப்பிப்பார்கள், அதாவது தங்கத்தை எடுத்து விட்டு உடனடியாக அடகு வைத்து பணம் வாங்குவார்கள். போன முறையை விட இந்த முறை தங்கத்தின் விலை உயர்வு காரணமாக அதிக தொகை கடனாக கிடைக்கும். ஆனால் அதற்கு ஏற்ப நீங்கள் செலுத்தும் வட்டியும் அதிகமாக இருக்கும். இதற்கு ஏற்றபடி உங்கள் வருமானம் உயர்ந்திருக்கிறதா என்றால் இருக்காது. இந்த வட்டிக்காக நீங்கள் கூடுதலாக பணம் ஒதுக்கிட வேண்டும். இப்படி தங்க நகை கடன் என்பது ஒரு முடியாத விஷயமாக தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால் தான் இந்தியாவில் தங்க கடன் என்பது வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு வணிகமாக மாறி இருக்கிறது.
வங்கிகளுக்கு பிரச்சினை இல்லை: கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு நீங்கள் கடனை திரும்ப செலுத்தவில்ல என்றாலும் பிரச்சினை இல்லை, ஏனெனில் தங்கத்தை ஏலத்தில் விட்டு அந்த பணத்தை அவர்கள் மீட்டுக் கொள்வார்கள். ஆனால் நகையை அடகு வைத்த உங்களுக்கு அது ஒரு நிரந்தர இழப்பு, பல ஆண்டுகால சேமிப்பு அல்லது கடந்த தலைமுறை இடமிருந்து உங்களிடம் வந்த சொத்து.
நகையே கைவிட்டு போய்விடும்: தங்க நகை கடன் என்பது தொடக்கத்தில் எளிமையானதாக தோன்றினாலும் , அந்த எளிமை என்ற ஒரு விஷயம் தான் மீண்டும் மீண்டும் உங்களை அடகு வைத்து மீண்டும் மீண்டும் உங்களை கடனாளியாக மாற்றி கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த தங்கத்தின் மதிப்பை விட நீங்கள் திரும்ப செலுத்திய வட்டியே அதிகமாக இருக்கும். இறுதியில் அந்த நகையே உங்களிடமிருந்து கைவிட்டு செல்லும் சூழலுக்கு கொண்டு சென்று விடுகிறது.
எதற்காக அடகு வைக்க கூடாது: மாதம்தோறும் வரக்கூடிய உங்களுடைய செலவுகளுக்காக தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவது முட்டாள்தனம். குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் , வீட்டின் மாதாந்திர செலவுக்கு , வீடு வாடகை செலுத்துவது , மற்ற கட்டணங்களை செலுத்துவதற்கு தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குகிறீர்கள் என்றால் நிச்சயம் உங்களால் அந்த தங்கத்தை மீட்டெடுக்கவே முடியாது. திரும்பத் திரும்ப அடகு வைத்து அடகு வைத்து கடன் வாங்குவீர்கள்.
இந்த காரணத்துக்கு அடகு வைக்காதீர்கள்: தொழிலில் ஏற்கனவே நஷ்டமடைந்து இருக்கிறீர்கள் எனும் போது உடனடியாக கையில் இருக்கும் நகையை அடகு வைத்து அதே தொழிலில் கண்மூடித்தனமாக முதலீடு செய்வதும் சரியான முடிவு அல்ல. தொழிலும் நஷ்டமாகி நகையும் கைவிட்டு போய்விடும். எனவே வணிகர்கள் தங்க நகை அடகு வைக்கும் முன்பு ஒரு முறைக்கு பல முறை சிந்திப்பது கட்டாயம்.அதே போல பங்குகளில் முதலீடு செய்வதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் தங்கத்தை அடகு வைப்பது மிகப்பெரிய முட்டாள் தனம். முதலீடு தோல்வியடைந்து விட்டால் இந்த தங்கம் உங்கள் கையை விட்டுப் போய்விடும் .
எதற்கு அடகு வைக்கலாம்: அப்படி என்றால் எதற்காக தான் தங்கத்தை அடகு வைப்பது என்ற கேள்வி எழலாம். மிக மிக அவசரமான ஒரு மருத்துவ தேவை இருக்கிறது அதற்கு பணம் வேண்டும் வேறு எந்த வழிகளிலும் எனக்கு பணம் கிடைக்கவில்லை என்கின்ற சூழலில் மட்டும் நகையை அடகு வைத்து பணமாக்குங்கள். என்னிடம் முறையான வருமானம் இருக்கிறது, வேறு கடன் எதுவும் இல்லை நிச்சயம் பட்ஜெட் போட்டு நகையை மீட்டு விடலாம் என்ற சூழல் இருந்தால் அடகு வையுங்கள்.
மீண்டும் வாங்க முடியுமா?: ஏனெனில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கும் இந்த காலச்சூழலில் ஒரு பவுன் நகை வாங்க நாம் குறைந்தது 90,000 ரூபாய் செலவிட வேண்டும். அப்படி மதிப்பு மிக்க தங்கத்தை உடனே கடன் கிடைக்கிறது என்பதற்காக அடகு வைத்து பணமாக்கி கொள்வதும், அளவுக்கு மீறி நகை கடன் வாங்குவதும் உங்களிடம் இருக்கும் மதிப்பு மிக்க செல்வத்தையே இழக்க செய்து விடும். மீண்டும் உங்களால் புதிதாக அந்த அளவு தங்க நகையை வாங்கவே முடியாது என்பது தான் கசப்பான உண்மை.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications